
19 ஜனவரி 2022
துனிஸ், துனிசியா, 19 ஜனவரி 2022, (BWNS) – ‘அப்துல்-பஹா ஷேக் முஹ்யித்-டின் சப்ரி’ என்னும் எகிப்திய பஹாய் ஒருவரை துனிசியாவிற்கு சமாதானம் மற்றும் ஒற்றுமை குறித்த ஒரு செய்தியுடன் அனுப்பியதில் இருந்து துனீசியாவின் பஹாய்கள் ஒரு நூற்றாண்டைக் கொண்டாடுகிறார்கள்.
அந்நாட்டு பஹாய்களின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகிய, அவ்வேளை ஷேக் முஹைத்-தின் சப்ரி, துனிஸின் முக்கிய வீதி ஒன்றில், மனிதகுலத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு போன்ற ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையிலான அமைதியான உலகம் குறித்த பஹாய் சமயத்தின் தொலைநோக்கால் ஈர்க்கப்பட்ட இளைஞர் குழு ஒன்றைச் சந்தித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த இளைஞர்கள் பஹாய் போதனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதுடன், தங்கள் வாழ்க்கையைத் தங்களின் சமுதாயத்திற்கான சேவைக்கு அர்ப்பணித்தனர்.

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துனீசிய பஹாய்கள் அதே தொலைநோக்கை இன்னமும் பின்பற்றுகின்றனர். மிகச் சமீபத்தில், அதே பெருவீதியில் அமைதியான சகவாழ்வு பற்றிய கலந்துரையாடலை நடத்துகிறார்கள், அங்கு, மக்கள் அன்று செய்தது போலவே இன்றும் மற்றவர்களுடன் நட்புறவுடன் உரையாடச் செல்கின்றனர்.
சமூகங்கள் எவ்வாறு வன்முறையை முறியடிக்க முடியும் என்பதை ஆராய்வதற்காக சுமார் 50 ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுச் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்ட இந்த ஒன்றுகூடலை நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
குடும்பம், கல்வி, ஊடகம், விளையாட்டு போன்ற சமுதாய மேம்பாடு போன்ற, பலவித பாதைகளில் சமகால சமூகத்தின் வன்முறைப் பிரச்சினை பல்வேறு சூழல்களில் தீர்க்கப்பட வேண்டும் என வெளிவிவகார அலுவலகத்தின் முகமது பென் மௌசா விளக்குகிறார்.
“வன்முறைக்கான மூல காரணங்களை அடையாளம் காண்பது முக்கியம்,” என அவர் கூறுகிறார். இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வன்முறையை எதிர்கொள்வது சிந்தனையின் மட்டத்தில் தொடங்குகிறது என திரு. பென் மௌசா விளக்குகிறார்.

‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களைக் குறிப்பிட்டு, அவர் கூறுகிறார்: “போர் பற்றிய எண்ணம் வந்தால், நாம் அதை அமைதிக்கான வலுவான எண்ணத்தால் எதிர்த்திட வேண்டும். வெறுப்பு பற்றிய எண்ணம் அன்பின் ஒரு வலிமையான சிந்தனையால் அழிக்கப்பட வேண்டும்”
குறிப்பாக, இந்த தலைப்பு செய்தியாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது, அவர்கள் தங்கள் சமுதாயத்தைப் பற்றிய மக்களின் புலனுணர்வின் மீதான ஊடகங்களின் தாக்கத்தை விவாதித்தனர். கூட்டத்தில் ரிம் பென் கலிஃப்பே என்னும் பத்திரிகையாளர், சகவாழ்வு மற்றும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் ஊடகங்களின் முக்கிய பங்கு பற்றி உரையாற்றினார். “நிதி குறித்த அழுத்தங்களின் சூழலில், அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்கான வெறித்தனமான தேடலில், விழிப்புணர்வையும் நனவையும் அதிகரிப்பதற்கான அதன் சமுதாய மற்றும் கலாச்சாரம் குறித்த பங்கை சில சமயங்களில் மறந்திட நேரிடுவதுடன், அது சில சமயங்களில் வன்முறையையும் தூண்டிவிடலாம்.”

திருமதி பென் கலிஃப் வேறுபாடுகளை அதிகமாக ஏற்றுக்கொண்டு,
இந்த சவால்களை சமாளிக்கவும் அந்தத் துறையில் மற்றும் சமூகத்தில் உள்ள தொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் ஊடக சூழலை வளர்க்கவும் ஆவல் கொண்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி மேலும் பேசினார்.
துனிசியாவின் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த அஃபிஃபா பௌசரிரா பின் ஹுசைன், இந்த உணர்வை எதிரொலித்தார்: “நம்முடைய வேறுபாடுகளைக் கடந்து அமைதியான சமுதாயத்தை நிர்மாணிக்க, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கொள்கைக்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்தத் தாயகம் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கிறது.
சுமார் 20 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், துனிசியாவில் உள்ள முக்கிய செய்தித்தாள்களில், பஹாய் சமூகம் கடந்த 100 ஆண்டுகளில் அந்த நாட்டில் அதிக சகவாழ்வுக்காக ஆற்றிய பங்களிப்பை ஆராயும் இரண்டு குறும்படங்களின் திரையிடலும் அடங்கியது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1577/