வரலாறு சார்ந்த நூற்றாண்டுக்கால கூட்டத்தின் முடிவில் பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற கட்டிடத்தின் படிகளில் காணப்படுகின்றனர்.
28 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் – ஒரு வார காலமாக அப்துல் பஹாவின் முன்மாதிரியான வாழ்க்கையின் பிரதிபலிப்பில் மூழ்கியதன் மூலம் உத்வேகம் அடைந்திருந்த, உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் உலக நீதிமன்றத்தின் இருக்கையின் வளாகத்தில் சனிக்கிழமையன்று நூற்றாண்டுக்கால நிறைவு நினைவேந்தலை ஆன்மீகமான சூழலில் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
நிறைவு அமர்வில் அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள், பல்வேறு மொழிகளில் பாடப்பட்ட/கூறப்பட்ட பிரார்த்தனைகள், ஓர் இசை இடைவேளை மற்றும் ஒரு பாடகர் குழு பாடிய பஹாய் எழுத்துக்கள் ஆகியவை அடங்கும்.
கீழே உள்ள படங்கள், நிறைவு அமர்வு மற்றும் முந்தைய நாட்களின் செயல்பாடுகளில் இருந்து சில தருணங்களைக் காண்பிக்கின்றன.
நூறாம் நினைவாண்டு ஒன்றுகூடலின் முடிவு அமர்வில் பஹாய் திருவாசகங்களில் இருந்த சில பகுதிகள் பாடப்படுகின்றனஅனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான அன்டொனெல்லா டிமொன்டே, கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவர், அப்துல்-பஹாவின் மறைவிலிருந்து பஹாய் ஸ்தாபனங்களின் மேம்பாடு குறித்து பேசினார்அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர் ஒருவரான, ஹொல்லி வூடார்ட், கூட்டத்தில் உரையாற்றுகின்றார். அவர் சமீபகாலமான உலகளாவிய பஹாய் சமூகத்தின் மேம்பாடு குறித்து பேசினார்.அனைத்துலக போதனை மைய உறுப்பினர், ரேச்சல் ன்டெக்வா கூட்டத்தில் உரையாற்றுகின்றார். அவர் நடைபெற்ற கூட்டம் குறித்து பிரதிபலித்தார்.பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற வளாகத்தில் ‘உதாரணபுருஷர்‘ வீடியோவைப் பார்க்கின்றனர்.கூட்டத்தின் இறுதிநாளன்று பங்கேற்பாளர்கள்வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையில் படிக்கட்டுகளில்உலக நீதிமன்ற வளாகத்தில் சில பங்கேற்பாளர்கள்உலக நீதிமன்ற இருக்கைக்கு அருகில் ஒரு பாதையில் பங்கேற்பாளர்கள்இறுதிநாளன்று பங்கேற்பாளர் குழு ஒன்றுவெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையில் ஒன்றுகூடுகின்றனர்உலக நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பங்கேற்பாளர்கள் ஒரு குழு படத்திற்கு ஒன்றுகூடுகின்றனர்அப்துல்-பஹாவின் பஹாய் சமூகத்திற்கான பங்களிப்புகள் மற்றும் சமுதாயத்திற்கான அவரது சேவை பற்றிய ஒரு கண்காட்சியில் பங்கேற்பாளர்கள். அதில் அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய சில பொருள்களும் இருந்தன.பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்றத்தின் இருக்கையை விட்டு வெளியேறுகின்றனர்
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை வலம் வருகின்றனர்
27 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் – நவம்பர் 27, சனிக்கிழமை அதிகாலையில், ஹைஃபா யாத்ரீகர் இல்லத்தின் முற்றத்தில், ‘அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தைக் குறிப்பதற்கு புனிதமும் பயபக்தியும் கூடிய சூழலில் நூற்றாண்டு நினைவேந்தல் கூட்டத்தின் பங்கேற்பாளர் ஒன்றுகூடியிருந்தனர்.
அப்துல் பஹாவின் மறைவுக்குப் பிறகு அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட பாப் பெருமானார் நினைவாலயத்திலிருந்து சிறிது தூரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மனித குலத்திற்கான அப்துல்-பஹாவின் முன்மாதிரியான சேவை குறித்து பங்கேற்பாளர்களிடையே ஆழமான சிந்தனையைத் தூண்டியது.
இந்த நிகழ்விற்காக உலக நீதிமன்றம் எழுதிய அஞ்சலி அதன் உறுப்பினர்களுள் ஒருவரால் வாசிக்கப்பட்டது. அஞ்சலியின் ஒரு பகுதியாக: “அவர் ஒற்றுமையின் ஆற்றல்களை எவ்வாறு உருவகப்படுத்தினார் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தின் காட்சியை விட வேறு தெளிவான வெளிப்பாடு எதையும் கற்பனை செய்திட இயலாது. இந்த நிலத்தில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையைச் சார்ந்த துக்கம் அனுசரிப்போர் தங்களுக்கு ஏற்பட்ட பொதுவான இழப்பை வெளிப்படுத்துவதற்கு ஒன்றுகூடினர்.”
அஞ்சலி தொடர்கிறது: “அவரது அன்பின் உலகளாவிய தன்மையானது அந்த நேரத்தில் கூட, சமூகத்தின் குறுக்களவான ஒன்றென உரிமை கோரக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கியது. புத்துயிர் பெற்ற அவரது அன்பு, பேணப்பட்டது, உத்வேகமூட்டியது; அது பிரிவினையை விலக்கி, அனைவரையும் இறைவனின் விருந்து மேசைக்கு வரவேற்றது.
கீழே உள்ள படங்கள் மாலை நிகழ்ச்சியின் காட்சியை வழங்குகின்றன.
நிகழ்வு ஆரம்பிப்பதற்கு சிறிது முன்னர் பங்கேற்பாளர்கள் ஹைஃபா யாத்ரீகர் இல்லத்தின் முற்றத்தில் ஒன்றுகூடினர்மாலை நிகழ்வின் ஆரம்பத்திற்கு முன் பங்கேற்பாளர்கள் அப்துல்-பஹாவின் வாழ்க்கை மீது தியானமும் பிரதிபலிப்பும் செய்கின்றனர்பிரார்த்தனை மற்றும் பிரதிபலிப்பில் மூழ்கியிருக்கும் பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிஉலக நீதிமன்றம் அப்துல்-பஹாவுக்காக எழுதிய ஓர் அஞ்சலி அதன் உறுப்பினர் ஒருவரால் வாசிக்கப்பட்டது: “அவரது அன்பின் உலகளாவிய தன்மையானது அந்த நேரத்தில் கூட, சமூகத்தின் குறுக்களவான ஒன்றென உரிமை கோரக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கியது. புத்துயிர் பெற்ற அவரது அன்பு, பேணப்பட்டது, உத்வேகமூட்டியது; அது பிரிவினையை விலக்கி, அனைவரையும் இறைவனின் விருந்து மேசைக்கு வரவேற்றது.நிகழ்வு நிரலில், அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பேசப்பட்ட பஹாய் திருவாசகங்களிலிருந்து பிரார்த்தனைகள், உரைப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. பஹாய் போதனைகளிலிருந்து பிரார்த்தனைகளும் திருவாசங்களும் பாரசீகம், ரஷ்ய, ஸ்பேய்னிய, மற்றும் போர்த்துகீசிய மொழிகளிலும் வாசிக்கப்பட்டனபங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை நோக்கிச் செல்கின்றனர்பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை வலம் வருகின்றனர்பாப் பெருமானார் நினைவாலய தோட்டத்தில் பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிபாப் பெருமானார் நினைவாலயத்துடன் கார்மல் மலை காட்சி தருகின்றது. இங்குதான் அப்துல்-பஹா விண்ணேற்றம் அடைந்த பிறகு அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
நினைவாலய கட்டுமானம் குறித்த ஒரு குறுவிளக்கக் காணொளி
26 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் – நூற்றாண்டுக்கால நினைவேந்தலுக்காக உலக நீதிமன்றத்தால் கோரப்பட்ட, அப்துல்-பஹாவின் நினைவாலய கட்டுமானம் குறித்த ஒரு குறுவிளக்கக் காணொளி இன்று வெளியிடப்பட்டது.
நேற்று பஹாய் உலக மையத்தில் நூற்றாண்டுக்கால நினைவேந்தல் ஒன்றுகூடலின் போது திரையிடப்பட்ட இந்த 15 நிமிட விளக்கப்படம், அப்துல்-பஹாவின் நினைவாலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் குறித்த அம்சங்களை ஆராய்வதுடன், அத்திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள மக்களுடனான நேர்காணலையும் வழங்குகிறது.
இப்படத்தை மேல்காணும் காணொளியிலும் யூட்டியூப்பிலும் காணலாம்.
புனித நிலத்தில் அப்துல் பஹா மறைவின் நூறாம் ஆண்டு நினைவேந்தலைக் குறிக்கும் நிகழ்வின் ஆரம்பத்திற்காக பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற கட்டிடத்தில் குவிகின்றனர்
25 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் – பெரும் எதிர்ப்பார்ப்புடனும் மரியாதையுடனும், உலகம் முழுவதிலும் இருந்து வந்த பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையின் மண்டபத்திற்குள் முறையான நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்காக ஒன்றுகூடினர்.
அந்தக் கூட்டத்திற்கான உலக நீதிமன்றத்தின் செய்தி ஒன்றை அதன் உறுப்பினர் ஒருவரால் படிக்கப்பட்டது. அச்செய்தியின் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது: “இந்த நிலையற்ற நேரங்களில், “மனிதகுலம் அனைத்திற்கும் அடைக்கலமும்”, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் ஒரு கேடயமுமான” அப்துல்-பஹாவின்பால் ஆர்வநம்பிக்கையுடனும் பேராவலுடனும் திரும்பி, சேவையின் பாதையில் அவரது உதாரணத்தைப் பின்பற்றிடும் முயல்வில் விண்ணுலக இராஜ்யங்களின் உதவியை வேண்டினர்.”
நிகழ்ச்சி நிரல், அனைத்துலக போதனை மைய உறுப்பினர் ஒருவரின் பிரதான உரை, பல்வேறு மொழிகளில் பிரார்த்தனைகள், இந்த வரலாற்று தருணத்தை கௌரவிக்கும் இசை நிகழ்வுகள், அப்துல்-பஹா நினைவாலயத்தின் கட்டுமானம் குறித்த ஒரு குறு காணொளி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
இன்றைய நிகழ்வு நிரலின் சில தருணங்களை கீழ்க்காணும் படங்கள் காட்டுகின்றன.
பங்கேற்பாளர்கள் நினைவுப்பூங்காவின் வழி நிகழ்விடமான உலக நீதிமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்கின்றனர்.
பங்கேற்பாளர்கள் நூல்கள் ஆ்யவு மையத்தைக் கடந்து செல்கின்றனர் இன்று காலையில் பங்கேற்பாளர்களின் மற்றொரு குழுவினர்பங்கேற்பாளர்கள் பல நாடுகளிலிருந்து வருகின்றனர்இன்றைய நிகழ்வின் ஆரம்பத்திற்கு முன் – பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிஉலக நீதிமன்ற இருக்கைக்கு வரும் பங்கேற்பாளர்களின் ஆகாய காட்சிநிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையின் படிக்கட்டுகளில் கூடியிருக்கின்றனர்உலக நீதிமன்ற இருக்கையின் முன் கூடியிருக்கும் பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிநிகழ்வின் ஆரம்பத்திற்கு முன் ஆர்வத்துடன் காத்திருக்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் பங்கேற்பாளர்கள்நிகழ்விட மண்டபத்தின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பங்கேற்பாளர்கள் பிரவேசிக்கும் காட்சிநிகழ்விட மண்டபத்திற்குள் பங்கேற்பாளர்கள் வரவேற்கப்படுகம் காட்சிநிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்விட மண்டபத்திற்குள்நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் மண்டபத்தின் மற்றொரு காட்சிபங்கேற்பாளர்கள் அமர்ந்து நிகழ்வின் ஆரம்பத்திற்காக தயாராகின்றனர்மண்டபத்தின் மற்றொரு காட்சிநிகழ்வு நிரல் பல்வேறு மொழிகளில் பிரார்த்தனைகளை உள்ளடக்கியிருந்ததுபிரார்த்தனைகள் ஒன்றுகூடலின் ஆன்மீகச் சூழ்நிலைக்குப் பங்களித்தனநிகழ்ச்சி நிரல், அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர் ஒருவரான முனா தெஹ்ரானியின் உரையை உள்ளடக்கியிருந்தது: “இங்கு கூடியுள்ள நாம், அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூரவும் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த புனித மலையின் மீது பார்வையைத் திருப்பும் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மில்லியன் கணக்கானோரை பிரதிநிதிக்கின்றோம்.”கூட்டத்திற்கான உலக நீதிமன்றத்தின் செய்தி ஒன்று அதன் உறுப்பினர் ஒருவரால் படிக்கப்பட்டது: “இந்த நிலையற்ற நேரங்களில், “மனிதகுலம் அனைத்திற்கும் அடைக்கலமும்”, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் ஒரு கேடயமுமான” அப்துல்-பஹாவின்பால் ஆர்வநம்பிக்கையுடனும் பேராவலுடனும் திரும்பி, சேவையின் பாதையில் அவரது உதாரணத்தைப் பின்பற்றிடும் முயல்வில் விண்ணுலக இராஜ்யங்களின் உதவியை வேண்டினர்.”பிரதான உரை அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான குலோரியா ஜாவிட்-டினால் வழங்கப்பட்டது. திருமதி ஜாவிட், அப்துல் பஹாவின் தியாகபூர்வமான மற்றும் தன்னலமற்ற இயல்பைப் பற்றி பேசினார். தமது உரையை உலக நீதிமன்றத்தின் செய்தியின் ஒரு பகுதியை வாசிப்பதுடன் முடித்தார். “(எவரையும் அந்நியராகக் காணாதீ்ர், மாறாக அனைவரையும் ஒரே குடும்பத்தின் உறுப்பினராகக் கருதுங்கள்…”பிரதான உரையை செவிமடுக்கும் போது சில பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுக்கின்றனர்பங்கேற்பாளர்கள் பிரதான உரையை உன்னிப்பாக செவிமடுக்கின்றனர்ஏழு மொழிகளில் சம நேர மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டதுஇந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் இசை நேரங்களும் அடங்கும். சில்லி நாட்டிலிருந்து ஒரு பங்கேற்பாளர் ஒரு கிட்டார் இசை கருவியை வாசிப்பதை இங்கே காணலாம்.அப்துல் பஹா நினைவாலயத்தின் கட்டுமானம் பற்றி ஒரு குறு காணொளியை பங்கேற்பாளர்கள் காணுகின்றனர். இக்காணொளி விரைவில் செய்தி சேவையில் வெளியிடப்படும்நிகழ்ச்சி நிரல் பஹாய் உலக மைய இசை குழுவினரின் இசைப்படுத்தப்பட்ட பஹாய் திருவாக்குப் பகுதிகளோடு ஒரு முடிவுக்கு வந்தது. இப்படத்தில் இசைக்குழு பிஸ்லாமா மற்றும் ஃபிஜி மொழிகளில், பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து ஒரு பகுதியுடன் வேறு இரண்டு வாசகப்பகுதிகளைப் பாடுகின்றனர்.
“இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, பூரண ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் அவரது பாதுகாப்பு, அன்புப்பரிவு என்னும் விருட்சத்தின் நிழலின் கீழ் வாழ வேண்டியது உலக மக்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது.”
மற்றொரு குழு “நண்பனே! உனது உள்ளமெனும் பூங்காவில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே. அன்பு, ஆவல் ன்னும் இராப் பாடியிலிருந்து உனது பிடியைத் தளர்த்தி விடாதே. நேர்மையாளரின் நட்பைப் பாதுகாத்து, இறை க்தியற்றோருடன் தோழமையைத் தவிர்ப்பாயாக.” எனும் மேற்கோளுடன் பஹாய் திருவாக்குகளை பிரெஞ்சு, சுவாஹிலி மொழிகளில் பாடினர். நிகழ்ச்சி நிரல் ஸ்பேய்ன் மொழியில் ஒரு பிரார்த்தனையுடன் முடிவுற்றதுசில பிரதிநிதிகள் ஒன்றுகூடலின் போது, மானிடத்தின் பல்வகைமையைக் கொண்டாடும் தங்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்தனர்காலைப் பொழுது நிகழ்ச்சி நிரலின் முடிவில் உலக நீதிமன்ற இருக்கையை விட்டு பங்கேற்பாளர்கள் வெளியேறுகின்றனர்
பிரதிநிதிகள், பஹாவுல்லா மற்றும் அப்துல்-பஹாவின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பஹாய் புனிதத்தளங்களுக்கு விஜயம் செய்து நூற்றாண்டுக்காக தயாராகின்றனர்.
24 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் — கடந்த இரண்டு நாட்களாக பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹாவின் வாழ்க்கை தொடர்பான பஹாய் புனித ஸ்தலங்களுக்கு உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் குழுவாகச் சென்று வருகின்றனர். வியாழன் அன்று முறையான நிகழ்ச்சி தொடங்குவதற்கான சூழலை இவ்விஜயங்கள் உருவாக்கி, நூற்றாண்டு ஒன்றுகூடலின் ஆன்மீக சூழ்நிலை உயர்த்தியுள்ளன.
கீழே உள்ள படங்கள் பஹாவுல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு பிரதிநிதிகளின் வருகைகளைக் காட்டுகின்றன; அப்துல்-பஹா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த அக்காநகரில் உள்ள ‘அப்புட் இல்லம்; ஹைஃபாவில் உள்ள ‘அப்துல்-பஹா காலமான அவரது வீடு மற்றும் அனைத்துலக பஹாய் காப்பகம்.
பங்கேற்பாளர்கள் 28 நவம்பர் 1921 அதிகாலையில் காலமானதற்கு முன் வாழ்ந்து வந்த, ஹைஃபாவில் உள்ள அப்துல்-பஹாவின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
பங்கேற்பாளர் குழு ஒன்று அப்துல்-பஹாவின் இல்லத்தை அணுகுகின்றனர்
பங்கேற்பாளர்களுக்கு புனிதஸ்தல பூங்காக்களின் அமைதிச் சூழலில் பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஆழ்ந்திருப்பதற்கான வாய்ப்பு
பங்கேற்பாளர்களின் குழு, சர்வதேச பஹாய் ஆவணக் காப்பகங்களுக்குச் செல்வதற்கு சற்று முன்பு, பஹாய் சமயத்தின் மையநாயகர்களின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
பங்கேற்பாளர்கள் காப்பக கட்டிடத்திற்கு வருகை தருகின்றனர்
பக்தி மனப்பான்மையுடன், பங்கேற்பாளர்கள் காப்பக கட்டிடத்தின் வாசலை அணுகுகின்றனர்
ஆகஸ்ட் 1868 இல் ‘அக்காநகருக்கு வந்ததைத் தொடர்ந்து பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோட்டையை பங்கேற்பாளர்கள் அணுகுகின்றனர். இந்த நேரத்தில், ‘அப்துல்-பஹா நோயுற்றவர்களைக் கவனித்து, அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களுக்கான நலனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேல் படம் 1907 இல் சிறைச்சாலையின் வரலாற்று காட்சியை வழங்குகிறது.
பஹாவுல்லாவும் பிர நாடுகடத்தப்பட்டோரும் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பங்கேற்பாளர்கள் குழுவாகப் பிரவேசிக்கின்றனர்
பஹாவுல்லாவின் மகன்களுள் ஒருவரான மிர்ஸா மிஹ்டி வானொளி சாளரத்தின் வழியாக கீழே விழுந்து மரணமுற்ற இடத்தில் ஒன்றுகூடி பிரார்த்திக்கின்றனர்
இந்தப் படங்களில், இடமும் வலமும் உள்ள படங்கள் பஹாவுல்லா சிறைவைக்கப்பட்டிருந்த அறையை காண்பிக்கின்றன
பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1871 இல் இந்த இடத்திற்கு வந்தபின் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நாடுகடத்தப்பட்டவர்களாகவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அப்புட் இல்லத்திற்கு பங்கேற்பாளர்கள் வருகை தந்தனர்
அப்புட் இல்லத்தில் பங்கேற்பாளர்கள்
பங்கேற்பாளர்கள் அப்புட் இல்லத்திற்கான வருகையின் முடிவில் முன்புற முற்றத்திற்கு வருகின்றனர்
இடப்புறம் அப்புட் இல்லத்தின் பழைய (1920-கள்) படம். வலப்புறம் பங்கேற்பாளர்கள் அவ்வில்லத்திற்கு விஜயம் செய்கின்றனர்
பங்கேற்பாளர்கள் பார்வையிடும் புனித ஸ்தலங்களில் பஹாவுல்லா நினைவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள பாஹ்ஜி மாளிகையும் உள்ளது. ‘அப்துல்-பஹா இந்த வீட்டை 1879 செப்டம்பரில் தமது தந்தைக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வசிப்பிடமாக வாடகைக்கு எடுத்தார். பஹாவுல்லா பலகனியில் இருந்து தமது அன்பு மகன் அப்துல் பஹா அக்காவிலிருந்து வருவதைப் பார்ப்பார்.
ஹைஃபாவில் உள்ள நினைவுப் பூங்காவில் பங்கேற்பாளர்கள், நவ்வாப் (பஹாவுல்லாவின் மனைவி), மிர்சா மிஹ்டி (பஹாவுல்லாவின் இளைய மகன்), பஹிய்யா கானும் (பஹாவுல்லாவின் மகள் – இடது) மற்றும் அப்துல் பஹாவின் மனைவி முனிரி கானும் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வலது உள்ளன.
விசேஷ பிரார்த்தனைகள், கண்காட்சிகள், கலை விளக்கக்காட்சிகள், கோவில் வளாகங்களில் கலந்துரையாடல்கள் போன்றவற்றுடன் உலகம் முழுவதுமுள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்களில் அப்துல்-பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு நிறைவின் நினைவேந்தலுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வில்மட், ஐக்கிய அமெரிக்கா, 23 நவம்பர் 2021, (BWNS) – மனிதகுலத்திற்கான அப்துல்-பஹாவின் சேவை குறித்த கருப்பொருள்களை ஆராயும் அவரது வாழ்க்கையுடன் தொடர்புள்ள விசேஷ பிரார்த்தனைகள், கண்காட்சிகள், கலை விளக்கக்காட்சிகள், கோவில் வளாகங்களில் கலந்துரையாடல்கள் போன்றவற்றுடன் உலகம் முழுவதுமுள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்களில் அப்துல்-பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு நிறைவின் நினைவேந்தலுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தக் கோவில்கள், அவற்றின் சமூகங்களின் மையத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களென வீற்றிருந்து, குறிப்பாக பெருந்தொற்றின்போது, மக்களில் பிரார்த்தனை மற்றும் சேவைக்கான உத்வேகத்தை, வழங்கிவருகின்றன.
உலகிலுள்ள அத்தனை வழிபாட்டு இல்லங்களிலும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வில்மட் வழிபாட்டு இல்லம் அப்துல்-பஹாவுடன் ஒரு விசேஷ தொடர்பைக் கொண்டுள்ளது—அக்கோவிலைத் திட்டமிடுதலில் நேரடியாக ஈடுபட்டு, 1912-இல் அமெரிக்காவுக்கான அவரது வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயத்தின்போது அக்கோவிலுக்கான அடிக்கல்லை அவரே நாட்டினார்.
அந்த விசேஷ முக்கியத்துவமிக்க நாளின் நூறாம் ஆண்டினைக் குறிக்க, உலக நீதிமன்றம் வெளியிட்ட ஒரு செய்தியில் பின்வருமாறு உள்ளது:
“நூறு வருடங்களுக்கு முன்பு ரித்வான் பண்டிகையின் 11-ஆம் நாளன்று, பிற்பகலின் மத்திய நேரத்தில், நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த மக்களுக்கு முன் அப்துல் பஹா நின்று கொண்டு தொழிலாளர் கோடரியை கையிலெடுத்து வட சிக்காகோ நகரின் குரோஸ் பொயிண்டியிலுள்ள கோவில் நிலத்தின் மேற்பகுதியைப் பெயர்த்தார். அந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கென அழைக்கப்பட்டவர்கள் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் சிலர் நோர்வேஜியர்கள், இந்தியர்கள், பிரெஞ்சு நாட்டவர்கள், ஜப்பானியர்கள், பாரசீகர்கள், அமெரிக்காவின் பூர்வீகக் குடியினர் ஆகியோரும் அடங்குவர். ஒŕவொரு வழிபாட்டு இல்லத்தின் நிறைவேற்றத்திற்காக, அந்த நில தகர்ப்பு சடங்கின்போது, அப்துல் பஹா தெரிவித்த விருப்பங்களை இன்னமும் கட்டப்பட்டிராத அந்த வழிபாட்டு இல்லம் நிறைவு செய்வதுபோல் இருந்தது: ‘ஒன்றுகூடுவதற்காக ஓர் இடத்தை மானிடம் கண்டடைய வேண்டும்,’ மற்றும் ‘மானிடத்தின் ஒருமைப்பாட்டினுடைய பிரகடனம் அதன் புனிதமான திறந்த அரங்குகளிலிருந்து வெளிப்பட்டு முன்செல்ல வேண்டும்.’”
பஹாய் கோயில்களின் படங்கள் மற்றும் அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகளின் தொகுப்பையும், இந்த வழிபாட்டு மற்றும் சேவைத் தலங்களில் நூற்றாண்டு நினைவு தினங்களுக்கான திட்டங்களின் கண்ணோட்டத்தையும் கீழே அல்லது news.bahai.org -இல் காணலாம்.
அப்பியா, சமோவா
நூற்றாண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அனைத்து வயதினரும், ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கை வரலாற்றைச் செவிமடுக்க, கோவில் மைதானத்தில் கூடி வருகின்றனர். நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் நிகழ்ச்சியில் இளைஞர்களின் வழிபாடுகள், பாரம்பரிய பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும்.
பத்தம்பாங், கம்போடியா
வரும் நாள்களில், உள்ளூர் தலைவர்களும் வாசிகளும் இந்த வழிபாட்டு இல்லத்தில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்வர். சுற்றிலும் உள்ள பஹாய் சமூகங்களில் மேலும் பல நூற்றாண்டு நினைவேந்தல்கள் நடைபெறும்.
ஃபிராங்ஃபர்ட், ஜெர்மனி
இந்த வழிபாட்டு இல்லத்தின் திட்டங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அப்துல்-பஹாவின் பங்களிப்புகள் பற்றிய விளக்கக்காட்சிகள் அடங்கும். விண்ணேற்ற இரவில், இளைஞர்கள் தன்னலமற்ற சேவை மற்றும் அன்பு குறித்த கருப்பொருள்கள் தொடர்பான ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்வர், அடுத்த நாள், குழந்தைகள் நிகழ்ச்சியில் கைவினை விளக்குகள் தயாரித்தல் அடங்கும்.
கம்பாலா, உகான்டா
அப்துல்-பஹா’வை கௌரவிக்கும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் நடைபெறும், கம்பாலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் கடவுளின் அருகாமை, அமைதி போன்ற கருப்பொருள்களில் ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களைப் பற்றி சிந்திக்கவும் பிரார்த்தனை செய்யவும் ஒன்றுதிரட்டப்படுவர்,
மாத்துன்டா சோய், கென்யா
மாத்துன்டா சோய்-இல் உள்ள உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தில் தலைவர்கள், உள்ளூர் அதிகாரிகள், கிராமப் பெரியவர்கள், பல்வேறு நம்பிக்கைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பகுதிவாசிகள் தொடர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பர். இந்த நிகழ்வுகள் சனிக்கிழமையன்று ஒரு கூட்டத்தில் முடிவடையும், இதில் உள்ளூர் பாடகர் குழுவின் சிறப்பு நிகழ்ச்சியும் அடங்கும்.
புது டில்லி, இந்தியா
இந்த வழிபாட்டு இல்லத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள், தாமரை மலரால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பால் “தாமரை கோயில்” என்று பிரபலமாக குறிப்பிடப்படும், வழிகாட்டப்பட்ட விஜயங்களுக்காக கோயில் தளத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொரு விஜயத்தின் போதும், ‘அப்துல்-பஹாவைப் பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட உதாரணபுருஷர் திரையிடல்-அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்காட்சியைப் பார்ப்பது, மற்றும் பிரார்த்தனைகள், இசை மற்றும் பஹாய் எழுத்துக்களின் மேற்கோள்களின் வாசிப்புகளைக் கொண்ட பக்தி நிகழ்ச்சி ஆகியவை அடங்கும்.
நோர்ட்டெ டெல் கௌக்கா, கொலம்பியா
நகர மேயர்கள், அருகிலுள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற இடங்களில் வசி்ப்போரும் இந்த வழிபாட்டு இல்லத்தில் நூறாம் ஆண்டு நினைவேந்தல் குறித்த ஒரு விசேஷ நிகழ்வுக்காக ஒன்றுகூடுவர்.
பனாமா நகர், பனாமா
வரும் நாள்களில், உள்ளூர் பஹாய் ஸ்தாபனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் இந்த வழிபாட்டு இல்லத்தில் நடைபெறும். நிகழ்ச்சியில் குழந்தைகளால் இசைக்கப்படும் பிரார்த்தனைகள், இளைஞர்களால் சொல்லப்பட்ட கதைகள் மற்றும் மதத்தின் ஒருமைப்பாடு போன்ற ‘அப்துல்-பஹா குறித்துரைக்கும் கருப்பொருள்கள் பற்றிய பேச்சுக்கள் அடங்கும்.
சாந்தியாகோ, சில்லி
பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பார்வையாளர்கள் உட்பட, ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் பணியைப் பற்றி மேலும் அறிந்திட, வரவிருக்கும் நாட்களில் வழிகாட்டப்பட்ட விஜயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ‘அப்துல்-பஹாவின் உயில் மற்றும் சாசனத்தில் இருந்து இசைப் பகுதிகளை அமைக்கும் புதிய பாடல்களை கோயில் பாடகர் குழு தயாரித்துள்ளது. இந்த பாடல்கள் வாரம் முழுவதும் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
சிட்னி, ஆஸ்த்திரேலியா
பிரார்த்தனைக்கான ஒன்றுகூடல்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைத்து மக்களிடமும் ‘அப்துல்-பஹாவின் அன்பைப் பற்றிய கதைகளைக் கேட்க ஒரு சிறப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்திற்கு சேவை செய்யும் கருப்பொருள் பற்றிய விவாதங்கள் உட்பட., நூற்றாண்டு நினைவேந்தலைக் குறிக்கும் பல கூட்டங்கள் இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.
தன்னா, வானுவாத்து
சமீபத்தில் திறக்கப்பட்ட பசிபிக் பகுதியில் உள்ள முதல் உள்ளூர் பஹாய் கோவிலான இந்த வழிபாட்டு இல்லம் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியுடன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கவிருக்கின்றது. பங்கேற்பாளர்களில் பாரம்பரிய தலைவர்கள், பல்வேறு நம்பிக்கை சமூகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
வில்மட், ஐக்கிய அமெரிக்கா
கோவிலின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் பக்தி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ‘அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய காப்பகப் பொருட்களின் கண்காட்சியைப் பார்ப்பதற்கும் அப்பகுதிவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அவர் தொட்ட ஆரம்பகால அமெரிக்க பஹாய்களின் வாழ்க்கை குறித்த பல்வேறு பொருட்களும் இந்த கண்காட்சியில் அடங்கும்.
உலகம் முழுவதும், நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூர்ந்திட பஹாய் உலக மையத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்றனர்
22 நவம்பர் 2021
பஹாய் உலக மையம், 22 நவம்பர் 2021, (BWNS) – உலகம் முழுவதும், நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூர்ந்திட பஹாய் உலக மையத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டத்திற்காக வந்துள்ளனர். இவ்வார நிகழ்வுகள், நாறு ஆண்டுகளுக்கு முன், அப்துல்-பஹா விண்ணேற்றம் அடைந்ததைக் குறிக்கும் வரும் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஒரு நினைவேந்தலுடன் முடிவுறும்.
மானிடத்தின் ஒரு குறுக்களவினரைப் பிரதிநிதிக்கும் இந்த ஒன்றுகூடல், அப்துல்-பஹாவின் பின்வரும் சொற்களைப பிரதிபலிக்கின்றன: “இசையின் பல்வேறு சுரங்கள் ஒன்றுகலந்து ஒரு பூரணமான இசையை உருவாக்குவதைப் போல, மனித குடும்பத்தின் வேறுபாடு அன்புக்கும் இணக்கத்திற்கும் காரணமாக இருக்க வேண்டும்.”
news.bahai.org -இல் இடம்பெற்ற படங்களின் தொகுப்பு, உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகளின் வருகையிலிருந்து சில தருணங்களையும் கடந்த சில நாட்களாக அவர்களிடையிலான தொடர்புகளையும் காண்பிக்கின்றது.
அவர்களின் உள்ளங்களும் எண்ணங்களும் ‘அப்துல்-பஹாவின் மீது இலயித்துள்ள நிலையில், அவர் மறைந்த அதே நிலத்தில் அவரைக் கெளரவிக்க உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பிரதிநிதிகள் புனித நிலத்திற்கு வந்துள்ளனர்.
பாப் பெருமானார் நினைவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யாத்ரீகர் வரவேற்பு மையத்திற்கு பங்கேற்பாளர்கள் வருகின்றனர்
பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலய தளத்திற்குப் பங்கேற்பாளர்கள் வருகின்றனர்.
பாஹ்ஜியில் உள்ள வருகையாளர் மையத்திற்கு வந்தவுடன், பங்கேற்பாளர்களுக்கு வரவிருக்கும் நாள்கள் பற்றிய தகவலை வழங்கும் ஒரு விளக்கமளிப்பில் கலந்துகொள்கின்றனர்.
அன்பு, ஒற்றுமை மற்றும் பக்தி நிறைந்த ஒரு சூழ்நிலையில், பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கான தங்களின் முதல் வருகைக்காகத் பங்கேற்பாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர்.
பஹாய்களுக்கு அதிப்புனிதத் தளமாக விளங்கும் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு ஒரு பங்கேற்பாளர் குழு செல்கின்றது.
ஹைஃபா யாத்ரீகர் இல்லத்திற்கு வெளியே, பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்திற்கான தங்களின் முதல் விஜயத்திற்காக தயாராகின்றனர். அப்துல்-பஹா இக்கட்டிடத்தில்தான் பல யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டார்.
பாப் பெருமானார் நினைவாலயத்தின் அறைகள் மற்றும் கதவுகளின் இட அமைப்புகளைக் காண்பிக்கும் ஒரு படத்தை (அதன் அண்மை காட்சி வலப்புறம்) இரண்டு பங்கேற்பாளர்கள் பார்வையிடுகின்றனர்.
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை அணுகுகின்றனர். இது அப்துல்-பஹாவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது. இங்குதான் அப்துல்-பஹாவின் நல்லுடல் அவரது மறைவுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
பாப் பெருமானார் நினைவாலயத்தைச் சூழ்ந்திருக்கும் பூங்காவில் ஒரு பங்கேற்பாளர் குழு
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்திற்கு மாலை வேளையில் வருகையளிக்கின்றனர்
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தின் சுற்றுப்புறங்களில் அமைதியான சூழலில், அப்துல்-பஹாவின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய அமைதிக்கான அவரது அழைப்பையும் பிரதிபலிக்கின்றனர்.
புனிதநிலத்தில் நடைபெற்ற அப்துல்-பஹா விண்ணேற்ற நூறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்சிகள். இந்த நிகழ்ச்சிகளில் சமய, சமூக, அரசாங்கத்தவர் என பலர் கலந்துகொண்டனர்.
பஹாய் உலக மையம், 20 நவம்பர் 2021, (BWNS) – ‘அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டு நினைவேந்தலுக்கான உலகம் முழுவதுமான ஏற்பாடுகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வைக் குறிப்பதற்காக அவருடன் தொடர்புடைய வரலாற்றுத் தளங்களில் ஹைஃபா மற்றும் ‘அக்காநகரில் சமீபத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள், நகராட்சி அதிகாரிகளையும் அண்டைவாசிகளையும் வரவேற்றன.
ஹபார்சிம் தெருவில் உள்ள ‘அப்துல்-பஹாவின் இல்லத்திற்கு அருகிலுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டிடத்தில் எல்லாப் பின்னணியிலும் உள்ள மக்களுடன் அவரே நடத்திய கூட்டங்களை நினைவுபடுத்தும் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் உணர்வைப் பிரதிபலிக்கும் நூற்றாண்டு நினைவேந்தலில் ஹைஃபாவில், நகரத்தின் மேயர், ஐனாட் கலிஷ்-ரோடெம் மற்றும் பிற நகராட்சி அதிகாரிகள், பல்வேறு மத சமூகங்களைச் சேர்ந்தோர் மற்றும் நகரத்தின் பிற குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்..
அக்காநகரில், 1896 முதல் 1910 வரை எண்ணற்ற விருந்தினர்களைப் வரவேற்ற, அப்துல் பஹா வாழ்ந்த அப்துல்லா பாஷாவின் இல்லத்தில் நடைபெற்ற பொது வரவேற்பானது, நாடு முழுவதும் உள்ள மக்கள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், ஒரு கண்காட்சி மற்றும் அத்தளத்தின் வழிகாட்டப்பட்ட விஜயத்தின் மூலம் ‘அக்காநகரவாசிகளுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பளித்தது..
சிறிது தூரத்தில் உள்ள பாஹ்ஜியில், 1879-ஆம் ஆண்டு, பஹாவுல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ‘அப்துல்-பஹா வாடகைக்கு எடுத்திருந்த ஒரு குடியிருப்பில், ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கை பற்றிய கதைகளைக் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறப்புத் திட்டம் ‘அக்காநகர மேயர், ஷிமோன் லங்க்ரி மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள், பல்வேறு சமூக மற்றும் மதத் தலைவர்கள் – யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் – கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டியது. அங்கு கூடியிருந்தோரில் பலர் அப்பிராந்திய மக்கள் மீது அப்துல்-பஹா ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அக்காநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-ஜஸார் மசூதியின் இமாமும், பாஹ்ஜியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவருமான ஷேக் சமீர் அஸ்ஸி, அப்துல்-பஹாவைப் பற்றிய தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்: “இந்த உயர்வூட்டும் நிகழ்வில் நான் கண்டது என்றென்றும் நிலைத்திருக்கத் தகுதிபெற்றது. இந்தக் கூட்டம் அன்பின் ஆற்றலையும் தன்னலமற்ற சேவையையும் எடுத்துரைத்தது. மனித குலத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்படும் அப்பாஸ் எஃபெண்டியின் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக.
இந்த நிகழ்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை news.bahai.org -யிலும் கீழேயும் பார்க்கலாம்.
ஹைஃபா நகர மேயர் (இடது), எலிநாட் காலிஷ் – ரோட்டம், 10 ஹபார்ஸிம் தெருவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றினார். இந்த இடத்தில் உள்ள கட்டிடம் ‘அப்துல்-பஹாவின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு யாத்ரீகர் இல்லமாக செயல்படுவதற்காக கட்டப்பட்டது.
இந்த வரவேற்பில் பலதரப்பட்ட மத சமூகங்களைச் சேர்ந்தவரும் அண்டைவாசிகளும் கலந்துகொண்டனர்; அனைவரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றுகூடியிருந்தனர்.
நிகழ்ச்சியில் ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய செய்திகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல பேச்சாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தன.
அப்துல்லா பாஷாவின் இல்லத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள், அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் அக்காநகரில் அவரது நினைவாலயத்தின் கட்டுமானம் பற்றிய கண்காட்சியைப் பார்த்தனர்.
அப்துல்லா பாஷாவின் இல்லத்தில் அவர் வாழ்ந்த காலத்தில், ‘அப்துல்-பஹா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் பின்னணியிலிருந்தும் வருகையாளர்களை வழக்கமாகப் பெற்றார். இடதுபுறத்தில் உள்ள படத்தில், அப்துல்லா பாஷா, வீட்டின் முற்றத்தில் போடப்பட்ட ‘அப்துல்-பாஹாவின் கூடாரம். c. 1907.
பாஹ்ஜியில் நடந்த கூட்டத்தில், ‘அக்காவின் மேயர் ஷிமோன் லங்க்ரி, பலதரப்பட்ட வருகையாளர்களிடம் உரையாற்றினார், பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் நாடுகடத்தப்பட்டவர்களாகவும், கைதிகளாகவும் அக்காநகருக்கு வந்திருந்தாலும், அந்நகரத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் இன்னமும் உணரப்படுகிறது.
‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் அப்பகுதிகளில் அவரது நீடித்த தாக்கத்தை கௌரவிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் பல்வேறு வகையான பங்கேற்பாளர்களை வரவேற்றனர்
அப்துல் பஹா மற்றும் அவரது நினைவாலயத்தின் நிர்மாணங்கள் பற்றிய பலகை கண்காட்சி நிகழ்வில் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் பாஹ்ஜியைச் சுற்றியுள்ள தோட்டங்களைப் பார்வையிடவும் வாய்ப்பு கிடைத்தது.
பஹாய் உலகமையம், 18 நவம்பர் 2021, (BWNS) – அப்துல்-பஹா விண்ணேற்றத்தின் நினைவேந்தலைக் குறிப்பதற்கு உலக நீதிமன்றத்தினால் கோரப்பட்ட ‘உதாரணபுருஷர்’ என்னும் காணொளி இன்று bahai.org இணையத்தளத்தில் வெளியீடு கண்டது.
இந்தப் படம் ‘அப்து’ல்-பஹாவின் வாழ்க்கையையும், கடந்த கால மற்றும் தற்போதைய மக்கள் மீது அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் ஆராய்கின்றது. ஓர் அடைக்கலமாகவும், ஒரு கேடயமாகவும் மற்றும் அனைத்து மனிதகுலத்திற்கும் ஓர் அரணாகவும் இருந்த அவரது தனித்துவமான செயல்பாடு, அவருடன் கொண்ட தொடர்பின் மூலம் தங்களின் வாழ்க்கை தன்மைமாற்றம் பெற்ற சில மக்களின் விவரங்களின் மூலம் கிரகிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை உலகம் முழுதுமிருந்து வரும் தேசிய மற்றும் மண்டல ஸ்தாபன உறுப்பினர்களுடன் அனுசரிப்பதற்காக பஹாய் உலகமையத்தில் நடைபெறவிருக்கும் ஓர் ஒன்றுகூடலில் ‘உதாரணபுருஷர்’ திரையிடப்படும்
55 நிமிடங்கள் கொண்ட இந்தப் படம், அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு, பாரசீக, ரஷ்ய, ஸ்பேனிய, மற்றும் சுவாஹிலி மொழிகளில் கிடைக்கும். இப்படம் யூடியூப்பிலும் (Youtube) பார்க்கப்படலாம்.