பஹாய் உலக மையம், 30 ஜனவரி 2022, (BWNS) – பஹாய் உலகம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய கட்டுரை, இனவெறியின் விளைவுகளை எதிர்கொள்ள அமெரிக்க பஹாய் சமூகத்தின் முயற்சிகளை ஆராய்கிறது.
“இன அநீதி மற்றும் இன ஒற்றுமைக்கான பஹாய் விடையிறுப்பு: பகுதி 2” என்பது அமெரிக்காவில் இனம் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாகும். 1 மற்றும் 2-ஆம் பாகங்கள் ஒன்றாக, இன அநீதியை எதிர்த்து அமெரிக்காவில் பஹாய்கள் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டில் இனக்கலவரம், பதற்றம் ஆகியவற்றின் பின்னணியில் இன ஒற்றுமைக்காகப் பணியாற்றுவது பற்றிய ஆய்வாகும்.
பாகம் 2, 1996 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட காலகட்டத்தைப் பார்க்கிறது, அப்போது உலகளாவிய பஹாய் சமூகம். உலக நீதிமன்றத்தினால் வழிகாட்டப்பட்டு, மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான அதன் முயற்சிகளை அதிக முறைப்படுத்துவதற்கான ஒரு பாதையில் அமர்த்தப்பட்டது,
அந்த 25 வருட காலப்பகுதியில், “வளர்ச்சிகள் மிக அதிகமாக இருந்த பகுதிகளில், அமெரிக்க பஹாய் சமூகம் சமூக வாழ்க்கையின் புதிய மாதிரிகள் தோன்றுவதையும், அடித்தட்டில் மாற்றத்தின் நுண்காட்சிகளையும் காண முடிந்தது. இந்தப் பாடங்கள் உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் இன ஒற்றுமைக்கான சமூகத்தின் முயற்சியில் உண்மையான முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை அளித்தன.
பஹாய் உலகம் இணையதளம், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குத் தொடர்புடைய கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குவதுடன், உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயல் நிலைகளில் முன்னேற்றங்களைச் சிறப்பித்துக் காட்டுவதுடன் பஹாய் சமயத்தின் இயலாற்றலைப் பற்றியும் பிரதிபலிக்கிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் பஹாய் கோவிலின் பணி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது, 26 மீட்டர் உயரமான குவிமாடத்திற்கான எஃகு மேற்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.
26 ஜனவரி 2022
கின்ஷாஷா, காங்கோ ஜனநாயகக் குடியரசு — காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் 26-மீட்டர் உயரமான குவிமாடத்திற்கான எஃகு மேற்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது, இது கட்டுமானப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. .
வழிபாட்டு இல்லங்கள் பஹாய் போதனைகளில் முக்கிய ஸ்தாபனங்களாக விவரிக்கப்பட்டுள்ளன, அவை வழிபாடு மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பை உறுதியான வடிவத்தில் எடுத்துக்காட்டுகின்றன. இந்த உண்மை கோவில் தளத்திலும் அந்தப் பரந்த நாடு முழுவதிலும் DRC இல் இன்னும் அதிகமாகத் தெளிவாகிறது.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றமும் சுற்றியுள்ள சமூகங்களின் ஆன்மீக வாழ்வில் உருவாகி வரும் கோவிலின் விளைவுகளெனும் ஒளிக்கீற்றுகள் கீழே உள்ள படங்களின் வரிசையில் வழங்கப்பட்டுள்ளன.
கோவிலின் தரை மற்றும் கேலரி மட்ட காண்கிரீட் கட்டமைப்பு பூர்த்தியானவுடன் (மேலே), குவிமாட மேற்கட்டமைப்பிற்குத் தேவையான எஃகு அம்சங்கள் தளத்திற்கு வநதுள்ளன.தொழிலாளர்கள் தரையில் உள்ள எஃகு கூறுகளை மேற்கட்டமைப்பின் பெரிய பகுதிகளாகச் அடுக்கினர், பின்னர் அவை அந்த இடத்திற்கு உயர்த்தப்பட்டன. முதல் பிரிவின் நிறுவல் இங்கே காட்டப்பட்டுள்ளது.குவிமாட அமைப்பு மூன்று முக்கிய கட்டங்களில் எழுப்பப்பட்டது, ஒவ்வொன்றும் ஒன்பது பிரிவுகளைக் கொண்ட வளையத்தை உள்ளடக்கின. இந்த அமைப்பு கேலரி மட்டத்தில் உள்ளது, ஒன்பது கான்கிரீட் ஸ்ட்ரட்டுகளுடன் பூட்டப்பட்டுள்ளது, அவை தரை தளத்தில் இருந்து படிக்கட்டுகளாகவும் செயல்படுகின்றன.பிரதான கட்டமைப்பு உயர்த்தப்படும் போது கோவிலின் மேலிருந்து கீழ் காட்சி. குவிமாடத்தின் உச்சியில்-தரை மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில்- நிறுவப்பட்டிருக்கும் விட்டங்கள் இங்கே காணப்படுகின்றன. கட்டமைப்பை முடிக்க மீதமுள்ள கூறுகள் இப்போது சேர்க்கப்படுகின்றன.கோயிலின் தரை மட்டத்தின் வெளிப்புறச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. கோயிலுக்குள் வெளிப்புற சத்தத்தை குறைக்கும் போது காற்று அதன் வழியாக செல்ல அனுமதித்து அமைதியான சூழ்நிலையை உருவாக்க வடிவமைக்கப்பட்ட சிண்டர் பிளாக்களிலிருந்து அவை கூட்டப்பட்டுள்ளன.மையக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் பாதைகளின் வேலைகளில் ஒரு நீரூற்று, ஒரு நீரோடை மற்றும் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பிரதிபலிக்கும் குளம் ஆகியவை அடங்கும்.பிரதிபலிக்கும் குட்டை மற்றும் ஓடையின் காட்சிகள்நுழைவாயிலில் வருகையாளர் மையம் சமீபத்தில் பூர்த்தியாகிவிட்டதுமேலே உள்ள படம், பார்வையாளர்கள் மையத்திற்கு அடுத்ததாக ஒரு மூடப்பட்ட வெளிப்புறக் கூடும் இடமாகும், இது பெரிய குழுக்களுக்கு இடமளிக்கும் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்கும்.
கின்ஷாஷா, காங்கோ ஜனநாயகக் குடியரசு — காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் 26-மீட்டர் உயரமான குவிமாடத்திற்கான எஃகு மேற்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது, இது கட்டுமானப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. .
வழிபாட்டு இல்லங்கள் பஹாய் போதனைகளில் முக்கிய ஸ்தாபனங்களாக விவரிக்கப்பட்டுள்ளன, அவை வழிபாடு மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பை உறுதியான வடிவத்தில் எடுத்துக்காட்டுகின்றன. கோவிலின் இடத்திலும் மற்றும் அந்த பரந்த நாடு முழுவதிலும் இந்த உண்மை DRC இல் இன்னும் அதிகமாகத் தெளிவாகிறது.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் சுற்றியுள்ள சமூகங்களின் ஆன்மீக வாழ்வில் உருவாகி வரும் கோயிலின் விளைவின் ஒளிர்வுகள் கீழே உள்ள படங்களின் வரிசையில் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு மாத திட்டமானது, தளத்தில் மற்றும் வெளியே அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் நடத்தப்படும் வகுப்புகளை உள்ளடக்கியது, மேலும் பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகங்களின் தேவைகள் மற்றும் அவர்கள் தங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி விவாதிக்கும் ஆய்வு அமர்வுகளையும் உள்ளடக்கியது.தளத்தில் உள்ள ஒரு வெற்று அறையை வீடாக மாற்றும் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர்களின் குழுவை இங்கே காணலாம்.கோவில் தளத்தில் இளைஞர்கள் புதுப்பித்த, சில துணை அமைப்புகளின் முன் பின் காட்சிகள். திட்டத்தின் சில முன்னாள் பங்கேற்பாளர்கள், வீடு திரும்பிய பிறகு, பழுது மற்றும் புதுப்பித்தல் தேவைப்படும் சமூக இடங்களை அடையாளம் கண்டு, திட்டத்தின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்டதை மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து உடனுழைக்கின்றனர்.பலதரப்பட்ட பின்னணிகள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட மக்களை ஒன்றிணைத்து, பிரார்த்தனைக்கான வழக்கமான கூட்டங்கள் கோவில் தளத்தில் நடைபெறுகின்றன.டிஆர்சி முழுவதும் உள்ள சமூகங்களில் உள்ள மக்கள், பஹாய் எழுத்துக்களில் மஷ்ரிகுல்-அத்கார், அதாவது “கடவுள் துதியின் உதயஸ்தலம்” என குறிப்பிடப்படும் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் காட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பொது நன்மைக்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மலேசியாவில் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பேணப்பட்ட சேவை மனப்பான்மை, டிசம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்குப் பிறகு நிவாரண முயற்சிகளை நோக்கிச் வழிநடத்தப்பட்டது.
ஷா ஆலம், மலேசியா, 22 ஜனவரி 2022, (BWNS) – கடந்த மாதம் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பேணப்பட்ட சேவை மற்றும் கூட்டு நடவடிக்கை உணர்வு உடனடியாக நிவாரணப் பணிகளின்பால் வழிநடத்தப்பட்டது.
மலேசிய பஹாய்களின் ஆன்மிகச் சபையின் ஒரு செய்தி, அந்த நாட்டில் உள்ள பஹாய் உள்ளூர் ஆன்மீகக் சபைகளை ‘அப்துல்-பஹா’வின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தது, “அனைத்து தேசங்கள், இனங்கள் மற்றும் நம்பிக்கைகள் மீது அவர் கொண்ட அனைத்தையும் தழுவிய அன்பை நினைவுகூர்ந்து, “இந்த நேர தேவையின் போது சக நாட்டு மக்களின்… [அவர்களின்] அவசர தேவைகளுக்கு விடையிறுத்தல் (respond).”
உள்ளூர் பஹாய் சமூகங்களின் விடையிறுப்பு முயற்சிகள், அனைத்து வயதினரையும் தங்களுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தங்குமிடம் வழங்குவதற்கும், பள்ளிக் குழந்தைகளுக்கான பொருட்கள் உட்பட பொருட்களை விநியோகிப்பதற்கும் ஈடுபடுத்தியது.
உணவு, உடை, துப்புரவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் பஹாய் நிலையங்களை மையமாகப் பயன்படுத்தி உள்ளூர் ஆன்மீக சபைகள் செயல்பட ஆரம்பித்தன. அதே நேரத்தில் மலேசியா முழுவதிலும் உள்ள குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை தங்குமிடங்களாகத் திறந்தன. பல சந்தர்ப்பங்களில், முழு குடும்பங்களும், மக்கள் குழுக்களும் நீண்ட தூரம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி செய்தனர்.
முதலில் முன்னெழுந்தவர்களில் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இருந்தனர். ஷா ஆலம் நகரில் உள்ள பஹாய் கல்வியல் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான யாம்லா சத்தியசீலன், ஸ்ரீ மூடா அண்டைப்புறத்திற்கு அருகிலுள்ள இளைஞர்கள் குழுவின் அனுபவத்தை விவரிக்கிறார்: “வெள்ளம் வடிந்தவுடன், சுற்றியுள்ள அண்டைப்புறங்களில் உள்ள இளைஞர்கள் குழுக்கள் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்தன.
கடந்த மாதம் பெய்த கனமழையால் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
“வெவ்வேறு அண்டைப்புறங்களில் உள்ள பல இளைஞர் குழுக்கள் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஒன்று மற்றொண்டுடன் விரைவாக இணைந்தன. பஹாய் ஸ்பானங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த இளைஞர்களில் சிலர் வெவ்வேறு குடும்பங்களுக்கு உதவ ஸ்ரீ மூடாவிற்கு வந்தனர்.
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுள் ஒருவர், சிலரின் சேவை செயல் இன்னும் பலரை எவ்வாறு செயலில் ஈடுபட தூண்டுகிறது என்பதை விவரிக்கிறார்: “எங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது, முதல் நாளுக்குப் பிறகு நாங்கள் மிகவும் களைப்படைந்திருந்தோம்.
“அன்றிரவு, எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு செய்திகளை அனுப்பினோம், மேலும் தன்னார்வலர்களைத் தேடினோம். அடுத்த நாள் உதவிக்கு அதிகமான மக்கள் வந்தனர், இது சமைப்பதற்கும், உணவுகளை பேக்கிங் செய்வதற்கும், விநியோகம் செய்வதற்கும், குடும்பங்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்திட உதவுவதற்கும் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து செல்ல அனுமதித்தது.
ஷா ஆலம் நகரின் பல்வேறு அண்டைப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வெள்ளம் வடிந்த பிறகு துப்புரவு முயற்சிகளுக்கு உதவுவதை இங்கே காணலாம்.
மலேசியா முழுவதிலும் உள்ள பஹாய் சமூகங்களின் நிவாரண முயற்சிகளுக்கு கலந்தாலோசனை குறித்த ஆன்மீகக் கொள்கை மூலாதாரமாக இருந்தது.
ஷா ஆலமில் உள்ள ஓர் உள்ளூர் பஹாய் ஸ்தாபனத்தின் உறுப்பினரான மிர்ஷல் லூர்துசாமி கூறுகிறார்: “சமூக நிர்மாணிப்பு செயல்முறையிலிருந்து தோன்றிய கலந்தாலோசனைக் கலாச்சாரம், உடனடியாகத் திட்டமிடவும் செயல்படவும் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் ஒத்துழைக்கவும் எங்களுக்கு உதவியது. நிவாரண முயற்சிகளில் பலத்தை ஒருங்கிணைக்க பல்வேறு சமய சமூகங்களுடன் உரையாடல்களும் தொடங்கப்பட்டன.
பல சூழல்களில், முழு குடும்பங்களும் மக்கள் குழுக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக நீண்ட தூரம் பயணித்து, இரவு வரை நீண்ட நேரம் வேலை செய்து உதவினர்.
மிஸ். லூர்துசாமி விளக்குகிறார், “இப்போது பலர் தங்களை ஒருவர் மற்றவருக்கு அடுத்து வாழும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள், அந்நியர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ அல்ல.”
ஷா ஆலம் உள்ளூர் சபை உறுப்பினர், லூர்துசாமி பாக்கியசாமி, சமீபத்திய முயற்சிகளைப் பற்றிப் பிரதிபலிக்கிறார்: “தனிநபர்கள், சமூகம் மற்றும் ஸ்தாபனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அவர்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் சக்தி பெருமளவில் பெருகியுள்ளதை இந்த பேரழிவு நமக்குக் காட்டுகிறது.”
துனிசிய பஹாய் சமூகம் ஸ்தாபிக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில், சுமார் 50 சமூக நடவடிக்கையாளகர்கள் சமகால சமூகத்தில் சகவாழ்வு மற்றும் வன்முறை பிரச்சினையை ஆராய்ந்தனர்.
19 ஜனவரி 2022
துனிஸ், துனிசியா, 19 ஜனவரி 2022, (BWNS) – ‘அப்துல்-பஹா ஷேக் முஹ்யித்-டின் சப்ரி’ என்னும் எகிப்திய பஹாய் ஒருவரை துனிசியாவிற்கு சமாதானம் மற்றும் ஒற்றுமை குறித்த ஒரு செய்தியுடன் அனுப்பியதில் இருந்து துனீசியாவின் பஹாய்கள் ஒரு நூற்றாண்டைக் கொண்டாடுகிறார்கள்.
அந்நாட்டு பஹாய்களின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகிய, அவ்வேளை ஷேக் முஹைத்-தின் சப்ரி, துனிஸின் முக்கிய வீதி ஒன்றில், மனிதகுலத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு போன்ற ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையிலான அமைதியான உலகம் குறித்த பஹாய் சமயத்தின் தொலைநோக்கால் ஈர்க்கப்பட்ட இளைஞர் குழு ஒன்றைச் சந்தித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த இளைஞர்கள் பஹாய் போதனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன், தங்கள் வாழ்க்கையைத் தங்களின் சமுதாயத்திற்கான சேவைக்கு அர்ப்பணித்தனர்.
இந்த படங்களில் காணப்படும் துனிஸில் உள்ள பிரதான பவுல்வர்டில் ஷேக் முயிட்-டின் சப்ரியை (மேல்-இடது) சந்தித்த சிறிது நேரத்திலேயே பஹாய் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில இளைஞர்களை மேலே உள்ள படத்தில்
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துனீசிய பஹாய்கள் அதே தொலைநோக்கை இன்னமும் பின்பற்றுகின்றனர். மிகச் சமீபத்தில், அதே பெருவீதியில் அமைதியான சகவாழ்வு பற்றிய கலந்துரையாடலை நடத்துகிறார்கள், அங்கு, மக்கள் அன்று செய்தது போலவே இன்றும் மற்றவர்களுடன் நட்புறவுடன் உரையாடச் செல்கின்றனர்.
சமூகங்கள் எவ்வாறு வன்முறையை முறியடிக்க முடியும் என்பதை ஆராய்வதற்காக சுமார் 50 ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுச் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்ட இந்த ஒன்றுகூடலை நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
குடும்பம், கல்வி, ஊடகம், விளையாட்டு போன்ற சமுதாய மேம்பாடு போன்ற, பலவித பாதைகளில் சமகால சமூகத்தின் வன்முறைப் பிரச்சினை பல்வேறு சூழல்களில் தீர்க்கப்பட வேண்டும் என வெளிவிவகார அலுவலகத்தின் முகமது பென் மௌசா விளக்குகிறார்.
“வன்முறைக்கான மூல காரணங்களை அடையாளம் காண்பது முக்கியம்,” என அவர் கூறுகிறார். இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வன்முறையை எதிர்கொள்வது சிந்தனையின் மட்டத்தில் தொடங்குகிறது என திரு. பென் மௌசா விளக்குகிறார்.
துனிசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினர்கள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவம், சமூக நீதி மற்றும் சகவாழ்வு உள்ளிட்ட பல்வேறு சமூக உரையாடல்களில் பல்வேறு மன்றங்களில் பங்கேற்கின்றனர்.
‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களைக் குறிப்பிட்டு, அவர் கூறுகிறார்: “போர் பற்றிய எண்ணம் வந்தால், நாம் அதை அமைதிக்கான வலுவான எண்ணத்தால் எதிர்த்திட வேண்டும். வெறுப்பு பற்றிய எண்ணம் அன்பின் ஒரு வலிமையான சிந்தனையால் அழிக்கப்பட வேண்டும்”
குறிப்பாக, இந்த தலைப்பு செய்தியாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது, அவர்கள் தங்கள் சமுதாயத்தைப் பற்றிய மக்களின் புலனுணர்வின் மீதான ஊடகங்களின் தாக்கத்தை விவாதித்தனர். கூட்டத்தில் ரிம் பென் கலிஃப்பே என்னும் பத்திரிகையாளர், சகவாழ்வு மற்றும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் ஊடகங்களின் முக்கிய பங்கு பற்றி உரையாற்றினார். “நிதி குறித்த அழுத்தங்களின் சூழலில், அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்கான வெறித்தனமான தேடலில், விழிப்புணர்வையும் நனவையும் அதிகரிப்பதற்கான அதன் சமுதாய மற்றும் கலாச்சாரம் குறித்த பங்கை சில சமயங்களில் மறந்திட நேரிடுவதுடன், அது சில சமயங்களில் வன்முறையையும் தூண்டிவிடலாம்.”
துனிசியாவில், நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்தும் பல பக்தி கூட்டங்களில் ஒன்று இங்கே படத்தில் காணப்படுகின்றது
திருமதி பென் கலிஃப் வேறுபாடுகளை அதிகமாக ஏற்றுக்கொண்டு, இந்த சவால்களை சமாளிக்கவும் அந்தத் துறையில் மற்றும் சமூகத்தில் உள்ள தொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் ஊடக சூழலை வளர்க்கவும் ஆவல் கொண்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி மேலும் பேசினார்.
துனிசியாவின் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த அஃபிஃபா பௌசரிரா பின் ஹுசைன், இந்த உணர்வை எதிரொலித்தார்: “நம்முடைய வேறுபாடுகளைக் கடந்து அமைதியான சமுதாயத்தை நிர்மாணிக்க, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கொள்கைக்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்தத் தாயகம் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கிறது.
சுமார் 20 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், துனிசியாவில் உள்ள முக்கிய செய்தித்தாள்களில், பஹாய் சமூகம் கடந்த 100 ஆண்டுகளில் அந்த நாட்டில் அதிக சகவாழ்வுக்காக ஆற்றிய பங்களிப்பை ஆராயும் இரண்டு குறும்படங்களின் திரையிடலும் அடங்கியது.
மானிடத்திற்கான அப்துல் பஹாவின்சென்ற வாரம் ஹஃபாவில் நடைபெற்ற ஒரு வரவேற்பில், என்றும் நிலைத்திருக்கும் சேவை எனும் அப்துல் பஹாவின் ஒரு மரபுச்செல்வத்திற்கு, அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சமயத்தலைவர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்
பஹாய் உலக மையம் – புனித பூமியிலும் அதற்கு அப்பாலும் அப்துல் பஹாவின் நீடித்த மரபைக் கௌரவிக்க கடந்த வாரம் ஹைஃபாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியானது, ‘அப்துல்-பஹா’வின் நூற்றாண்டு நினைவேந்தலைக் குறிக்கும் வகையில், அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகள், பொது சமூகத் தலைவர்கள் மற்றும் யூத, முஸ்லீம், கிறிஸ்துவ, ட்ரூஸ் ஆகிய சமய சமூகங்களின் தலைவர்களை ஒன்றுகூட்டியது. .
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசாக் ஹெர்ஸொக் கூட்டத்திற்கான ஒரு வீடியோ செய்தியில்: “தனிநபர்களாகிய நமக்கும் மனிதகுலத்திற்குமான அவரது கருணை, இரக்கம் மற்றும் தார்மீக பரிபூரணத்தை நோக்கிய முடிவில்லாத உந்துதலை அப்துல்-பஹாவின் வாழ்க்கைக் கதை பிரதிபலிக்கின்றது” என்றார்.
“பிரிக்கப்படுவதை விட எது ஒன்றுபடுத்துகிறது என்பதைப் பார்க்க அப்துல்-பஹாவின் அழைப்பானது, நமது பொதுவான மனிதகுலத்தின் மீதான அவரது ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் பூமியில் அமைதி பற்றிய அவரது பார்வை ஆகியவை புனித பூமியில் உள்ள அவரது பூதவுடலின் நல்லடக்கத்தளத்தில் இருந்து தொடர்ந்து எதிரொலிக்கிறது.”
யூத, முஸ்லீம், கிறிஸ்துவ, ட்ரூஸ் ஆகிய சமய சமூகங்களின் தலைவர்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டனர்
குடியரசுத் தலைவர் தொடர்ந்தார்: “அப்துல் பஹாவின் நினைவு நம் அனைவருக்கும் ஒர் ஆசீர்வாதமாக இருக்கட்டும், மேலும் அவரது போதனைகளில் அடங்கியுள்ள ஞானமானது குணப்படுத்தல் தேவைப்படும் உலகிற்கு ஆறுதலையும் உத்வேகத்தையும் கொண்டுவருவதுடன், ஒற்றுமை மற்றும் அமைதி குறித்த தொலைநோக்கின்பால் மனிதகுலத்தை நெருக்கமாக நகர்த்திட உதவிடும்.”
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹைஃபா மேயர் எய்நாட் காலிஷ்-ரோடம், அப்துல் பஹாவுடனான ஹைஃபா நகரின் வரலாற்று தொடர்பைப் பற்றி பேசினார். டாக்டர். கலிஷ்-ரோடெம், பஹாய் உலக மையத்தைப் பற்றிய தனது ஆழ்ந்த பாராட்டுகளையும், அந்தப் பகுதிக்கு யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரும்பி வருவதற்கான ஆர்வத்தைப் பற்றியும் கூறினார்.
ஹைஃபா மேயர், நகரத்துடனான அப்துல் பஹாவின் தொடர்பு குறித்துப் பேசினார்.
மற்ற பங்கேற்பாளர்கள், நிகழ்ச்சிக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்து, இதுவும் பஹாய் உலக மையத்தால் நடத்தப்பட்ட இதுபோன்ற பிற கூட்டங்களும் சமயத்தின் கலங்கரை விளக்கமாக செயல்பட்டதாகவும், மக்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் கூறினர்.
விருந்தினர்களுக்கு, ‘அப்துல்-பஹா’ பற்றிய கண்காட்சியைப் பார்க்கவும், ‘அப்பாஸ் எஃபென்டி’ என உள்ளூர் மக்களால் அறியப்பட்ட புனித பூமியில் அவரது சேவை வாழ்க்கையின் அம்சங்களை எடுத்துரைக்கும் ‘சர்வ மனிதகுலத்திற்குமான அடைக்கலம்’ என்னும் குறும்படத்தைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது.
பஹாய் சமூகத்தின் வளர்ச்சிக்கு அப்துல் பஹாவின் பங்களிப்புகள் மற்றும் மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான அவரது அயராத முயற்சிகள் பற்றிய கண்காட்சியைப் பார்வையிட விருந்தினர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளரான டேவிட் ரட்ஸ்டைன், “‘அப்பாஸ் எஃபென்டி உண்மையிலேயே தனித்துவமான ஒரு மனிதர். “பஹாவுல்லா அவரைப் பல வழிகளில் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் சில ‘மாஸ்டர்’ மற்றும் ‘கடவுளின் மர்மம்’. ஆனால், ‘அப்பாஸ் எஃபெண்டி ‘அப்துல்-பஹா’ (பஹாவின் சேவகர்) என்னும் ஒரு பெயரை மட்டும் எடுத்துக் கொண்டார்.
“உண்மையில், அவரது வாழ்க்கை சேவைக்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது, அவர் மறைந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகும் அது இன்னும் மனிதகுலத்தை ஊக்குவிப்பதாக இருக்கின்றது,” என டாக்டர் ரட்ஸ்டைன் கூறினார்.
ஒரு சிறப்பு மாநாட்டிற்காக உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹைஃபாவிற்குப் பயணம் செய்த கண்ட வாரிய ஆலோசகர்களின் கூட்டத்தில் பிரதிநிதிக்கப்பட்ட உலகின் கலாச்சாரங்கள் மற்றும் மண்டலங்களின் பன்முகத்தன்மையில் இந்த உணர்வுகள் பிரதிபலித்தன.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதிக்கும் தூதரக ஊழியர்களும் அடங்குவர். கண்ட வாரியங்களின் ஆலோசகர்கள் சிலருடன் அவர்கள் இங்கு காணப்படுகின்றனர்.
மாற்றுப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யாயிர் லாப்பிட், ஒரு வீடியோ செய்தியில், “இஸ்ரேலை மிகவும் பல்வகையான, ஆன்மீக ரீதியில் வளமான மற்றும் அழகான இடமாக மாற்றியதற்கு நன்றி. உங்கள் கலாச்சாரம் மற்றும் சமயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும், இந்த விசேஷ நிலத்தின் மற்றொரு கோணத்தை உலகுக்கு காட்டியதற்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
உலக நீதிமன்ற கட்டிடத்தின் படிகளில் கண்ட வாரிய ஆலோசகர்கள்
9 ஜனவரி 2022
பஹாய் உலக மையம், 9 ஜனவரி 2022, (BWNS) – அவர்களின் மாநாட்டிற்குப் பிறகு உடனடியாகத் தொடங்கிய ஆலோசகர்கள் வாரியங்களின் கலந்துரையாடல்கள் இன்று நிறைவடைந்துள்ளன, இது உலகளாவிய பஹாய் சமூகத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது.
31 டிசம்பர் 2021 முதல் ஜனவரி 4, 2022 வரை நடைபெற்ற ஆலோசகர்களின் மாநாட்டில் பிரத்யேகமாக உலகளாவிய கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்பட்ட அகநோக்குகளின் வளமையினால் கடந்த சில நாட்களின் கலந்துரையாடல்கள் செழுமைப்படுத்தப்பட்டன.
கடந்த சில நாட்களாக ஆலோசகர்களுடைய கலந்துரையாடல்களின் கவனம் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ளுர், மண்டல மற்றும் தேசிய அளவில் பஹாய் சமூகங்களின் ஒருங்கிணைந்த, முறைமையான முயற்சிகளை ஊக்குவிப்பதில் இருந்துள்ளது. இந்த முயற்சிகள் சமூக நிர்மாணிப்பிற்கான திறனை உருவாக்கும் கல்வித் திட்டங்களை உள்ளடக்கியதுடன் சமுதாய நடவடிக்கை மற்றும் சமூக சொல்லாடல்களில் பங்கேற்பையும் உள்ளடக்கியிருந்தன.
ஆலோசகர்கள், நினைவாலயங்கள் மற்றும் புனித ஸ்தலங்களுக்கான விஜயங்களினால் ஆன்மீக ரீதியில் உற்சாகமுற்று உலக நீதிமன்றத்தின் வழிகாட்டுதலால் ஞானம் பெற்று, தங்கள் சக ஊழியர்களிடமிருந்து பெற்ற அகநோக்குகளால் ஒளிபெற்று, இப்போது புனித பூமியை விட்டு வெளியேறி, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நடைபெறப் போகும் ஆயிரக்கணக்கான உலகளாவிய மாநாடுகளுக்கு முன், உள்வாங்கிய ஆன்மீக ஆற்றலை பஹாய் உலகிற்கு வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.
உலக சீர்திருத்தத்திற்கான பஹாவுல்லாவின் சர்வலோக அழைப்பாணையை செயல்படுத்தும் அவர்களின் முயற்சியில், “சமயத்தின் சமூக நிர்மாணிப்பு சக்திகளை விடுவிப்பதற்கான புதிய சாத்தியக்கூறுகளை சமூகங்கள் ஆய்வு செய்ய” இந்த மாநாடுகள் உதவும்” என நீதி மன்றம் கூறியுள்ளது.
உலக நீதிமன்ற கட்டிடத்தின் படிகளில் கண்ட வாரிய ஆலோசகர்கள் – வான்வெளி காட்சி
பஹாய் உலக மையம் — உலக நீதிமன்றத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு நூறாண்டுகால பெருமுயற்சியின் அகநோக்குகள் என்னும் திரைப்படம், இன்று Bahai.org இல் வெளியிடப்பட்டது.
1921 இல் ‘அப்துல்-பஹா காலமானதிலிருந்து, வளர்ந்து வரும் பஹாய் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட நூறு ஆண்டுகால முயற்சி மற்றும் கற்றல் பற்றிய நுண்ணறிவை இந்தத் திரைப்படம் வழங்குவதுடன், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு என்னும் கொள்கையைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உலகத்தின் தோற்றத்திற்கு பங்களிப்பதற்கான பஹாய் சமூகத்தின் தற்போதைய முயற்சிகளுக்கு வழிவகுத்த பயணத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த 66 நிமிடத் திரைப்படம் அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, பாரசீகம், ரஷ்ய, ஸ்பானிய மற்றும் ஸ்வாஹிலி மொழிகளில் கிடைக்கும். படத்தை யூடியூப்பிலும் பார்க்கலாம்.
பஹாய் உலகமையம், 4 ஜனவரி 2022, (BWNS) – வியாழன் அன்று தொடங்கிய கண்ட வாரியங்களின் ஆலோசகர்கள் மாநாடு, இன்று உலக பஹாய்களுக்கு அனுப்பப்பட்ட உலக நீதிமன்றத்தின் செய்தியை வாசிப்பதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது.
அச்செய்தி கூறுவதாவது: “மனிதகுலம் இப்போது எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறுகிய கால சுயநலத்தை ஒதுக்கி வைத்து, இந்த மோசமான ஆன்மீக மற்றும் தார்மீக யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கான அதன் விருப்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஒரு கடுமையான சோதனையாகும்: ஒரு விலைமதிப்பற்ற தாய்நாட்டை மட்டுமே பகிர்ந்துகொள்ளும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட மனித குடும்பம் ஒன்று மட்டுமே உள்ளது.”
கடந்த ஆறு நாட்களில் ஆலோசகர்களின் கலந்துரையாடல்கள், உலகளாவிய பஹாய் சமூகம் ஒருமை என்னும் ஆன்மீகக் கொள்கையின் அடிப்படையில் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் என்பதை ஆராய்ந்தன.
பஹாவுல்லாவின் நினைவாலயத்தின் சூழலில் ஆலோசகர்கள் தியானத்துடன் இருக்கின்றனர்
அவர்களின் பகுப்பாய்வில், ஆலோசகர்கள் இந்த இலக்கை அடைவது, சேவைக்கான திறனை வளர்க்கும் பஹாய் கல்வித் திட்டங்களின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்துவதைச் சார்ந்துள்ளது என முடிவு செய்தனர், இதன் மையத்தில் ஒரு மக்கள்தொகை அதன் சொந்த மேம்பாட்டிற்கான முன்னணியாளராக மாறும் திறனில் நம்பிக்கை கொள்வதே உள்ளது.
மாநாட்டின் நிறைவைத் தொடர்ந்து, ஆலோசகர்கள் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காகவும் வரவிருக்கும் நாட்களில் புவியியல் குழுக்களிடையே பின்பற்றப்படும் ஆலோசனைகளுக்குத் தங்களை ஆன்மீக ரீதியில் தயார்படுத்துவதற்காகவும் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு வரிசையாகச் சென்றனர்.
பெரும்பாலான ஆலோசகர்கள் புனித பூமியில் இருந்தனர், அதே நேரத்தில் பயணம் செய்ய முடியாத சிலர் தொலைதூரத்திலிருந்தே சேர்ந்து கொண்டனர். இந்த கலந்தாலோசனை கூட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
பாரசீக மன்னரான நஸிரிட்டின் ஷா, தாஹிரியைச் சந்தித்தபோது, அவர் தமது நம்பிக்கையைத் துறந்தால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததை இந்தக் காட்சி சித்தரிக்கிறது. தஹிரி ஒரு கவிதையுடன் இந்த வாய்ப்பை நிராகரித்தார்: “உனக்கான ராஜ்யம், செல்வம் மற்றும் அதிகாரம் / பிச்சை, நாடுகடத்தல் மற்றும் எனக்கு இழப்பு / முந்தையது நன்றாக இருந்தால், அது உங்களுடையது / பிந்தையது கடினமாக இருந்தால், அது என்னுடையது.”
பாக்கு – அஜர்பைஜான் – பாரசீக மன்னரின் போற்றும் பார்வையில் கதாநாயகி, அவருடைய முன்மொழிவைக் கேட்கிறார். உங்கள் சமய நம்பிக்கையை விட்டுவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள், எனக்குப் பிடித்த ராணியாக ஆடம்பர வாழ்க்கையை வாழுங்கள், அதுவே மன்னனின் கோரிக்கையாகும்.
இந்தக் காட்சியை 450 பேர் கொண்ட பார்வையாளர்கள், என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலுடன் பார்க்கின்றனர்.
கிருபை, ஞானம் மற்றும் தைரியத்துடன், தஹிரி அந்த வாய்ப்பை நிராகரிக்கிறார். உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அவர் தேர்வு செய்கிறாள்.
அஜர்பைஜான் மாநில கல்வித்துறையின் தேசிய நாடக அரங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி செல்வாக்கு மிக்க கவிஞர், அறிஞர் மற்றும் பெண் விடுதலைக்கான சாதனையாளராக விளங்கிய தஹிரியின் வாழ்க்கையைப் பற்றிய புதிய நாடகமான ‘சூரிய புத்திரி’ அரங்கேற்றப்பட்டது.
அந்தத் தொடக்க இரவு கலைஞர்களையும் பார்வையாளர்களையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்தது.
“தாஹிரி ஒரு மதத்திற்கு மட்டுமல்ல, மனிதகுல அனைவருக்கும் ஒரு வீராங்கனை” என அஜர்பைஜான் எழுத்தாளர்கள் சங்கத்தின் தென் அஜர்பைஜான் இலக்கியத் துறையின் தலைவரும் கவிஞருமான சைமன் அருஸ், நாடகத்திற்குப் பிறகு பார்வையாளர்களிடம் கூறினார். “அவர் முழு மனிதகுலத்திற்கும் தெய்வீக மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்காக வாழ்ந்து இறந்தார். கிழக்கின் வரலாற்றில் அவருக்கு யாருமே இணை இல்லை. லட்சக்கணக்கானோரின் சுதந்திரக் குரல் அவர்.”
அஜர்பைஜான் சமூகத்தில் தாஹிரியின் வாழ்க்கை மீண்டும் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தைத் தூண்டும் நேரத்தில் இந்த நாடகம் வருகிறது.
தாஹிரியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய புத்தகம் 2016-இல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது, இஃது அஜர்பைஜான் மக்களிடையே பெண்களின் விடுதலை சின்னமான சாதனையாளரின் வாழ்க்கையைப் பற்றி வளர்ந்து வரும் ஆர்வத்தை ஊக்குவிக்கிறது. தாஹிரியைப் பற்றி அறிந்த பத்திரிகையாளர் கமலே செலிம் முஸ்லிம்கிஸி மிகவும் ஈர்க்கப்பட்டார்; அவர் ‘சூரிய புத்திரியின்’ தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
“தாஹிரி உண்மைக்காக வாழ்ந்து இறந்தார்” என திருமதி. முஸ்லீம்கிஸி கூறுகிறார். “இந்தத் திட்டம் என் வாழ்க்கையை மாற்றியது. முன்பு எனக்கு யோசனைகளும் கனவுகளும் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது மாற்றங்களைச் செய்ய எனக்கு ஆன்மீக சக்தி உள்ளது. பொது நலனுக்காக செயல்பட தஹிரி எனக்கு தைரியத்தை அளித்தார்.”
தாஹிரி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரானில் உள்ள கஸ்வினில் ஒரு முக்கிய மதக் குடும்பத்தில் பிறந்தார். அந்த நேரத்தில், பெண்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாகவும், அவர்கள் பின்பற்றுவதற்குப் பொருத்தமற்றதாகவும் கருதப்பட்ட விஷயங்களில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவருக்கு முன் தடைகள் இருந்தபோதிலும், தாஹிரி ஒரு புகழ்பெற்ற கவிஞராகவும் அறிஞராகவும் ஆனார்; அவருடைய காலத்தில் ஆழமாக உணரப்பட்ட அவரது செல்வாக்கு ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் குறையவில்லை.
1844-ஆம் ஆண்டில், பஹாவுல்லாவின் முன்னோடியான பாப் பெருமானாரின் போதனைகளை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியான தாஹிரி, பாரசீக மற்றும் அதற்கப்பால் சென்று, சில வருடங்களில் பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களைக் கொண்டு வந்த முன்னணி நபர்களில் ஒருவரானார்.
“தாஹிரி” என்ற பட்டம் அவருக்கு பஹாவுல்லாவால் வழங்கப்பட்டது; அவரை 1848-இல் பதாஷ்ட்டின் வரலாற்று மாநாட்டில் அவர் சந்தித்தார். இந்தச் சொல் “புனிதமானது” என பொருள்படும்.
அந்த முக்கியமான மாநாட்டில்தான் தஹிரி தன் முக்காட்டைக் கழற்றினார். 19-ஆம் நூற்றாண்டில் பெர்சியாவில், பொதுத் துறையில் பெண்களுக்கு சிறிய பங்கு இருந்த, ஓர் ஆணாதிக்க சமூகத்தில் இந்தச் செயல் நினைத்துப் பார்க்க முடியாததாகக் கருதப்பட்டது. அந்த வரலாற்றை மாற்றும் தருணத்தில், பெண்களுக்கும் ஆணுக்கும் இடையே சமத்துவம் கொண்டுவரப்பட்டது என்றும், பாப்-இன் போதனைகள் கடந்த கால மரபுகளிலிருந்து முறிவைக் குறிக்கிறது என்றும் – ஷோகி எஃபெண்டி விவரித்தபடி, அது ஒரு “அதிர்ச்சியூட்டும் எக்காளச் சத்தம்”.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீக அரசாங்கம் பாப்-இன் ஆதரவாளர் மீது கொடூரமான துன்புறுத்தலை மேற்கொண்டதால், தாஹிரியும் தெஹ்ரானில் சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய நம்பிக்கையைக் கைவிட மறுத்ததால், அவர் தூக்கிலிடப்பட்டார்; அதைத் தொடர்ந்து நூற்றாண்டு முழுவதும் அவரது மரணத்திற்கு முன்பான வார்த்தைகள் ஒலித்தன: ” உங்கள் விருப்பப்படி என்னைக் கொல்லலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.”
சூரிய புத்திரி, தாஹிரியின் ஒப்பிடமுடியாத தைரியத்தை எடுத்துக்காட்டுகிறது; இது தலைமுறை தலைமுறையாக மக்களை ஆதிக்கம் செலுத்திய ஒரு குணம். தஹிரியாக நடிக்கும் முன்னணி நடிகரான நிகர் அலியேவா விளக்குகிறார்:
தஹிரியின் உறவினராக நடிக்கும் ஒரு நடிகர், அவரைச் சமூகத்தில் உள்ள அறிவுசார் மற்றும் மத சிந்தனை இயக்கங்களுடன் இணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர், நாடகத்தின் ஒரு காட்சியில் தஹிரியின் மற்ற இரண்டு உறவினர்களுடன் பேசுகிறார்.
“நாடகத்தில் தஹிரி கூறினார், ‘நான் ஸார்ரின் தாஜ் ஆகப் பிறந்தேன், ஆனால் தாஹிரியாக வாழ்ந்தேன்.’ தாஹிரி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நான் மாறிவிட்டதாக உணர்ந்தேன். நான் முன்பு போல் இல்லை. இப்போது என் வாழ்க்கையின் பல்லவி: ‘நான் நிகராகப் பிறந்தேன் ஆனால் தாஹிரியாக வாழ்வேன்.”
இந்தப் படைப்பில், கதையின் பகுதிகளுக்கிடையே அவரது கவிதைகளிலிருந்து சிலவற்றை வாசித்தவாறு, தாஹிரியின் வாழ்க்கைக் காட்சிகள் நாடகமாக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வையாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்: “நாம் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும், அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராக நாம் எப்படி குரல் எழுப்ப வேண்டும் என்பதையும் நான் இப்போது உணர்கிறேன்.”
தாஹிரி நீண்ட காலமாக கற்றோர்களிடையே ஆர்வத்தை ஈர்த்துள்ளார். 19-ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய மொழிப்புலமையாளர் (Orientalists) இலக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தின் மீதான அவரது செல்வாக்கு பற்றி எழுதினார்கள். சமீபத்திய ஆண்டுகளில், அவரைப் பற்றிய ஏராளமான கல்விக் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளப்பட்டன.
நாடக ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரது வாழ்க்கை மற்றும் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட படைப்புகளை உருவாக்குவதன் மூலம், கலைஞர்கள் மனிதகுலத்தின் மீதான அவரது முக்கிய செல்வாக்கைச் சித்தரிக்க முயன்றனர்.
தாஹிரி பாரசீக, அரபு மற்றும் அஸெரி ஆகிய மொழிகளில் எழுதினார், இது கஸ்வின் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். அஜர்பைஜானின் முக்கிய மொழி அஸெரிதான்.
இந்த நாடகம் பாக்கு-வில் அதன் ஓட்டத்தைத் தொடரும் மற்றும் வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்களில் மேடைக்குச் செல்லும்.