
பஹாய் உலக மையம் – புனித பூமியிலும் அதற்கு அப்பாலும் அப்துல் பஹாவின் நீடித்த மரபைக் கௌரவிக்க கடந்த வாரம் ஹைஃபாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியானது, ‘அப்துல்-பஹா’வின் நூற்றாண்டு நினைவேந்தலைக் குறிக்கும் வகையில், அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகள், பொது சமூகத் தலைவர்கள் மற்றும் யூத, முஸ்லீம், கிறிஸ்துவ, ட்ரூஸ் ஆகிய சமய சமூகங்களின் தலைவர்களை ஒன்றுகூட்டியது. .
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசாக் ஹெர்ஸொக் கூட்டத்திற்கான ஒரு வீடியோ செய்தியில்: “தனிநபர்களாகிய நமக்கும் மனிதகுலத்திற்குமான அவரது கருணை, இரக்கம் மற்றும் தார்மீக பரிபூரணத்தை நோக்கிய முடிவில்லாத உந்துதலை அப்துல்-பஹாவின் வாழ்க்கைக் கதை பிரதிபலிக்கின்றது” என்றார்.
“பிரிக்கப்படுவதை விட எது ஒன்றுபடுத்துகிறது என்பதைப் பார்க்க அப்துல்-பஹாவின் அழைப்பானது, நமது பொதுவான மனிதகுலத்தின் மீதான அவரது ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் பூமியில் அமைதி பற்றிய அவரது பார்வை ஆகியவை புனித பூமியில் உள்ள அவரது பூதவுடலின் நல்லடக்கத்தளத்தில் இருந்து தொடர்ந்து எதிரொலிக்கிறது.”

குடியரசுத் தலைவர் தொடர்ந்தார்: “அப்துல் பஹாவின் நினைவு நம் அனைவருக்கும் ஒர் ஆசீர்வாதமாக இருக்கட்டும், மேலும் அவரது போதனைகளில் அடங்கியுள்ள ஞானமானது குணப்படுத்தல் தேவைப்படும் உலகிற்கு ஆறுதலையும் உத்வேகத்தையும் கொண்டுவருவதுடன், ஒற்றுமை மற்றும் அமைதி குறித்த தொலைநோக்கின்பால் மனிதகுலத்தை நெருக்கமாக நகர்த்திட உதவிடும்.”
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹைஃபா மேயர் எய்நாட் காலிஷ்-ரோடம், அப்துல் பஹாவுடனான ஹைஃபா நகரின் வரலாற்று தொடர்பைப் பற்றி பேசினார். டாக்டர். கலிஷ்-ரோடெம், பஹாய் உலக மையத்தைப் பற்றிய தனது ஆழ்ந்த பாராட்டுகளையும், அந்தப் பகுதிக்கு யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரும்பி வருவதற்கான ஆர்வத்தைப் பற்றியும் கூறினார்.

மற்ற பங்கேற்பாளர்கள், நிகழ்ச்சிக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்து, இதுவும் பஹாய் உலக மையத்தால் நடத்தப்பட்ட இதுபோன்ற பிற கூட்டங்களும் சமயத்தின் கலங்கரை விளக்கமாக செயல்பட்டதாகவும், மக்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் கூறினர்.
விருந்தினர்களுக்கு, ‘அப்துல்-பஹா’ பற்றிய கண்காட்சியைப் பார்க்கவும், ‘அப்பாஸ் எஃபென்டி’ என உள்ளூர் மக்களால் அறியப்பட்ட புனித பூமியில் அவரது சேவை வாழ்க்கையின் அம்சங்களை எடுத்துரைக்கும் ‘சர்வ மனிதகுலத்திற்குமான அடைக்கலம்’ என்னும் குறும்படத்தைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைத்தது.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் பொதுச் செயலாளரான டேவிட் ரட்ஸ்டைன், “‘அப்பாஸ் எஃபென்டி உண்மையிலேயே தனித்துவமான ஒரு மனிதர். “பஹாவுல்லா அவரைப் பல வழிகளில் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் சில ‘மாஸ்டர்’ மற்றும் ‘கடவுளின் மர்மம்’. ஆனால், ‘அப்பாஸ் எஃபெண்டி ‘அப்துல்-பஹா’ (பஹாவின் சேவகர்) என்னும் ஒரு பெயரை மட்டும் எடுத்துக் கொண்டார்.
“உண்மையில், அவரது வாழ்க்கை சேவைக்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது, அவர் மறைந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகும் அது இன்னும் மனிதகுலத்தை ஊக்குவிப்பதாக இருக்கின்றது,” என டாக்டர் ரட்ஸ்டைன் கூறினார்.
ஒரு சிறப்பு மாநாட்டிற்காக உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹைஃபாவிற்குப் பயணம் செய்த கண்ட வாரிய ஆலோசகர்களின் கூட்டத்தில் பிரதிநிதிக்கப்பட்ட உலகின் கலாச்சாரங்கள் மற்றும் மண்டலங்களின் பன்முகத்தன்மையில் இந்த உணர்வுகள் பிரதிபலித்தன.

மாற்றுப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான யாயிர் லாப்பிட், ஒரு வீடியோ செய்தியில், “இஸ்ரேலை மிகவும் பல்வகையான, ஆன்மீக ரீதியில் வளமான மற்றும் அழகான இடமாக மாற்றியதற்கு நன்றி. உங்கள் கலாச்சாரம் மற்றும் சமயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும், இந்த விசேஷ நிலத்தின் மற்றொரு கோணத்தை உலகுக்கு காட்டியதற்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1576/