

9 ஜனவரி 2022
பஹாய் உலக மையம், 9 ஜனவரி 2022, (BWNS) – அவர்களின் மாநாட்டிற்குப் பிறகு உடனடியாகத் தொடங்கிய ஆலோசகர்கள் வாரியங்களின் கலந்துரையாடல்கள் இன்று நிறைவடைந்துள்ளன, இது உலகளாவிய பஹாய் சமூகத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது.
31 டிசம்பர் 2021 முதல் ஜனவரி 4, 2022 வரை நடைபெற்ற ஆலோசகர்களின் மாநாட்டில் பிரத்யேகமாக உலகளாவிய கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்பட்ட அகநோக்குகளின் வளமையினால் கடந்த சில நாட்களின் கலந்துரையாடல்கள் செழுமைப்படுத்தப்பட்டன.
கடந்த சில நாட்களாக ஆலோசகர்களுடைய கலந்துரையாடல்களின் கவனம் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ளுர், மண்டல மற்றும் தேசிய அளவில் பஹாய் சமூகங்களின் ஒருங்கிணைந்த, முறைமையான முயற்சிகளை ஊக்குவிப்பதில் இருந்துள்ளது. இந்த முயற்சிகள் சமூக நிர்மாணிப்பிற்கான திறனை உருவாக்கும் கல்வித் திட்டங்களை உள்ளடக்கியதுடன் சமுதாய நடவடிக்கை மற்றும் சமூக சொல்லாடல்களில் பங்கேற்பையும் உள்ளடக்கியிருந்தன.
ஆலோசகர்கள், நினைவாலயங்கள் மற்றும் புனித ஸ்தலங்களுக்கான விஜயங்களினால் ஆன்மீக ரீதியில் உற்சாகமுற்று உலக நீதிமன்றத்தின் வழிகாட்டுதலால் ஞானம் பெற்று, தங்கள் சக ஊழியர்களிடமிருந்து பெற்ற அகநோக்குகளால் ஒளிபெற்று, இப்போது புனித பூமியை விட்டு வெளியேறி, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நடைபெறப் போகும் ஆயிரக்கணக்கான உலகளாவிய மாநாடுகளுக்கு முன், உள்வாங்கிய ஆன்மீக ஆற்றலை பஹாய் உலகிற்கு வெளிப்படுத்தத் தயாராக உள்ளனர்.
உலக சீர்திருத்தத்திற்கான பஹாவுல்லாவின் சர்வலோக அழைப்பாணையை செயல்படுத்தும் அவர்களின் முயற்சியில், “சமயத்தின் சமூக நிர்மாணிப்பு சக்திகளை விடுவிப்பதற்கான புதிய சாத்தியக்கூறுகளை சமூகங்கள் ஆய்வு செய்ய” இந்த மாநாடுகள் உதவும்” என நீதி மன்றம் கூறியுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1575/