
12 நவம்பர் 2021

கிளாஸ்கோ, ஐக்கிய அரசு – கடந்த இரண்டு வாரங்களாக, பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரதிநிதிகள், COP26 என அழைக்கப்படும் 2021 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் ட்டு, சமூகத்திற்கும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
“மனிதகுலம் அதன் இன்றியமையாத ஒருமையை அங்கீகரிக்க வேண்டிய ஒரு முக்கிய தருணத்தில் உள்ளது-நாம் அனைவரும் ஒரே காற்றுமண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், மேலும் வரும் தசாப்தங்களில் நாம் எதிர்கொள்ளும் அழுத்தமான, வாழ்வியல் கேள்விகளுக்கு தீர்வு காண அனைத்து நாடுகளுக்கிடையிலும் ஒத்துழைப்பு தேவை” என்கிறார் மாநாட்டில் BIC இன் நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதி டேனியல் பெரல்.
மாநாட்டிற்கான BIC குழுவில் திரு. பெரெல்கஸாக்ஸ்தானைச் சேர்ந்த திரு செரிக் டோக்போலாட்டுடன் , கென்யாவைச் சேர்ந்த பீட்டர் அபூரி மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த மஜா க்ரோஃப் ஆகியோர் இணைந்தார்.

விவாதங்களுக்கான அவர்களின் பங்களிப்புகளில், BIC பிரதிநிதிகள் பல உறுதியான பரிந்துரைகளை வழங்கினர். “இயற்கை உலகுடன் மனிதகுலத்தின் உறவின் அம்சங்களை ஒருங்கிணைக்க ஒரு பொறிமுறையின் (mechanism) தேவை உள்ளது” என திரு. பெரல் கூறினார்.
“உதாரணமாக, அத்தகைய பொறிமுறையானது சுற்றுச்சூழல் இலக்குகளைச் சுற்றி நிதி வளங்களைத் திரட்டவும், அவற்றின் விநியோகத்தை மேற்பார்வையிடவும் உதவிடும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளிலிருந்து விலகி, மேலும் நிலையான மாற்றுகளை நிறுவுவதற்கு தேசிய அரசாங்கங்களுக்கு இது ஆதரவு நல்கிடக் கூடும்.
தொடர்ந்து திரு. பெரெல், இது முயற்சிகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு சாத்தியமான வழி என்றாலும், முக்கிய விஷயம் யாதெனில், ஒருமித்த கருத்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும், மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு அணுகுமுறையும் அல்லது பொறிமுறையும் அதன் முழுமைநிலையில் பார்க்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர்: “இறுதியில், வேறுபட்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள், ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டால், அது காலநிலை மாற்றத்தை மேற்பார்வையிடும் நிர்வாக அமைப்புகளில் அதிக ஒத்திசைவை உறுதி செய்திடும்.”

பன்னிரண்டு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது மற்றும் 120-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், அத்துடன் பல சிவில் சமூக அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் காலநிலை ஆர்வலர்கள், கிளாஸ்கோ, ஸ்காட்லாந்தில், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆய்வு செய்வதற்காக அம்மாநாடு ஒன்றிணைத்துள்ளது.
விவாதங்களுக்கான அவர்களின் பங்களிப்புகளில், BIC பிரதிநிதிகள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழலின் சுரண்டல் மற்றும் சீரழிவுடன் தொடர்புடைய அதிகப்படியான பொருள்முதல்வாதம் தொடர்பான தார்மீக கேள்விகளை ஆராய்ந்தனர்.
“வளர்ச்சி என்பது பெரும்பாலும் லௌகீகப் பொருட்களை ஈட்டுவதற்கான திறனை விரிவாக்குவதன் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காலநிலை மாற்றம் மீளமுடியாத விளைவுகளுக்கு வழிவகுப்பதற்கு முன், மேம்பாடு என்றால் என்ன என்பது பற்றிய கருத்துக்கள் அவசரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என டாக்டர் டோக்போலாட் கூறினார்.
திரு. அபூரி மேலும் விரிவுபடுத்தினார்: “இந்தத் திசையிலான இயக்கமானது, பொருளாதார ஏற்பாடுகள் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் பொது நலன்களின்படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டுவதை தேவையாக்கும்.”
பல்வேறு மன்றங்களில் BIC பிரதிநிதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட மற்ற கருப்பொருள்கள் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் சர்வதேச கட்டமைப்புகளின் பங்கை உள்ளடக்கியிருந்தன, BIC தனது அறிக்கையில் “ஒரு பொருத்தமான ஆளுமை: மானிடமும் ஓர் உலகளாவிய ஒழுங்குமுறையை நோக்கிய பாதை” என்னும் அறிக்கையில் இதை ஆராய்ந்துள்ளது.
பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்பான சர்வதேச சுற்றுச்சூழல் மன்றம் நடத்திய கலந்துரையாடலில், பருவநிலை நடவடிக்கைக்கு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்வது எவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கும் என்பதை திருமதி கிராஃப் விளக்கினார். “உலகளாவிய பருவநிலை கொள்கை தீர்வுத்தளத்திற்கான பரிந்துரை எங்களிடம் உள்ளது, இதன் மூலம் நாடுகள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம் மற்றும் காலநிலை கொள்கைகளை செயல்படுத்துவதை உண்மையில் துரிதப்படுத்தலாம்,” என அவர் கூறினார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தனிநபர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கையும் BIC பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
“கோவிட் பெருந்தொற்று தனிநபர்களின் உள்ளூர் நடவடிக்கைகளின் சக்தியைக் காட்டுகிறது. குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடையே பொதுவான நன்மையை நோக்கிய ஓர் உண்மையான ஊக்கமளிக்கும் ஆற்றலை நாங்கள் கண்டிருக்கிறோம்,” என உலக வனவிலங்கு நிதியத்தால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு. பெரல் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: “இது ஆர்வநம்பிக்கைக்கான ஆதாரமாகும், இதிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெறலாம் மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் பல சவால்களை நாம் கூட்டாக எதிர்கொள்ளும்போது இந்த மன்றங்களில் விவாதங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1548/