

3 நவம்பர் 2021
பஹாய் உலக நிலையம், 3 நவம்பர் 2021, (BWNS) – செய்தி சேவையின் சமீபத்திய கதைகள் இம்மாத இறுதியில் நிகழவிருக்கும் அப்துல்-பஹாவின் உலகளாவிய நினைவேந்தல்கள் குறித்து கலை படைப்புகள் மற்றும் பிரசுரங்களின் அதிகரிப்பு பற்றி அறிவித்துள்ளன.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தக் காலகட்டம் பல காணொளிகள் மற்றும் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட்கள் மற்றும் வலைத்தளங்களின் வெளியீட்டைக் கண்டுள்ளது. இது மனிதகுலத்திற்கான அப்துல்-பஹாவின் இடைவிடாத சேவை வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
இந்த தயாரிப்புகளின் மாதிரிகளை news.bahai.org வலைத்தளத்தில் காணலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1545/