DRC மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பெண்கள் மேம்பாடு குறித்த அப்துல்-பஹாவின் அழைப்பின் மீது பிரதிபலிக்கின்றனர்8 அக்டோபர் 2021


பராக்கா, காங்கோ ஜனநாயக குடியரசு, 31 ஆகஸ்ட் 2021, (BWNS)-பராக்கா மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பல தசாப்த காலமாக இப்பகுதியின் பஹாய்கள் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மேற்கொண்ட முயற்சிகளின் மூலம் பெறப்பட்ட பெண்களின் முன்னேற்றம் பற்றிய நுண்ணறிவுகளை ஆராய்ந்திட சமீபத்தில் ஒன்றுகூடினர்.

அப்துல்-பஹா மறைந்த நூறாவது ஆண்டை முன்னிட்டு நான்கு நாள் ஒன்றுகூடல் நடைபெற்றது. அதில் அதிகாரிகள், அம்மண்டலத்தின் பாரம்பரிய தலைவர், மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமயங்களின் நம்பிக்கையாளர்களும் உள்டங்குவர்.

செய்தி சேவையுடன் பகிரப்பட்ட கருத்துகளில், பராகாவின் துணை மேயர் எமரைட் தபிஷா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பெண்கள் இல்லாமல், அமைதியை அடைய முடியாது—குடும்பத்திலும் சரி சமூகத்திலும் சரி, அதற்கான சாத்தியம் கிடையாது. ஆதலால், இந்த ஒன்றுகூடலினால் நான் மனம் நெகிழ்ந்தேன். சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என கருதும் இதுபோன்ற ஆழமான விவாதங்களை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

விவாதங்கள் ‘அப்துல்-பாஹாவின் வாழ்க்கை மற்றும், பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்த, பணிகளில் இருந்து உத்வேகம் பெற்றன. பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை “மனிதகுலம் என்னும் பறவை உயரப் பறப்பதற்குத் தேவைப்படும் இரண்டு சிறகுகளுடன்” ஒப்பிட்டார், மற்றும் இது ஓர் அமைதி கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் பெண்களின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

கூட்டத்தின் நாள்களில், பதின்ம கணக்கான கிராமங்கள் மற்றும் அண்டைப்புறங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வளமான மற்றும் அமைதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் இடையிலான உறவை ஆராய்ந்த, அதே நேரத்தில் சமூக நடவடிக்கைகளின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டனர்.

மாநாட்டை ஏற்பாடு செய்த பராக்காவின் பஹாய் மகளிர் செயற்குழுவின் உறுப்பினர் கிறிஸ்டின் ருசியா கிஸா கூறுகிறார்: “பராக்காவின் ஸ்தாபனங்களும் முகவாண்மைகளும்  மனிதகுலத்தின் ஒற்றுமை மற்றும் பெண்  ஆண் சமத்துவம் பற்றிய ஆன்மீகக் கொள்கைக்கான அவற்றின் கடப்பாட்டிற்கு இந்த மாநாடு ஒரு சான்றாகத் திகழ்கின்றது.

கூட்டத்திற்கான ஒற்றுமைப்படுத்தும் அணுகுமுறையை அவர் தொடர்ந்து விவரிக்கிறார்: “பல பெண்களும் ஆண்களும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயதிற்கான சேவை குறித்து சிந்தனைமிக்க உரைகளை வழங்கினர். இளம் பங்கேற்பாளர்களும் தங்கள் முன்னோக்குகளை வழங்கியதுடன் கூட்டத்தின் உற்சாகத்தையும் மகிழ்ச்சிமிகு மனநிலையையும் பெரிதும் மேம்படுத்தினர். பல்வேறு சமய சமூகங்களைச் சேர்ந்த உள்ளூர் பாடகர் குழுக்கள், குறிப்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் கருப்பொருள்கள் மீது அமைக்கப்பட்ட பாடல்களால், ஆன்மீக சூழ்நிலையை அதிகரித்தனர்.

துணை மேயர் தபிஷா கூட்டத்திற்குத் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்: “நான் பெண்கள் இயக்கத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவள், இங்கு உரையாடல்களிலிருந்து மேலும் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்,” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறுகிறார்: “சமாதானத்தையும் பெண்ணின் அந்தஸ்தையும் ஊக்குவிக்கும் பஹாய் கொள்கைகள் நமது சமூகத்தின் தார்மீக வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால் நாம் ஏற்கனவே முழு சமத்துவத்தை அடைந்திருப்போம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1529/