ஆலோசகர்கள் மாநாடு ஆரம்பமாகிவிட்டது


அனைத்துலக போதனை மையம்

30 டிசம்பர் 2021

பஹாய் உலகமையம் – கண்ட வாரிய ஆலோசகர்களின் மாநாடு இன்று காலை தொடங்கியது.

பஹாய் சமயத்தின் மூத்த அதிகாரிகளின் கூட்டமானது, மாநாட்டில் உலக நீதிமன்றத்தின் ஒரு முக்கிய செய்தியைப் படிப்பதன் மூலம் தொடங்கியது.சமுதாய தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கான முயற்சிகளில் உலகளாவிய பஹாய் சமூகத்தின் முன் இருக்கும் முன்னுரிமைகளை இந்தச் செய்தி எடுத்துக்காட்டுவதுடன் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.

நீதி மன்றம் தனது செய்தியின் தொடக்க வரிகளில், அனைத்து மனிதர்களும் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றிய பஹாவுல்லாவின் கூற்றுகளில் ஒன்றை நினைவுபடுத்துகிறது: ““முற்றிலும் வெறுமைநிலையிலிருந்து, மாள்வுக்குரிய மனிதர் படைப்புலகிற்குள் பிரவேசித்துள்ளதன் நோக்கமே, அவர்கள் உலகின் மேம்பாட்டிற்கு உழைத்து, தோழமை, நல்லிணக்கம் ஆகியவற்றுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே.”

அந்தச் செய்தி கூறுவதாவது: “இந்தக் கூட்டு நோக்கத்தை உணர்வுபூர்வமாகப் பின்பற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவது இந்த தலைமுறையின் பணி மட்டுமல்ல, வரும் தலைமுறையினரின் பணியும் கூட.”

அனைதத்துலக போதனை மையம்

அவர்கள் ஈடுபட்டுள்ள கூட்டு நிறுவனத்தில் பஹாய்களின் அணுகுமுறையை விவரிக்கும் அச்செய்தி, “உண்மையான மதம்” எவ்வாறு “இதயங்களை தன்மைமாற்றும் மற்றும் அவநம்பிக்கையை வெல்லும்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். ஆதலால், அவர்கள் எதிர்காலத்தின்பால் நம்பிக்கையுடன். முன்னேற்றம் ஏற்படக்கூடிய நிலைமைகளை வளர்ப்பதற்கு உழைக்கின்றனர், என அச்செய்தி விளக்குகிறது.”

நீதிமன்றத்தின் செய்தியைப் பற்றிய அவர்களின் கலந்துரையாடலில், பஹாய் போதனைகளின் சமூக நிர்மாணிப்புச் சக்தி, வரவிருக்கும் தசாப்தங்களில் மிகவும் அமைதியான உலகத்தை நோக்கி மனிதகுலத்தை எவ்வாறு இயக்க முடியும் என்பதைப் பற்றி ஆலோசகர்கள் சிந்திப்பார்கள்.

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், உலக நீதிமன்றம் உலகம் முழுவதும் மொத்தம் 90 ஆலோசகர்களை நியமிக்கிறது, அவர்கள் ஐந்து கண்ட வாரியங்களின் மூலம் தங்கள் பணிகளை ஒழுங்கமைக்கின்றனர்.

ஆலோசகர்கள் பஹாய் சமூகத்தில் கற்றலை ஊக்குவிப்பதன் மூலமும், சமூக வாழ்க்கையின் துடிப்பான வடிவத்தின் வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பஹாய் ஆன்மிகச் சபைகளுக்கு ஆதரவளிக்கப் பணிபுரிகின்றனர். ஆலோசகர்களின் ஸ்தாபனத்தில், பஹாய் சமூகம் ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது, அவ்வமைப்பின் மூலம் உலகின் தொலைதூர இடங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் பஹாவுல்லாவின் போதனைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் உலகளாவிய பஹாய் சமூகத்திற்கு பயனளிக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1571/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: