பாப்புவா நியூ கினி: பஹாய் அதிப்புனித நூல் தொக் பிஸின் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது


கித்தாப்-இ-அக்டாஸின் தொக் பிஸின் மொழிபெயர்ப்பு

14 டிசம்பர் 2021

போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினி – பஹாவுல்லாவின் அதிப்புனித நூலான கித்தாப்-இ-அக்டாஸ், பாப்புவா நியூ கினியில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளில் மிகவும் பரவலாகப் பேசப்படும் தோக் பிஸின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“இது ஓர் அற்புதமான வளர்ச்சியாகும், இது பலருக்கு பஹாவுல்லாவின் தன்மைமாற்றும் வார்த்தைகளை அவர்களின் சொந்த மொழியில் கிடைப்பதற்கு வழிசெய்கிறது” என பாப்புவா நியூ கினியின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்பூசியஸ் இக்கொய்ரேரே கூறுகிறார்.

கிதாப்-இ-அக்தாஸ் என்பது பஹாவுல்லாவின் சட்ட நூலாகும், இது முதன்முதலில் அரபு மொழியில் 1873-இல் எழுதப்பட்டது, அவர் அப்போது இன்னும் ‘அக்கா நகருக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தார். கித்தாப்-இ-அக்டாஸின் முதல் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 1992-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது, அந்த ஆண்டு பஹாவுல்லாவின் நூற்றாண்டுக்கால நினைவேந்தலைக் குறித்தது, அதைத் தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களாகப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

திரு. Ikoirere, அந்த குறிப்பிடத்தக்க ஆண்டை நினைவு கூர்ந்தார்: “கித்தாப்-இ-அக்டாஸ் ஆங்கிலத்தில் வெளியானதும் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டது. இந்த விலைமதிப்பற்ற புத்தகத்தின் பிரதிகளை வைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல சமூகங்களில் விசேஷ கட்டமைப்புகள் கட்டப்பட்டன.

மொழிபெயர்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கிய மார்ஷா மிலானி, பஹாவுல்லாவின் கித்தாப்-இ-அக்டாஸை தோக் பிஸினில் கிடைக்கச் செய்வதற்கான முயல்வை விவரிக்கின்றார்: “(பஹாவுல்லாவின்) பல எழுத்துக்களை இந்த மொழியில் மொழிபெயர்ப்பதில் பல வருடகால அனுபவத்திற்குப் பிறகே, அதிப்புனித நூலின் பொழிபெயர்ப்பு வேலையின் ஆரம்பம் சாத்தியமாயிற்று.

அவர் தொடர்கிறார்: “நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொக் பிஸின் மொழி பேசுபவர்கள் இதில் ஈடுபட்டனர். வெவ்வேறு மண்டலங்களின் உச்சரிப்பு, சொற்களஞ்சியம் மற்றும் இலக்கணத்தில் கணிசமான வேறுபாடுகள் இருப்பதால், இவர்கள் செயல்முறையில் நெருக்கமாக ஈடுபட்டனர்.”

2017 இல் தொடங்கிய ஓர் உன்னிப்பான சுத்திகரிப்பு மற்றும் மறுஆய்வு செயல்முறை, தோக் பிஸின் மொழிபெயர்ப்பு இந்த மொழியைப் பேசுபவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருப்பதை உறுதி செய்துள்ளது என திரு. இக்கோய்ரேரே விளக்கினார். “கடவுளின் வார்த்தை எல்லையற்ற ஆற்றல் கொண்டது. தன்மைமாற்றும் ஆற்றல் அதற்கு உண்டு” என்று திரு. இக்கோய்ரேரே தொடர்கிறார். “பாப்புவா நியூ கினியில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் அவர்கள் வாழும் சமூகங்களிலும் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என நான் நினைக்கிறேன்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1566/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: