“ஓர் ஐரோப்பிய தலைநகரில் ஜப்பானிய தூதர் (விஸ்கவுண்ட் அராவாக்கா – மாட்ரிட்) ஓட்டல் டி’இயெனா-வில் (பாரிஸ்) தங்கியிருந்தார். இந்தக் கனவானிடமும் அவரது மனைவியிடமும் ‘அப்துல்-பஹா பாரிஸில் இருப்பதைப் பற்றி கூறப்பட்டது. அந்தத் தூதரின் மனைவி அப்துல்-பஹாவைச் சந்திக்கும் பாக்கியம் பெற மிகவும் ஆர்வமாக இருந்தார்.
“எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது, என “மேன்மை தங்கிய தூதரின் மனைவி கூறினார்.” என் ஜலதோஷம் கடுமையாக இருப்பதால் இன்று மாலை நான் வெளியே செல்லக்கூடாது. அதிகாலையில் நான் ஸ்பெயினுக்குப் புறப்படுகிறேன். அவரைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தால்”, என்றார்.
இவ்விஷயம், நாள் முழுவதுமான நிகழ்ச்சிகளினால் மிகுந்த களைப்புடன் அப்போதுதான் திரும்பியிருந்த மாஸ்டரவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
“அந்தத் திருவாட்டி-யிடமும் அவரது கணவரிடமும், அவர் இங்கு வருவதற்கு இயலாத நிலையில் நானே அவர்களைச் சென்று சந்திப்பேன் எனக் கூறுங்கள்” என்றார் அப்துல்-பஹா.
அதன்படி, பொழுது சாய்ந்து, நாழிகையாகியிருந்த போதும், அந்தக் குளிரிலும் மழையிலும், மரியாதை கலந்த புன்னகையுடன், ஓட்டல் டி’ஜெனா-வில் எல்லாரையும் மகிழ்விக்கும் விதத்தில் அப்துல்-பஹா வருகையளித்தார்.
“அப்துல்-பஹா, தூதரிடமும் அவரது மனைவியிடமும் ஜப்பான் நாட்டின் நிலைமைகள் குறித்து உரையாடினார்; அந்த நாட்டின் பெரும் சர்வதேச முக்கியத்துவம், மனிதகுலத்திற்கான பரந்த சேவை, போரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவேண்டியதன் அவசியம், சிறுவர்களுக்கு–ஆண் மற்றும் பெண்–சமமாக கல்வி யூட்டவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். “மதங்களில் பொதிந்துள்ள இலட்சியம் மனிதகுல நன்மைக்கான எல்லா திட்டங்களுக்கும் ஆன்மா போன்றதாகும். கட்சி அரசியல்வாதிகள் ஒருபோதும் மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. கடவுளுடைய அரசியல் மிகவும் வலிமையானது, மனிதனின் அரசியலோ பலவீனமானது”.

“மதம் மற்றும் அறிவியல் பற்றி பேசுகையில், அவை இரண்டும் மனித இனம் எனும் பறவை உயரப் பறக்கக்கூடிய இரு பெரும் இறக்கைகளாகும் மற்றும்”அறிவியல் கண்டுபிடிப்புகள் லௌகீக நாகரிகத்தை அதிகரித்துள்ளன, என்றார். அதிர்ஷ்டவசமாக, மனிதனால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு மகத்தான சக்தி படைப்பில் உள்ளது. மனிதரின் மனதில் ஆன்மீக நாகரிகம் ஆதிக்கம் செலுத்தும் நாள் வரை இந்தச் சக்தி அறிவியலால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க வேண்டுமென பேரன்புக்குரிய கடவுளிடம் மன்றாடுவோமாக. கீழ்த்தரமான லௌகீக இயல்புடைய மனிதரின் கைகளில் இந்தச் சக்தி இப்பூமி முழுவதையும் அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும்”.
அவரது சொற்கள் தீர்க்கதரிசனமாகின, ஆனால் அவை நன்கு புரிந்துகொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகின.
புலொம்ஃபீல்ட், (Chosen Highway) தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலை, பக். 183-4