அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டு நிறைவு: கலை படைப்புகள் வரலாற்று நிகழ்வைக் குறிக்கின்றன
16 அக்டோபர் 2021
பஹாய் உலக மையம்-நவம்பர் மாதம் அப்துல்-பஹாவின் நூற்றாண்டு நிறைவின் உலகளாவிய நினைவேந்தலுக்கான (commemoration) ஏற்பாடுகள், சமாதானத்தின் தூதர், சமூக நீதியின் வாகையர், மனிதகுல ஒருமை கொள்கையின் நிலைநிறுத்துனர் எனும் முறையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உத்வேகம் பெற்ற கலை வெளிப்பாடுகளின் பொழிவுகளை உருவாக்கியுள்ளன. .
இசை, அசைவூட்டம் (animation), ஓவியம், நாடகம், கதைசொல்லல், கவிதை மற்றும் பிற கலை வடிவங்கள் மூலம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள், அப்துல்-பஹா தமது உரையாடல்கள் மற்றும் எழுத்துகளில் குறித்துரைத்த தப்பெண்ணங்களை நீக்குதல், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், உலகளாவிய அமைதி மற்றும் மனிதகுலத்திற்குத் தன்னலமற்ற சேவை போன்ற ஆன்மீக கருத்தாக்கங்களை ஆராய்கின்றனர். .
பின்வருவது ஒரு தனித்துவ நிலையுடைய ஓர் ஆளுமையின் நினைவாக உலகம் முழுவதும் உருவாக்கப்படும் எண்ணற்ற கலைப் படைப்புகளின் மாதிரிகளாகும்.
எத்தியோப்பியா நாட்டின் ஓவியர் ஒருவர் வெவ்வேறு வர்ண காகிதங்களை வெட்டி இணைத்து, பாப் பெருமானார் மற்றும் அப்துல் பஹா இருவரின் நினைவாலயங்களை உருவாக்கியுள்ளார்
கனடாவைச் சேர்ந்த ஒரு கலைஞரின் இந்த ஓவியம், ‘அப்துல்-பஹா நான்கு தசாப்தங்களாக வாழ்ந்த’ அக்காநகரின் காட்சியை சித்தரிக்கிறது. அவர் தனது தந்தை பஹாவுல்லாவுடன் கைதியாகவும் நாடுகடத்தப்பட்டவராகவும் அந்த நகரத்திற்கு வந்தார். அங்கு அவர் அனுபவித்த பல துயரங்கள் மற்றும் துன்பங்கள் இருந்தபோதிலும், ‘அப்துல்-பஹா’ அக்காநகரைத் தமது வீடாக ஆக்கிக்கொண்டு, அந்த நகர மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு சேவை செய்ய தம்மை அர்ப்பணித்தார். காலப்போக்கில், அவர் இப்பகுதி முழுவதும் அறியப்பட்டு மதிக்கப்பட்டார்.
இந்த பாடல் கேமரூனைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்டது, அவர் அப்துல்-பஹா எழுதிய ஒரு பிரார்த்தனைக்கு இசையமைத்தார். பிரார்த்தனையின் ஒரு பகுதி: “O Thou forgiving Lord! Thou art the shelter of all these Thy servants. Thou knowest the secrets and art aware of all things. We are all helpless, and Thou art the Mighty, the Omnipotent.”
அவரது எழுத்துக்களில், ‘அப்துல்-பஹா, நாகரிகத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் உலகின் பழங்குடி மக்களின் முக்கிய பங்கைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பூர்வீக கலைஞரின் இந்த பகுதி பாரம்பரிய உள்நாட்டு கலை மற்றும் பஹாய் மோதிரக்கல் சின்னத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது, இது அவரது வெளிப்பாடுகள் மூலம் மனிதகுலத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது.
நார்வேயின் ஸ்டாவாங்கரில் பஹாய் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் கலைகள் மூலம் ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகின்றனர். வரவிருக்கும் நாடகத்திற்காக அவர்கள் ஒரு காகித மரத்தை இங்கே செய்கிறார்கள்.
உலகளாவிய கல்விக்கான பஹாய் கொள்கை குறித்த அப்துல்-பஹாவின் ஊக்குவிப்பைப் பிரதிபலித்த பிறகு, ஐக்கிய இராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு கலைஞர் பஹாய் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட பின்வரும் பத்தியால் ஈர்க்கப்பட்டு இந்த முப்பரிமாணத்தை உருவாக்கினார்: மதிப்பிட முடியாத இரத்தினங்கள் அடங்கிய ஒரு சுரங்கமாக மனிதனைக் கருதுங்கள். கல்வி மட்டுமே அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தும் …
சமோவா தீவைச் சேர்ந்த ஒரு பாடல் குழுவின் இப்பதிவு பஹாவுல்லாவின் மறைமொழிகளிலிருந்து சில மேற்கோள்களை சித்தரிக்கின்றன. O SON OF MAN! Deny not My servant should he ask anything from thee, for his face is My face; be then abashed before Me. O SON OF LIGHT! Forget all save Me and commune with My spirit. This is of the essence of My command, therefore turn unto it. O SON OF MAN! Put thy hand into My bosom, that I may rise above thee, radiant and resplendent. O SON OF MAN! The temple of being is My throne; cleanse it of all things, that there I may be established and there I may abide.
சுவிட்சர்லாந்தில், பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் ‘அப்துல்-பாஹா’வின் வாழ்க்கையால் உத்வேகம் பெற்ற உருவகங்களைக் கொண்ட இந்த விரிப்பை உருவாக்க தங்கள் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியை ஈர்த்தனர். அவர்களின் உள்ளூர் சமூக மையத்திற்கு இவ்விரிப்பு பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விரு பீங்கான் படைப்புகளும் கஃஸாக்ஸ்தானில் உள்ள ஒரு கலைஞரால் உலகளாவிய அமைதி பற்றிய ‘அப்துல்-பாஹா’வின் எழுத்துக்களில் இருந்து உருவகங்களை சித்தரிக்கின்றன.
The Nyota Ya Alfajiri Choir (Morning Star Choir), comprising youth in Kakuma, northern Kenya, has composed this song about the life of ‘Abdu’l-Bahá and His unique station in Bahá’í history.
கென்யா இளைஞர்கள் அப்துல் பஹாவின் வாழ்க்கை மற்றும் பஹாய் வரலாற்றில் அவரது தனிச்சிப்பான ஸ்தானம் குறித்த ஒரு பாடலை இயற்றியுள்ளனர்.
கஃஸாக்ஸ்தான் ஓவியர் ஒருவர் இந்தப் பேனா சித்திரத்தை, அப்துல் பஹாவின் பிரார்த்தனை ஒன்றின் உருவக சித்தரிப்பாகும்
நெதர்லாந்தில், தேசிய அஞ்சல் சேவை நூற்றாண்டு நினைவேந்தலுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முத்திரையை வெளியிட்டுள்ளது, இது ‘அப்துல்-பஹா’ கோவிலின் வடிவமைப்பு கருத்தின் காட்சியை கொண்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் “ஒளியாக இருங்கள்” என்னும் தலைப்பில் ஒரு பாடலில் ஒத்துழைத்தனர், இது ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களிலிருந்து பின்வரும் மேற்கோள்களின் உத்வேகம் பெற்றது: “தெய்வீகக் கல்வி கடவுள் ராஜ்யத்தின் கல்வி: அது தெய்வீகப் பரிபூரணங்களைப் பெறுவதில் அடங்கும், இதுவே உண்மையான கல்வி.”
தமது வாழ்க்கையில் அனுபவித்த பெரும் சிரமங்களுக்கு எதிரில் அப்துல் பஹாவின் மீள்ச்சித்திறம் மற்றும் பற்றுறுதி குறித்த பிரதிபலிப்பில் சிங்கப்பூர் ஓவியர் ஒருவர் இந்த சித்திரத்தை வரைந்தார்
“அவர்கள் பார்வையில்” என தலைப்பிடப்பட்ட ஓர் அசைவூட்டம் ஐக்கிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அதில் லியோ டால்ஸ்டாய், ஃகாலில் ஜிப்ரான், யோனே நோகுச்சி போன்ற அப்துல் பஹாவின் இரசிகர்களின் விமர்சனங்கள் வழங்கப்பட்டடுள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், பல இசைக்கலைஞர்கள் ‘அப்துல்-பாஹாவின் குணாதிசயங்கள் மற்றும் மனிதகுலத்திற்கான அவரது சேவை ஆகியவற்றின் அசாதாரண குணங்களைப் பற்றி ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளனர்.
ருமேனியாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் அக்காவில் உள்ள அப்துல்லா பாஷாவின் அறையில் இந்த விளக்கப்படத்தை உருவாக்கினார், அங்கு, பாரீஸில் வசிக்கும் ஐக்கிய அமெரிக்க பஹாய் ஆன லாரா ட்ரேஃபஸ் பார்னி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக 1904 மற்றும் 1906 க்கு இடையில் ‘அப்துல்-பாஹா’ மூலம் தொடர்ச்சியான உரைகள் வழங்கப்பட்டன.பின்னர், உரைகளின் படியெடுத்தல் சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள் எனும் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகள் குழு அப்துல்-பஹா பற்றிய கதையைப் படித்த பிறகு இந்த ஓரிகமி துண்டுகளை உருவாக்கியது.
கனடாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் காகித அட்டைகளைத் தயாரித்துள்ளார், ஒவ்வொன்றும் ‘அப்துல்-பஹா’ இயற்றிய பிரார்த்தனையைக் கொண்டுள்ளது. பின்வரும் பிரார்த்தனையில் காணப்படும் இயற்கை உலகின் உருவகத்தின் உத்வேகம் பெற்ற பிரார்த்தனை அட்டைகள் பூக்களின் ஓவியங்களால் ஒளிரும்: “They have bloomed like sweet blossoms and are filled with joy like the laughing rose. Wherefore, O Thou loving Provider, graciously assist these holy souls by Thy heavenly grace which is vouchsafed from Thy Kingdom…”
அப்துல் பஹாவின் நினைவாலய வடிவ கருத்தாக்கத்தின் அடிப்படையில் துனீசிய பஹாய் ஒருவர் இந்த நீர்வர்ண சித்திரத்தை வரைந்துள்ளார்.
ஆண் பெண் சமத்துவம் குறித்த அப்துல் பஹாவின் எழுத்துகளில் காணப்படும் உவமைகளை இந்திய நாட்டைச் சேர்ந்தவரின் இந்த ஓவியம் தூண்டுகிறது
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு இசைக் குழுவினர் அப்துல் பஹா எழுத்துகளின் சில உரைப்பகுதிகளுக்கு இசையமைத்துள்ளனர்
தென் ஆப்பிரிக்காவில் பஹாய் சமூக நிர்மாணிப்பின் பங்கேற்பாளர்கள் இந்த கலைத்துவ படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இவை மானிடத்திற்கான அப்துல் பஹாவின் தன்னலமற்ற சேவை மற்றும் அன்பிலிருந்து உத்வேகம் பெற்றவை
மானிடத்திற்கான அப்துல் பஹாவின் சேவை குறித்த கதைகளை கொலம்பியா நாட்டின் குழந்தைகளும் இளைஞர்களும் பகிர்ந்துகொள்ளும் பல காணொளிகளில் இதுவும் ஒன்று
ஆர்மேனியா நாட்டின் இந்த அனிமேஷன், குழந்தைகளுக்கான அப்துல் பஹாவின் பிரார்த்தனைக்கு இசையூட்டியுள்ளது. “கடவுளே என்னைப் பாதுகாத்து….”
கனடா நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் அப்துல் பஹாவுடன் தொடர்புடைய முக்கிய இடங்கள் குறித்த சித்தரிப்புகளை உருவாக்கியுள்ளார்– அப்துல் பஹாவின் நினைவாலயம், பாஹ்ஜி மாளிகை மற்றும் ஹைஃபாவிலுள்ள அப்துல் பஹாவின் இல்லம்
இரான் நாட்டிலுள்ள வெவ்வேறு ஓவியர்கள் அப்துல் பஹாவின் பிரார்த்தனைகள் மற்றும் எழுத்துகளின் உத்வேகம் பெற்ற கையெழுத்துக்கலை படைப்புகளை உருவாக்கியுள்ளனர்
வாழ்வின் ஆன்மீகப் பரிமானங்கள் குறித்த அப்துல் பஹாவின் எழுத்துகளிலிருந்து உரைப்பகுதிகளை உள்ளடக்கிய, இரான் நாட்டில் உருவாக்கப்பட்ட பல அனிமேஷன்களில் இதுவும் ஒன்று
This animation is one of several that have been created in Iran, incorporating passages from the writings of ‘Abdu’l-Bahá about the spiritual dimension of life.
மானிடத்திற்கான தன்னலமற்ற சேவை குறித்த ஒரு பாடலை தீமோர் லெஸ்ட்டெ இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர்
இரான் நாட்டு இசைக் கலைஞர்கள் உருவாக்கிய அப்துல் பஹாவின் வாழ்க்கை குறித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. இப்பாடல் மகிழ்ச்சி, ஆன்மீக உத்வேகம், கடவுளிடம் அணுக்கம் மற்றும் அமைதி
பஹாய் போதனைகளில் காணப்படும் எதிர்காலத்திற்கான ஆர்வநம்பிக்கைமிக்க தொலைநோக்கினால் உத்வேகம் பெற்ற கருத்தியல் ஓவியம்
பஹாய் வரலாற்றில் அப்துல் பஹாவின் தனித்துவமான ஸ்தானம் குறித்த இப்பாடலை மக்காவ் தீவின் இசைக்கலைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞரும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளரும் பஹாவுல்லா மற்றும் ‘அப்துல்-பாஹா’ ஆகியோரின் எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட உரைப்பகுதிகளுக்கு இசை அமைத்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆல்பத்தின் கவர் ஸ்பெயின் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
இந்தச் சித்தரிப்பு, சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு கலைஞரின் பேனா வரைபடங்களின் ஒரு பகுதியாகும், இது அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய இடங்களைச் சித்தரிக்கிறது. இந்த வரைபடம் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மேக்ஸ்வெல் குடியிருப்பின் நுழைவாயிலாகும், அங்கு அவர் 1912 இல் அந்த நகரத்திற்கு பத்து நாள் வருகையின் போது பொது பார்வையாளர்களிடம் பேசினார். சமயங்களின் ஒருமை, தப்பெண்ணங்களை அகற்றுதல், பொருளாதார சமத்துவமின்மை போன்ற விஷயங்கள் பரவலாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி செய்தித்தாள்களால் வெளியிடப்பட்டது.
இத்தாலி பஹாய் சமூகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் வீடியோ, ‘அப்துல்-பஹா’ எழுதிய ஒரு பிரார்த்தனையை இசையமைக்கிறது, “O God! Educate these children. These children are the plants of Thine orchard, the flowers of Thy meadow, the roses of Thy garden.”
ஜெர்மனியில் இந்த கலை கண்காட்சி ‘அப்துல்-பஹா’வின் அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் குறித்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது. அவரது எழுத்துக்களிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட மேற்கோள்கள் அவை உத்வேகமூட்டிய கலைப்படைப்புகளில் அமைக்கப்பட்டன.
இந்த வீடியோவில், இந்திய பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைத்து மக்களுக்குமான ‘அப்துல்-பஹா’வின் அன்பு பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனின் அண்டைப்புறத்தில் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள், ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய பாடல்களைப் பாடுகிறார்கள்.
பெருவில் உள்ள ஒரு கலைஞரின் இந்த ஓவியம் ஒளியை ‘அப்துல்-பஹா’வின் ஒற்றுமைக்கான அழைப்பின் உருவகமாகப் பயன்படுத்துகிறது.
ஸ்வீடனின் லுண்டின் க்ளோஸ்டர்கார்டன் அண்டைப்புறத்தில் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களால் பாடப்பட்ட பாடல்களின் பதிவு இது.
“புயல்” என்று பெயரிடப்பட்ட இந்த பாடல், அமெரிக்கா முழுவதும் உள்ள மக்களால் இயற்றப்பட்டது மற்றும் சமூகத்திற்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவாலான நேரங்களை வழிநடத்துவது உட்பட பல்வேறு கருப்பொருள்களைத் தொடுகிறது.
அமெரிக்காவில் ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த ‘அப்துல்-பஹா’வின் வார்த்தைகளின் உத்வேகம் பெற்றது, அதில் அவர் மனிதகுலத்தை இரண்டு இறக்கைகள் கொண்ட பறவையுடன் ஒப்பிடுகிறார்.
இந்த அட்டைகள் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஒரு கலைஞரால் தயாரிக்கப்பட்டன, பாரிசில் ‘அப்துல்-பாஹா’ வழங்கிய பொது உரைகளில் இருந்து ஒற்றுமையை ஊக்குவிப்பதில் மதத்தின் பங்கு மற்றும் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை அவை உள்ளடக்கியுள்ளன
தென்னாப்பிரிக்காவில் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட களிமண் கட்அவுட்களை உருவாக்கியுள்ளனர், இது பஹாய் சமயத்தின் அடையாளமான, ஒன்பது-புள்ளி நட்சத்திரத்தை உருவாக்க ஒன்றாக ஏற்பாடு செய்யப்படும். எண் 9 ஒற்றுமை மற்றும் முழுமையை குறிக்கிறது.
அஜர்பைஜானின் பாகுவில் உள்ள இசைக்கலைஞர்கள் இந்த பாடலை அசர்பைஜானி, துருக்கி, ரஷ்யன், பாரசீக மற்றும் ஆங்கிலத்தில் பாடல் வரிகளுடன் சமூகத்திற்கான சேவை பற்றி எழுதியுள்ளனர். இந்த பாடல் பாகு நகரத்தின் ‘அப்துல்-பஹா’வுடனான வரலாற்று உறவுகளால் உத்வேகம் பெற்றதாகும். பாஃகு பஹாய் சமூகத்தின் ஆரம்ப வளர்ச்சி ‘அப்துல்-பஹா’வால் பேணப்பட்டது.
யுனைடெட் கிங்டமிலிருந்து ஒரு கலைஞர் இந்த ஓவியங்களை ‘அப்துல்-பஹாவின் அறிக்கையான “ஒரு கப்பலின் கலபதி அடிக்கடி சோதனையிலும் கடினமான பயணத்திலும் ஈடுபடும் போது அவரது அறிவு அதற்கேற்றவாறு அதிகரிக்கின்றது” குறித்து பிரதிபலிப்பின் பயனாக உருவாக்கினார்.
பூட்டப்பட்ட நிலையில், ருமேனியாவில் உள்ள ஒரு குடும்பம் 1911 இல் ‘அப்துல்-பஹா ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த முதல் நாட்களின் முக்கிய நிகழ்வுகளின் வியத்தகு விளக்கக்காட்சியைப் பதிவு செய்தது. இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நாடகம்,’ அப்துல் பஹாவை சந்தித்த சிலரை சித்தரிக்கிறது. இந்த சந்திப்புகள் அவர்கள் மீது ஏற்படுத்திய மாற்றத்தை இந்த வீடியோ நினைவுகூர்கின்றது
உலகின் பூர்வீக மக்களுக்கான ‘அப்துல்-பஹா’வின் அன்பையும், அனைத்து மக்களும் “ஒரு தோட்டத்தின் மலர்கள்” என்னும் பஹாய் எழுத்துகள் உரைப்பகுதியயைப் பிரதிபலித்த பிறகு, கனடாவில் ஒரு பழங்குடி கலைஞர் ஒரு தையல்காரருடனும் டஜன் கணக்கான மற்ற மக்களுடனும். ஒத்துழைத்து பாரம்பரிய உள்நாட்டு மணிகள் கொண்ட எம்பிராய்டரியை உருவாக்கினார்.
ஸ்பெயினில் உள்ள ஒரு கலைஞரின் குழந்தைகளுக்கான இந்த விளக்கப்படங்கள் பஹாய் போதனைகளிலிருந்து கல்வி பற்றிய கருத்துக்களை ஆராய்கின்றன, பஹாவுல்லாவின் பின்வரும் அறிக்கையை பயன்படுத்துகின்றன: “மனிதனை ஒரு விலைமதிப்பிட இயலாத இரத்தினங்கள் அடங்கிய சுரங்கமென கருதுங்கள்…”
இந்த வீடியோவில் பாப்புவா நியூ கினியின் குடெனோஃப் தீவில் இருந்து ஒரு பாடகர் குழு இடம்பெற்றுள்ளது, தற்போது போர்ட் மோர்ஸ்பியில் கட்டப்பட்டு வரும் பஹாய் வழிபாட்டு இல்லம் பற்றிய பாடல்களை இக்குழு பாடுகின்றது
இந்த மண்டலம் ஒரு பொலீவிய நாட்டு ஓவியரால் எம்பிராய்டரி செய்யப்பட்டது. இவர் அப்துல் பஹாவின் மானிடம் அனைத்திற்குமான அன்பின் உத்வேகத்தைப் பெற்றிருந்தார்.
ரஷ்யாவில் ஒரு மெஸ்ஸோ-சோப்ரானோ மற்றும் டெனோர் இரட்டையர்கள், ஓர் ஓப்ரா பாணியில், ‘அப்துல்-பஹா இயற்றிய பிரார்த்தனைக்கு இசையமைத்தனர். “கடவுளே, எனக்கு நல்வழி காட்டி, என்னைப் பாதுகாத்து…” என இந்தப் பிரார்த்தனை ஆரம்பிக்கின்றது.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு கலைஞரின் இந்தப் பேனா சித்திரம், “அப்துல்-பாஹாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,” பதிலளிக்கப்பட்ட சில கேள்விகள் மீது தியானம் “என்னும் தலைப்பில் வரவிருக்கும் வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
அப்துல்-பாஹாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட மேலும் பல பாடல்களை இந்தப் பட்டியலில் காணலாம்.