

29 அக்டோபர் 2021
பஹாய் உலக நிலையம்—உலகம் முழுவதும் எண்ணிலடங்கா மக்களும் சமூகங்களும், வரும் நவம்பரில் அவர் மறைந்த நூறாம் நினைவாண்டின் நினைவேந்தலுக்கு அவர்கள் தயாராவதில் மானிடத்திற்கான அப்துல்-பஹாவின் சேவை சார்ந்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் பிரதிபலிக்கின்றனர்.
அவ்வாறு செய்கையில், பெண் ஆண் சமத்துவம், இன தப்பெண்ணத்தை அகற்றுவது, அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான இணக்கம், மதத்தின் ஒருமை, சர்வலோக அமைதி உட்பட, மானிடத்தின் பொதுநலன் மற்றும் மேம்பாட்டுக்குப் பொருத்தமான கருப்பொருள் சார்ந்த அப்துல்-பஹாவின் எழுத்துகள் மற்றும் உரைகளின் புதிய பதிப்புகளை வெளியிடுவதற்கான உத்வேகத்தை அவர்கள் பெற்றுள்ளனர். சமீபமான வாரங்களில் அவருடைய பிரார்த்தனைகள், அவர் வாழ்க்கையின் வரலாற்றுக் குறிப்புகள், குறிப்பாக இந்த விசேஷ காலகட்டத்தில் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிப்பதற்கு உலகைச் சுற்றிலுமுள்ள பஹாய் சமூகங்களின் முயற்சிகள் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட தொகுப்பு, உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வைக் குறிப்பதற்கு சமீபமான வாரங்களிலும் மாதங்களிலும் வெளிவந்துள்ள பிரசுரங்களின் ஒரு நுண்காட்சியை மட்டுமே வழங்குகிறது.
ருமேனியாவில், அப்துல்-பஹாவின் உயிலும் சாசனத்தின் ஒரு புதிய மொழிபெயர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தோனீசியாவில், பூக்களின் சித்திரங்களுடன் ஒளிரும் ஒர் பிரார்த்தனை புத்தகம் பஹாசாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எகிப்து, ஹாய்ட்டி, ருவான்டா, துர்க்கி ஆகிய நாடுகளில் அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய கதைகளை புதிய வெளியீடுகள் வழங்குகின்றன.
ஜப்பானில், அந்த நாட்டின் ஆன்மீக எதிர்காலம் குறித்த அப்துல்-பஹாவின் தொலைநோக்கை ஒரு புதிய கட்டுரைத் தொகுப்பு ஆராய்கிறது. பெர்மூடா, ஜோர்தான், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தினசரி பத்திரிக்கை கட்டுரைகள் தங்கள் சமுதாயங்களுக்கான இந்த பஹாய் சமூகங்களின் பங்களிப்பைப் பார்க்கின்றன.
பிரேசில், கெனடா, ஓமான, பெரு, ஐக்கிய குடியரசு, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில், குழந்தைகளின் கதைப்புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவை அப்துல்-பஹாவின் அசாதாரன குணநலன்களையும் மானிடத்திற்கான அவரது சேவையையும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
சமீபத்திய மாதங்கள், ஆர்மீனிய, கிரேக்க, ஹிந்தி மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் பிற 13 மொழிகள், இத்தாலிய, ஜப்பானிய, கசாக், குர்திஷ் (குர்மஞ்சி மற்றும் சோரானி), மங்கோலிய, நேபாளி, ஸ்பானிஷ், டெட்டம் மற்றும் ட்ஷிலுபா உள்ளிட்ட மொழிகளில் முதல் முறையாக கிடைக்கச் செய்யப்பட்ட பஹாய் எழுத்துகளின் புதிய தேர்வுகளையும் கண்டுள்ளன.
அப்துல்-பஹாவின் பிரார்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகளின் புதிய மொழிபெயர்ப்புகளும் உள்நாட்டு மொழிகளில் செய்யப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கையைப் பற்றிய கதைகளின் கையேடு சிலுண்டாவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் லுண்டா மக்களிடையே பரவலாகவும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, அவர்களின் மக்கள் அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சாம்பியா பகுதிகளில் பரவியுள்ளனர். பிரேசிலில், அப்துல்-பஹா என்ற புத்தகத்தின் கையேடு ஸுபுக்குவாவில் தயாரிக்கப்பட்டுள்ளது, இது Karirí-Xocó (காரிரி-ச்சோக்கோ) மத்தியில் பேசப்படுகிறது. அந்த அழியும் தருவாயில் உள்ள மொழிக்கு புத்துயிர் வழங்கும் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும். இதே கையேடு பிரேசிலின் புல்ஞியோ மக்களால் பேசப்படும் மொழியான யாட்டேயில் கிடைக்கும். தென்னாப்பிரிக்காவில், அப்துல்-பஹா வாழ்க்கையின் கதைகள் செபேடி மற்றும் ஸூலு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1544/