

பஹாய் உலகமையம், 18 நவம்பர் 2021, (BWNS) – அப்துல்-பஹா விண்ணேற்றத்தின் நினைவேந்தலைக் குறிப்பதற்கு உலக நீதிமன்றத்தினால் கோரப்பட்ட ‘உதாரணபுருஷர்’ என்னும் காணொளி இன்று bahai.org இணையத்தளத்தில் வெளியீடு கண்டது.
இந்தப் படம் ‘அப்து’ல்-பஹாவின் வாழ்க்கையையும், கடந்த கால மற்றும் தற்போதைய மக்கள் மீது அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் ஆராய்கின்றது. ஓர் அடைக்கலமாகவும், ஒரு கேடயமாகவும் மற்றும் அனைத்து மனிதகுலத்திற்கும் ஓர் அரணாகவும் இருந்த அவரது தனித்துவமான செயல்பாடு, அவருடன் கொண்ட தொடர்பின் மூலம் தங்களின் வாழ்க்கை தன்மைமாற்றம் பெற்ற சில மக்களின் விவரங்களின் மூலம் கிரகிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை உலகம் முழுதுமிருந்து வரும் தேசிய மற்றும் மண்டல ஸ்தாபன உறுப்பினர்களுடன் அனுசரிப்பதற்காக பஹாய் உலகமையத்தில் நடைபெறவிருக்கும் ஓர் ஒன்றுகூடலில் ‘உதாரணபுருஷர்’ திரையிடப்படும்
55 நிமிடங்கள் கொண்ட இந்தப் படம், அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு, பாரசீக, ரஷ்ய, ஸ்பேனிய, மற்றும் சுவாஹிலி மொழிகளில் கிடைக்கும். இப்படம் யூடியூப்பிலும் (Youtube) பார்க்கப்படலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1551/