உலகம் முழுவதும், நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூர்ந்திட பஹாய் உலக மையத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வருகின்றனர்
22 நவம்பர் 2021
பஹாய் உலக மையம், 22 நவம்பர் 2021, (BWNS) – உலகம் முழுவதும், நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூர்ந்திட பஹாய் உலக மையத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டத்திற்காக வந்துள்ளனர். இவ்வார நிகழ்வுகள், நாறு ஆண்டுகளுக்கு முன், அப்துல்-பஹா விண்ணேற்றம் அடைந்ததைக் குறிக்கும் வரும் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ஒரு நினைவேந்தலுடன் முடிவுறும்.
மானிடத்தின் ஒரு குறுக்களவினரைப் பிரதிநிதிக்கும் இந்த ஒன்றுகூடல், அப்துல்-பஹாவின் பின்வரும் சொற்களைப பிரதிபலிக்கின்றன: “இசையின் பல்வேறு சுரங்கள் ஒன்றுகலந்து ஒரு பூரணமான இசையை உருவாக்குவதைப் போல, மனித குடும்பத்தின் வேறுபாடு அன்புக்கும் இணக்கத்திற்கும் காரணமாக இருக்க வேண்டும்.”
news.bahai.org -இல் இடம்பெற்ற படங்களின் தொகுப்பு, உலகெங்கிலும் இருந்து பிரதிநிதிகளின் வருகையிலிருந்து சில தருணங்களையும் கடந்த சில நாட்களாக அவர்களிடையிலான தொடர்புகளையும் காண்பிக்கின்றது.
அவர்களின் உள்ளங்களும் எண்ணங்களும் ‘அப்துல்-பஹாவின் மீது இலயித்துள்ள நிலையில், அவர் மறைந்த அதே நிலத்தில் அவரைக் கெளரவிக்க உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பிரதிநிதிகள் புனித நிலத்திற்கு வந்துள்ளனர்.
பாப் பெருமானார் நினைவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யாத்ரீகர் வரவேற்பு மையத்திற்கு பங்கேற்பாளர்கள் வருகின்றனர்
பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலய தளத்திற்குப் பங்கேற்பாளர்கள் வருகின்றனர்.
பாஹ்ஜியில் உள்ள வருகையாளர் மையத்திற்கு வந்தவுடன், பங்கேற்பாளர்களுக்கு வரவிருக்கும் நாள்கள் பற்றிய தகவலை வழங்கும் ஒரு விளக்கமளிப்பில் கலந்துகொள்கின்றனர்.
அன்பு, ஒற்றுமை மற்றும் பக்தி நிறைந்த ஒரு சூழ்நிலையில், பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கான தங்களின் முதல் வருகைக்காகத் பங்கேற்பாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர்.
பஹாய்களுக்கு அதிப்புனிதத் தளமாக விளங்கும் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு ஒரு பங்கேற்பாளர் குழு செல்கின்றது.
ஹைஃபா யாத்ரீகர் இல்லத்திற்கு வெளியே, பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்திற்கான தங்களின் முதல் விஜயத்திற்காக தயாராகின்றனர். அப்துல்-பஹா இக்கட்டிடத்தில்தான் பல யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டார்.
பாப் பெருமானார் நினைவாலயத்தின் அறைகள் மற்றும் கதவுகளின் இட அமைப்புகளைக் காண்பிக்கும் ஒரு படத்தை (அதன் அண்மை காட்சி வலப்புறம்) இரண்டு பங்கேற்பாளர்கள் பார்வையிடுகின்றனர்.
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை அணுகுகின்றனர். இது அப்துல்-பஹாவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது. இங்குதான் அப்துல்-பஹாவின் நல்லுடல் அவரது மறைவுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
பாப் பெருமானார் நினைவாலயத்தைச் சூழ்ந்திருக்கும் பூங்காவில் ஒரு பங்கேற்பாளர் குழு
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்திற்கு மாலை வேளையில் வருகையளிக்கின்றனர்
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தின் சுற்றுப்புறங்களில் அமைதியான சூழலில், அப்துல்-பஹாவின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் உலகளாவிய அமைதிக்கான அவரது அழைப்பையும் பிரதிபலிக்கின்றனர்.