

15 டிசம்பர் 2021
எடிர்னே, துருக்கி – ‘அப்துல்-பஹா மறைந்த நூற்றாண்டுக்கால நினைவேந்தலில், எடிர்னே மேயர், ரிசெப் குர்கன் மற்றும் பஹாய் சமூகத்தின் பிரதிநிதியான செம்செட்டின் ஆஸ்டுர்க், பஹாய் வரலாற்றில் அந்த நகரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அப்துல்-பஹாவுடனான அதன் தொடர்பு பற்றியும் கலந்துரையாட சமீபத்தில் சந்தித்தனர்.
பஹாவுல்லா, ‘அப்துல்-பஹா மற்றும் ஒரு சிறிய நம்பிக்கையாளர் குழு அக்கா நகருக்கு நாடுகடத்தப்படுவதற்கு முன்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடிர்னேயில் வாழ்ந்தனர். அந்த நேரத்தில் அந்த நகர் ஏட்ரியானோப்பிள் என அழைக்கப்பட்டது.
நூற்றாண்டு நினைவேந்தலை முன்னிட்டு திரு. குர்கன் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார். அந்தச் செய்தியின் ஒரு பகுதி: “அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டு நினைவேந்தலை நான் மரியாதையுடன் நினைவுகூர்கின்றேன். … நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஒன்றாக வாழ்ந்து வரும் எடிர்னேயில் உங்கள் சமூகத்தின் இருப்பு, நகரத்தின் கலாச்சார செழுமையைக் கூட்டுகிறது மற்றும் எங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. மேயரின் செய்தி தொடர்கிறது: “உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து பஹாய்களையும் எடிர்னேயில் உள்ள பஹாய் புனித ஸ்தலங்களையும், அதன் விளைவாக எங்கள் நகரத்தையும் பார்வையிட நாங்கள் அழைக்கின்றோம். எடிர்னேயின் கலாச்சாரத் தூதுவர்களாக, உலகின் பஹாய்கள் நமது நகரத்தை மேம்படுத்துவதில் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டு நினைவேந்தலையொட்டி, புனிதர் அப்துல்-பஹாவின் அடிச்சுவடுகளைத் தாங்கி நிற்கும் எடிர்னேயில் இருந்து எங்கள் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1567/