
12 நவம்பர் 2021

தன்னா, வானுவாத்து, 12 நவம்பர் 2021, (BWNS) – வானுவாத்துவில் உள்ள உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லம் சனிக்கிழமை காலை திறக்கப்படுவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை, இரவு 10:00 மணிக்குத் GMT தொடங்கும் அர்ப்பண விழாவை முன்னிட்டு, நாடு முழுவதிலும் இருந்து பெருகி வரும் மக்கள், தன்னா தீவில் உள்ள கோவில் தளத்திற்கு வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருக்கிறார்கள். .
“நாங்கள் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றோம்! திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வந்துள்ளனர்” என போர்ட் வில்லாவில் இருந்து வந்தவர்களில் ஒருவரான சிமோன் கூறுகிறார்.
தொடர்ந்து அவர் கூறுவதாவது: “வழிபாட்டு இல்லத்தின் கதவுகள் இன்னும் திறக்கப்படாவிட்டாலும், தங்கள் சமூகத்திற்கு சேவை செய்ய ஏற்கனவே பலரை அது ஊக்கப்படுத்தியுள்ளது.”
இந்த வார தொடக்கத்தில் வந்த இஃபிரா தீவைச் சேர்ந்த மற்றொரு பங்கேற்பாளர், சனிக்கிழமை அர்ப்பணிப்பு விழாவின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார், இந்த தருணத்திற்கு வழிவகுத்த முந்தைய தலைமுறையினரின் முயற்சிகளை நினைவு கூர்ந்தார்.
“அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக இந்த மண்ணின் முதல் பஹாய்களாக இருந்த, அவர்களின் தாத்தா பாட்டி மற்றும் கொள்ளு தாத்தாக்கள் மேற்கொண்ட அதே முயற்சிகளின் ஒரு பகுதியாக தங்களைக் கருதும் என் பிள்ளைகளுடன் நான் இங்கு பயணம் செய்து வந்துள்ளேன்.”