அப்துல்-பஹாவின் நினைவாலயம்: கட்டுமானம் குறித்து ஒரு குறுவிளக்கக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது


நினைவாலய கட்டுமானம் குறித்த ஒரு குறுவிளக்கக் காணொளி

26 நவம்பர் 2021

பஹாய் உலக மையம் – நூற்றாண்டுக்கால நினைவேந்தலுக்காக உலக நீதிமன்றத்தால் கோரப்பட்ட, அப்துல்-பஹாவின் நினைவாலய கட்டுமானம் குறித்த ஒரு குறுவிளக்கக் காணொளி இன்று வெளியிடப்பட்டது.

நேற்று பஹாய் உலக மையத்தில் நூற்றாண்டுக்கால நினைவேந்தல் ஒன்றுகூடலின் போது திரையிடப்பட்ட இந்த 15 நிமிட விளக்கப்படம், அப்துல்-பஹாவின் நினைவாலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் குறித்த அம்சங்களை ஆராய்வதுடன், அத்திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள மக்களுடனான நேர்காணலையும் வழங்குகிறது.

இப்படத்தை மேல்காணும் காணொளியிலும் யூட்டியூப்பிலும் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1557/