பிலாஸாக்களின் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் பூர்த்தியாகி, கட்டுமானத்தின் ஒரு புதிய கட்டம் ஆரம்பித்துவிட்டது.
பஹாய் உலகமையம் — அப்துல் பஹா நினைவாலயத்தின் பிலாஸா சுவர்கள் பூர்த்தியாகி, கட்டுமானத்தின் ஒரு புதிய கட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றன. மத்திய பிலாஸாவின் மேல் பரப்பை மூடுகின்ற நுணுக்கமான பின்னல் தட்டியைக் கட்டுவதற்கான பலக்கிய செயல்முறை ஆரம்பித்துவிட்டது.
முடிந்தவுடன், பின்னல் தட்டியானது பிரதான கட்டிடத்தை சுற்றிலும் உள்ள மதில் பிதுக்கங்களுடன் இணைக்கப்படும். தற்போதையை செயல்முறை பின்னல் தட்டிகளின் உருவமைப்பை உருவாக்கிடும் நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட பல விரிவுபடுத்தப்பட்ட போலிஸ்டைரீன் (polystyrene) கட்டகங்களில் முதலாவதை பொருத்துவதை உள்ளடக்கியுள்ளது.
திட்டம் மேம்பாடு கண்டு வரும் வேளை, உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகங்கள் வரும் நவம்பர் மாதத்தில் அப்துல் பஹா மறைந்த நூறாம் ஆண்டை அனுசரிப்பதற்கும் அவரது அசாதாரன பண்புகளைப் பற்றியும் மனிதகுலத்திற்கான அவரது எடுத்துக்காட்டான வாழ்க்கை பற்றிப் பிரதிபலிப்பதற்கும் தயாராகி வருகின்றன.
தளத்தில் நடைபெறும் சமீபமான மேம்பாடுககளை தொடரும் படங்களில் சித்தரிக்கப்படுகின்றன.
இந்தப் படம் மத்திய பிலாஸாவை வடக்கு மற்றும் தெற்கு வாசல் சுவர்களுடன் இணைக்கும் பகுதிகளின் கட்டுமானத்தைக் காண்பிக்கின்றது
மத்திய,, வடக்கு, மற்றும் தெற்கு பிலாஸாக்களை இணைக்கும் சுவர் பகுதிகளின் ஆரம்ப கட்டத்தைக் காட்டும் ஓர் அணுக்கக் காட்சி
நினைவாலயத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பக்கங்களின் பூர்த்திபெற்ற சுவர்கள் காணப்படுகின்றன. அவை தளத்தின் ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரை செல்கின்றன.