வழிபாட்டு இல்லங்கள்: பஹாய் கோவில்கள் நினைவேந்தல்களுக்கான குவிமையங்கள் ஆகின
30 நவம்பர் 2021
அப்பியா, சமோவா – சமோவா தீவில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, அப்பியாவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம், உலகின் பஹாய் கோயில்களில் நூற்றாண்டு நினைவேந்தலுக்கான முதல் தளமாகியது.
அடுத்த 19 மணி நேரத்தில், தன்னா, வனுவாத்து, சிட்னி, ஆஸ்திரேலியா; பத்தம்பாங், கம்போடியா; புது டில்லி, இந்தியா; மாத்துண்டா சோய், கென்யா; கம்பாலா, உகாண்டா; பிராங்க்பர்ட், ஜெர்மனி; சாண்டியாகோ, சிலி; நோர்ட்டே டெல் கௌக்கா, கொலம்பியா; பனாமா நகரம், பனாமா; மற்றும் வில்மெட், யுனைடெட் ஸ்டேட்ஸ் வழிபாட்டு இல்லங்கள்; ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான பிரதிபலிப்புக்காக பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, நினைவேந்தல்களின் மையப் புள்ளிகளாக மாறின.
கீழே உள்ள படங்களின் தொகுப்பு, உலகம் முழுவதும் உள்ள பஹாய் கோவில்களில் நடைபெறும் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகளின் ஒரு காட்சியை வழங்குகிறது.
அப்பியா, சமோவா
அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய கதைகள் எல்லா வயதினராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டனஆரம்பத்தில் கோவிலில் ஒரு வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது
தன்னா, வானுவாத்து
நூறாம் ஆண்டு நினைவேந்தலில் போது புதிதாக அர்ப்பணம் செய்யப்ப்டட தன்னா, வானுவாத்து வழிபாட்டு இல்லத்தின் உட்புற காட்சிநினைவேந்தலுக்கு அடுத்தநாள் கோவிலில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு வருகையாளரின் வரவுஇந்த நிகழ்வில் அரசாங்க அதிகாரிகள், தேசிய மற்றும் உள்ளூர் ஆட்சிமன்றங்களின் தலைவர்கள், பொது சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்நுற்றாண்டு நிகழ்ச்சியில் அரசாங்க அதிகாரிகள், தலைவர்கள், பஹாய் சமூக உறுப்பினர்கள்
சிட்னி, ஆஸ்த்திரேலியா
நினைவேந்தல் இரவின் போது சிட்சி கோவிலின் காட்சிநினைவேந்தல் நிகழ்வில் பிரார்த்தனைகளும் மேற்கோள்களும் வாசிக்கப்பட்டனகோவிலில் குழந்தைகளுக்கான ஒரு விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் அதில் அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்நினைவேந்தலில் கோவில் பாடகர் குழு
பத்தம்பாங், கம்போடியா
நடுப்பகல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பத்தம்பாங் பகுதிவாசிகள் கோவிலுக்கு வருகின்றனர்பத்தம்பாங் கோவிலில் ஒரு வழிபாட்டு நிகழ்வுமாலை நிகழ்வில் பங்கேற்பாளர்கள்
புது டில்லி, இந்தியா
அதன் தாமரைப் பூ வடிவத்தினால் கமலாலயம் எனப்படும் கோவிலின் இரவுக் காட்சிபுது டில்லி வழிபாட்டு இல்லத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் வழிபாடு, பஹாய் வாசகங்களிலிருந்து மேற்கோள்களின் வாசிப்பு ஆகியவை அடங்கும்.முறையான நினைவேந்தல் நிகழ்வில் ஒரு பாடல் குழு அப்துல்-பஹாவைப் பற்றிய ஒரு கண்காட்சி உட்பட, கோவிலில் வழிகாட்டப்ப்ட்ட ஒரு விஜயத்தின் பங்கேற்பாளர்
மாத்துன்டா, சோய்
கோவிலில் வழிபாட்டு நிகழ்வின் போத் பஹாய் திருவாசங்கள் வாசிக்கப்பட்டனநினைவேந்தலில் இளைஞர்களின் இசை நிகழ்வு
கம்பாலா, உகாண்டா
கம்பாலா வாசிகள் நினைவேந்தல் நிகழ்வுக்கு கோவிலுக்கு வருகின்றனர்வழிபாட்டு நிகழ்வுக்காக கோவிலினுள் கூடியுள்ள வருகையாளர்களின் காட்சிவழிபாட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ‘அப்துல் பஹாவின் வாழ்க்கை வரலாறுகளை இளைஞர்கள் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் ஆலய மைதானத்தில் நடைபெற்றது.
பிராங்க்ஃபர்ட், ஜெர்மனி
இரவில் பிராங்க்ஃபர்ட் கோவிலின் ஆகாய காட்சிமுறையான நினைவேந்தல் நிகழ்வு கோவிலுக்குள் நடைபெற்றதுலாந்தர்கள் செய்தல் போன்ற, குழந்தைகளுக்கான ஒரு விசேஷ கலை நடவடிக்கை
சாந்தியாகோ, சிலி
ஆன்டிஸ் மலையடிவாரங்களில் உள்ள சாந்தியாகோ, சிலி கோவில்நினைவேந்தல் நிகழ்வில் பஹாய் பிரார்த்தனைகளும் புனிதவாசகங்களும் உள்ளடங்கியிருந்தனகோவில் பாடல் குழு நினைவேந்தலுக்காக தொகுக்கப்பட்ட இசையமைக்கப்பட்ட அப்துல் பஹாவின் உயில் மற்றும் சாசனத்திலிருந்து பாடுகின்றனர் கோவிலுக்கு வருகை தந்தோருக்கான வழிகாட்டப்பட்ட விஜயத்தில் அப்துல் பஹாவின் வாழ்க்கை குறித்த ஒரு கண்காட்சியும் இடம்பெற்றது
நோர்ட்டே டெல் கௌக்கா, கொலம்பியா
கோவிலின் இரவுக் காட்சிமாலை வழிபாட்டு நிகழ்வில் கோவிலின் உட்புற காட்சி கோவில் தளத்தில் நூறாம் நினைவாண்டை கௌரவிக்கும் வகையில் குழந்தைகளும் இளைஞர்களும் சேவை செயல்களில் ஈடுபடுகின்றனர் நினைவேந்தலுக்கு முந்தைய வாரங்களில், இளைஞர்கள் ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களைப் படிக்கவும், மனிதகுலத்திற்கான அவரது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும் வழிபாட்டு இல்லத்தில் ஒன்றுகூடினர்.
பனாமா நகரம், பனாமா
பனாமா கோவிலில் நினைவேந்தல் நிகழ்வுக்கு பங்கேற்பாளர்கள் வருகின்றனர்நிகழ்வில் பிரார்த்தனைகளும் அப்துல்-பஹாவின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றிய உரைகள் இடம்பெற்றனகோவிலின் துணைக் கட்டிடத்தில் ‘அப்துல்-பஹா’ பற்றிய விளக்கக்காட்சியைப் பார்க்கின்றனர்
வில்மட், ஐக்கிய அமெரிக்கா
கோவலின் வெளிப்புற காட்சி. நினைவேந்தலுக்கான பகல் நிகழ்வுக்கு பங்கேற்பாளர்கள் வருகின்றனர்.கோவிலின் உட்புற காட்சி. மாலை நிகழ்வில் பாடல் குழுவின் வழங்கள்அப்துல்-பஹாவுடனான கோவிலின் தொடர்பு பற்றிய ஒரு கண்காட்சி வழங்கப்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வட அமெரிக்க விஜயத்தின் போது அப்துல்-பஹாவினால் வைக்கப்பட்ட கோவிலுக்கான அடிக்கல் இப்படத்தில் காணப்படுகின்றது