

4 ஜனவரி 2022
பஹாய் உலகமையம், 4 ஜனவரி 2022, (BWNS) – வியாழன் அன்று தொடங்கிய கண்ட வாரியங்களின் ஆலோசகர்கள் மாநாடு, இன்று உலக பஹாய்களுக்கு அனுப்பப்பட்ட உலக நீதிமன்றத்தின் செய்தியை வாசிப்பதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது.
அச்செய்தி கூறுவதாவது: “மனிதகுலம் இப்போது எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறுகிய கால சுயநலத்தை ஒதுக்கி வைத்து, இந்த மோசமான ஆன்மீக மற்றும் தார்மீக யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கான அதன் விருப்பத்திற்கு ஏற்பட்டுள்ள ஒரு கடுமையான சோதனையாகும்: ஒரு விலைமதிப்பற்ற தாய்நாட்டை மட்டுமே பகிர்ந்துகொள்ளும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட மனித குடும்பம் ஒன்று மட்டுமே உள்ளது.”
கடந்த ஆறு நாட்களில் ஆலோசகர்களின் கலந்துரையாடல்கள், உலகளாவிய பஹாய் சமூகம் ஒருமை என்னும் ஆன்மீகக் கொள்கையின் அடிப்படையில் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் என்பதை ஆராய்ந்தன.

அவர்களின் பகுப்பாய்வில், ஆலோசகர்கள் இந்த இலக்கை அடைவது, சேவைக்கான திறனை வளர்க்கும் பஹாய் கல்வித் திட்டங்களின் வரம்பை கணிசமாக விரிவுபடுத்துவதைச் சார்ந்துள்ளது என முடிவு செய்தனர், இதன் மையத்தில் ஒரு மக்கள்தொகை அதன் சொந்த மேம்பாட்டிற்கான முன்னணியாளராக மாறும் திறனில் நம்பிக்கை கொள்வதே உள்ளது.
மாநாட்டின் நிறைவைத் தொடர்ந்து, ஆலோசகர்கள் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காகவும் வரவிருக்கும் நாட்களில் புவியியல் குழுக்களிடையே பின்பற்றப்படும் ஆலோசனைகளுக்குத் தங்களை ஆன்மீக ரீதியில் தயார்படுத்துவதற்காகவும் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு வரிசையாகச் சென்றனர்.
பெரும்பாலான ஆலோசகர்கள் புனித பூமியில் இருந்தனர், அதே நேரத்தில் பயணம் செய்ய முடியாத சிலர் தொலைதூரத்திலிருந்தே சேர்ந்து கொண்டனர். இந்த கலந்தாலோசனை கூட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1573/