“ஒரு நூறாண்டுக்கால பெருமுயற்சியின் கணநேர காட்சிகள்”: புதிய படம் உலகளாவிய பஹாய் சமூகத்தின் பயணத்தைப் பார்க்கின்றது


5 ஜனவரி 2022

பஹாய் உலக மையம் — உலக நீதிமன்றத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு நூறாண்டுகால பெருமுயற்சியின் அகநோக்குகள் என்னும் திரைப்படம், இன்று Bahai.org இல் வெளியிடப்பட்டது.

1921 இல் ‘அப்துல்-பஹா காலமானதிலிருந்து, வளர்ந்து வரும் பஹாய் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட நூறு ஆண்டுகால முயற்சி மற்றும் கற்றல் பற்றிய நுண்ணறிவை இந்தத் திரைப்படம் வழங்குவதுடன், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு என்னும் கொள்கையைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் உலகத்தின் தோற்றத்திற்கு பங்களிப்பதற்கான பஹாய் சமூகத்தின் தற்போதைய முயற்சிகளுக்கு வழிவகுத்த பயணத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த 66 நிமிடத் திரைப்படம் அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, பாரசீகம், ரஷ்ய, ஸ்பானிய மற்றும் ஸ்வாஹிலி மொழிகளில் கிடைக்கும். படத்தை யூடியூப்பிலும் பார்க்கலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1574/