
22 அக்டோபர் 2021
பஹாய் உலக மையம் – பஹாய் உலகம் என்னும் இணைய வெளியீடு இரண்டு புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
“அப்துல்-பஹா: உலக அமைதியின் வாகையர்” என்னும் கட்டுரை அப்துல்-பஹா தமது காலத்தின் முன்னணி சிந்தனையாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம் மட்டுமல்லாமல், உலகின் ஆன்மீகமயமாக்கலுக்கான திட்டத்தின் மூலம் அமைதிக்கான இயக்கத்தை எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆராய்கிறது..
“அப்துல்-பாஹாவும் பஹாய் மாணவர்களும்” என்னும் தலைப்பில் மற்றொரு புதிய கட்டுரை, மத்திய கிழக்கில் கல்வி பற்றிய சொல்லாடலுக்கு அப்துல்-பஹாவின் பங்களிப்பு மற்றும் பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பஹாய் மாணவர்களுக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதலைப் பார்க்கிறது.
அடுத்த மாதம் உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்கள் அப்துல்- பஹா மறைவின் நூறாம் ஆண்டை நினைவுகூரவிருக்கின்றன. இந்தப் புதிய கட்டுரைகள், அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டை கௌரவிக்கும் கட்டுரை வரிசையின் ஒரு பகுதியாகும்.
பஹாய் உலகம் வலைத்தளம் மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகின்றது, அவை, உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயலின் நிலைகளில் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்துவதுடன் பஹாய் சமயத்தின் இயலாற்றல் மிக்க வரலாறு குறித்தும் பிரதிபலிக்கின்றன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1543/