அப்துல்-பஹா மறைவின் நூறாம் ஆண்டு: புனிதநிலத்தில் அவரது வாழ்க்கையை நினைவுகூர்தல்


புனிதநிலத்தில் நடைபெற்ற அப்துல்-பஹா விண்ணேற்ற நூறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்சிகள். இந்த நிகழ்ச்சிகளில் சமய, சமூக, அரசாங்கத்தவர் என பலர் கலந்துகொண்டனர்.

பஹாய் உலக மையம், 20 நவம்பர் 2021, (BWNS) – ‘அப்துல்-பஹா  மறைவின் நூற்றாண்டு நினைவேந்தலுக்கான உலகம் முழுவதுமான ஏற்பாடுகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வைக் குறிப்பதற்காக அவருடன் தொடர்புடைய வரலாற்றுத் தளங்களில் ஹைஃபா மற்றும் ‘அக்காநகரில் சமீபத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள், நகராட்சி அதிகாரிகளையும் அண்டைவாசிகளையும் வரவேற்றன.

ஹபார்சிம் தெருவில் உள்ள ‘அப்துல்-பஹாவின் இல்லத்திற்கு அருகிலுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டிடத்தில் எல்லாப் பின்னணியிலும் உள்ள மக்களுடன் அவரே நடத்திய கூட்டங்களை நினைவுபடுத்தும் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் உணர்வைப் பிரதிபலிக்கும் நூற்றாண்டு நினைவேந்தலில் ஹைஃபாவில், நகரத்தின் மேயர், ஐனாட் கலிஷ்-ரோடெம் மற்றும் பிற நகராட்சி அதிகாரிகள், பல்வேறு மத சமூகங்களைச் சேர்ந்தோர் மற்றும் நகரத்தின் பிற குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்..

அக்காநகரில், 1896 முதல் 1910 வரை எண்ணற்ற விருந்தினர்களைப் வரவேற்ற, அப்துல் பஹா வாழ்ந்த அப்துல்லா பாஷாவின் இல்லத்தில் நடைபெற்ற பொது வரவேற்பானது, நாடு முழுவதும் உள்ள மக்கள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், ஒரு கண்காட்சி மற்றும் அத்தளத்தின் வழிகாட்டப்பட்ட விஜயத்தின் மூலம் ‘அக்காநகரவாசிகளுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பளித்தது..

சிறிது தூரத்தில் உள்ள பாஹ்ஜியில், 1879-ஆம் ஆண்டு, பஹாவுல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ‘அப்துல்-பஹா வாடகைக்கு எடுத்திருந்த ஒரு குடியிருப்பில், ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கை பற்றிய கதைகளைக் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறப்புத் திட்டம் ‘அக்காநகர மேயர், ஷிமோன் லங்க்ரி மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள், பல்வேறு சமூக மற்றும் மதத் தலைவர்கள் – யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் – கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டியது. அங்கு கூடியிருந்தோரில் பலர் அப்பிராந்திய மக்கள் மீது அப்துல்-பஹா ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அக்காநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அல்-ஜஸார் மசூதியின் இமாமும், பாஹ்ஜியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவருமான ஷேக் சமீர் அஸ்ஸி, அப்துல்-பஹாவைப் பற்றிய தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்: “இந்த உயர்வூட்டும் நிகழ்வில் நான் கண்டது என்றென்றும் நிலைத்திருக்கத் தகுதிபெற்றது. இந்தக் கூட்டம் அன்பின் ஆற்றலையும் தன்னலமற்ற சேவையையும் எடுத்துரைத்தது. மனித குலத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்படும் அப்பாஸ் எஃபெண்டியின் ஆன்மாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக.

இந்த நிகழ்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை news.bahai.org -யிலும் கீழேயும் பார்க்கலாம்.

ஹைஃபா நகர மேயர் (இடது), எலிநாட் காலிஷ் – ரோட்டம், 10 ஹபார்ஸிம் தெருவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றினார். இந்த இடத்தில் உள்ள கட்டிடம் ‘அப்துல்-பஹாவின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு யாத்ரீகர் இல்லமாக செயல்படுவதற்காக கட்டப்பட்டது.
இந்த வரவேற்பில் பலதரப்பட்ட மத சமூகங்களைச் சேர்ந்தவரும் அண்டைவாசிகளும் கலந்துகொண்டனர்; அனைவரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றுகூடியிருந்தனர்.
நிகழ்ச்சியில் ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய செய்திகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல பேச்சாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தன.
அப்துல்லா பாஷாவின் இல்லத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள், அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் அக்காநகரில் அவரது நினைவாலயத்தின் கட்டுமானம் பற்றிய கண்காட்சியைப் பார்த்தனர்.
அப்துல்லா பாஷாவின் இல்லத்தில் அவர் வாழ்ந்த காலத்தில், ‘அப்துல்-பஹா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் பின்னணியிலிருந்தும் வருகையாளர்களை வழக்கமாகப் பெற்றார். இடதுபுறத்தில் உள்ள படத்தில், அப்துல்லா பாஷா, வீட்டின் முற்றத்தில் போடப்பட்ட ‘அப்துல்-பாஹாவின் கூடாரம். c. 1907.
பாஹ்ஜியில் நடந்த கூட்டத்தில், ‘அக்காவின் மேயர் ஷிமோன் லங்க்ரி, பலதரப்பட்ட வருகையாளர்களிடம் உரையாற்றினார், பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் நாடுகடத்தப்பட்டவர்களாகவும், கைதிகளாகவும் அக்காநகருக்கு வந்திருந்தாலும், அந்நகரத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் இன்னமும் உணரப்படுகிறது.
‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் அப்பகுதிகளில் அவரது நீடித்த தாக்கத்தை கௌரவிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் பல்வேறு வகையான பங்கேற்பாளர்களை வரவேற்றனர்
அப்துல் பஹா மற்றும் அவரது நினைவாலயத்தின் நிர்மாணங்கள் பற்றிய பலகை கண்காட்சி நிகழ்வில் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் பாஹ்ஜியைச் சுற்றியுள்ள தோட்டங்களைப் பார்வையிடவும் வாய்ப்பு கிடைத்தது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1552/