“எங்கள் பன்முகத்தன்மையில் ஒருமை”: துனீசிய சமய சமூகங்கள் சகவாழ்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன


துனிஸ், துனீசியா – துனீசியாவின் துனிஸ் நகரில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், தயாரிக்கப்பட்ட “சகவாழ்வுக்கான தேசிய ஒப்பந்தத்தில்” அந்த நாட்டின் சமய சமூகங்கள் கூட்டாககையெழுத்திட்டன. அதில், அமைதியான சமூகத்தை பேணுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

பஹாய் வெளிவிவகார அலுவலகத்தைச் சேர்ந்த முகமட் பென் மூஸா கூறுகையில், “இந்த முயற்சி ஒற்றுமையின் சக்திவாய்ந்த அடையாளம். “இந்த ஒப்பந்தம், நமது பன்முகத்தன்மையில் நாம் ஒற்றுமையாக இருப்பதைக் காட்டுகிறது. நமது சமுதாயத்தின் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காட்சியை முன்வைக்கிறது, இது நமது அத்தியாவசிய ஒற்றுமையின் வளர்ந்து வரும் நனவை ஒப்புக்கொள்கிறது.”

மத விவகார அமைச்சின் பிரதிநிதியும் பொது சமூக அமைப்புகளும் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாடு, துனீசியாவிலும் அரபு பிரதேசங்களின் பிற இடங்களிலும் பரவலான ஊடக கவரேஜைப் பெற்றது. “ஒன்றுகூடல்” என பொருள்படும் அட்டலக்கி என்னும் சர்வமத அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
துனீசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் முகமது ரிதா பெல்ஹாசின் உட்பட துனிசியாவின் சமய சமூகங்களின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்ட “சகவாழ்வுக்கான தேசிய ஒப்பந்தத்தின்” படம் இங்கே உள்ளது.

துனீசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் முகமது ரிதா பெல்ஹாசின் உட்பட துனீசியாவின் சமய சமூகங்களின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்ட “சகவாழ்வுக்கான தேசிய ஒப்பந்தத்தின்” படம் இங்கே உள்ளது.

முஸ்லீம், கிறிஸ்தவர், யூதர்கள் மற்றும் பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட மதிப்புகளின் தொகுப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் இது கடந்த பல ஆண்டுகளாக மத மற்றும் சிவில் சமூகத் தலைவர்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பின் உச்சக்கட்டமாகும்.

சமூகத்தை மாற்றியமைப்பதில் பெண்களின் முக்கிய பங்கு இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒரு பிரச்சினையாகும்.

பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்னும் பஹாய் கொள்கை குறித்து திரு. பென் மௌசா கூறுகிறார்: “சகவாழ்வின் ஒரு முக்கிய பரிமாணம் மற்றும் மிகவும் அமைதியான சமூகத்தை அடைவதற்கான தேவை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முழுப் பங்கேற்பாகும். நமது சமூகத்தின் பாதி மக்கள் தொகை மற்ற பாதியுடன் சமநிலையில் அங்கீகரிக்கப்படாவிட்டால் நாம் அமைதியை அடைய முடியாது.

அவர் மேலும் கூறுகிறார்: “இந்த முன்முயற்சி இந்த அத்தியாவசிய உண்மையையே நம் நனவில் பிரதானமாக வைக்கிறது.”

உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கான செய்தியாளர் மாநாடு துனீசியாவிலும் அரபு பிரதேசங்களின் பிற இடங்களிலும் பரவலான ஊடக கவரேஜைப் பெற்றது.

இந்த ஒப்பந்தம் வெறுப்பைத் தூண்டும் மற்றும் சமூகத்தின் பிரிவுகளை “வேறானவை” என்று வெளிப்படுத்தும் சொல்லாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் துனீசிய சமுதாயத்தின் பன்முகத்தன்மைக்கு இளைஞர்கள் அதிக மதிப்பை உருவாக்கிக்கொள்ள நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறது. .

அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் ஆக்கபூர்வமான சமூக வடிவங்களை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், மதங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக சித்தரிக்கும் குரல்களுக்கு பதில் குரலளிப்பதாகவும் இந்த சர்வமத முயற்சியின் செய்தித் தொடர்பாளர் இமாம் அல்-காதிப் கரீம் ஷானிபா கூறினார். “மத பன்முகத்தன்மை நமது சமூகத்தை வளப்படுத்துகிறது மற்றும் ஒத்துழைப்பு மற்றும் சகவாழ்வுக்கான பரந்த வாய்ப்பை வழங்குகிறது,” என அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

துனிசியாவின் பஹாய்கள் சகவாழ்வு பற்றிய சொற்பொழிவுக்கு பங்களித்து வருகின்றனர், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளில் விவாத மேடைகளை நடத்தி வருகின்றனர்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, துனிசியாவில் உள்ள நம்பிக்கை சமூகங்கள் தங்கள் சக குடிமக்களை ஒரே குரலில் உரையாற்றுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றன. ஏப்ரல் 2020 இல், அந்நாட்டின் பஹாய்கள், சகவாழ்வு பற்றிய சொற்பொழிவில் தொடர்ந்து பங்கேற்பதன் ஒரு பகுதியாக, மற்ற மதச் சமூகங்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளுடன் இணைந்து தங்கள் சமூகத்திற்கு நம்பிக்கை மற்றும் உறுதிமொழியை வழங்க, சுகாதார நெருக்கடிக்கு பயனுள்ள விடையிறுப்பை வழிகாட்ட அறிவியல் மதம் இரண்டிற்கும் அழைப்பு விடுத்தனர். மதம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1584/

BIC நியூ யார்க்: பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பருவநிலை நெருக்கடிக்கான விடையிறுப்புக்கு அவசியம்


16 பிப்ரவரி 2022

BIC நியூயார்க், 16 பிப்ரவரி 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஒரு புதிய அறிக்கை, காலநிலை நெருக்கடியின் எதிரில் மீட்சித்திறத்தைப் பேணுவதற்கு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கையானது, ஆளுமைச் செயல்பாட்டில் நனவுடன் பதிக்கப்பட வேண்டும் என முன்மொழிகிறது. .

“பெருந்தொற்றின் போதும் சமீபத்திய காலநிலையால் தூண்டப்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு மனிதகுலம் ஒன்றிணைவதற்கான திறனை வெளிப்படுத்திய பல தருணங்கள் உள்ளன. சமத்துவ கலாச்சாரம் ஒரு பயனுள்ள விடையிறுப்புக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை இந்த தருணங்கள் காட்டுகின்றன,” என்கிறார் BIC-இன் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர்.

BIC அறிக்கையானது, சமூகம் மற்றும் வாழ்வில் பெண்களின் பங்கேற்பு மற்றும் நெருக்கடிகளுக்கான பதில்களுக்கான தடைகளை உடைப்பதற்கான உலகளாவிய பஹாய் சமூகத்தின் முயற்சிகளுக்கு சில எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. BIC கூறுகிறது: “தார்மீகக் கல்வித் திட்டங்கள் மூலம், ஒற்றுமை மற்றும் கூட்டுறவு மனப்பான்மை சிறு வயதிலிருந்தே தூண்டப்படுகிறது, இதனால் பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகங்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் மதிப்புமிக்க கூட்டாளிகளாக ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.”

இந்த அறிக்கை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் (UN) ஆணையத்தின் 66வது அமர்வுக்கு BIC-யின் பங்களிப்பின் ஒரு பகுதியாகும். இந்த ஆணையம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான ஐநா-வின் முதன்மையான வருடாந்திர உலகளாவிய மன்றமாகும். இது பெண்களின் உரிமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் சமத்துவத்திற்கான உலகளாவிய தரநிலைகளை வடிவமைக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனை மற்றும் பாலின சமத்துவத்தின் கொள்கைகளை எடுத்துரைக்கும் பல்வேறு மன்றங்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன.

“மீள்ச்சிச்திறத்தின் நடுமையம்: சமத்துவ கலாச்சாரத்திற்கான ஒரு ஊக்கியாக காலநிலை நெருக்கடி” என தலைப்பிடப்பட்ட BIC அறிக்கை, நிர்வாகம், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகம் ஆகிய செயல்முறைகளில் அதிகமான பெண்கள் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன், காலநிலை அபாயங்களின், அதிகரிப்பின் போது,”சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது மானிடத்திற்கு அது எவ்வளவு நன்மை பயக்கும் என்பது தெளிவாகிறது…”

அந்த அறிக்கையின் ஒரு பகுதியாக: “சமூகத்தின் சவால்கள் மீதான பயனுள்ள ஆராய்வுக்கு பல முன்னோக்குகள் ஒரு முன்நிபந்தனை என்பதை அங்கீகரிப்பது ஒவ்வொரு கருத்தாடல் சூழலையும் வகைப்படுத்த வேண்டும். இது, வரலாற்று ரீதியாக ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இடங்களை உள்ளடக்கிய சூழலை மாற்றும் பணியின் ஒரு பகுதியாக இருக்கும், அங்கு அனைவரும் ஈடுபடுவதற்கு ஆற்றல் பெற்றதாக உணர்வர். மேலும், ஆண்கள், புரிந்துகொள்ளும் உணர்வால் உந்துதல் பெற்று, பெண்களுடன் உண்மையாகக் கலந்தாலோசிக்கவும் செயல்படவும் கற்றுக்கொள்கிறார்கள்.

இது துல்லியமாக கொந்தளிப்பு காலங்களில், அவற்றின் அடிப்படையிலான அனுமானங்களை மறு ஆய்வு செய்வதன் மூலம், கூட்டு மதிப்புகளை மறுவரையறை செய்வதற்கு ஆழமான வாய்ப்புகள் உள்ளன என ​​ BIC கூறுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1583/

சிலி நாட்டு வழிபாட்டு இல்லம்: வளமான நகரங்களை எவ்வாறு பேணுவது


பொது சமூகத் தலைவர்கள் மற்றும் சிலி பஹாய்களின் பிரதிநிதிகள் அனைவரின் நல்வாழ்வுக்காக நகரங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்கின்றனர்.

9 பிப்ரவரி 2022
_______________________________________________

சான்டியாகோ, சிலி, 9 பிப்ரவரி 2022, (BWNS) — நீதி மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக கொள்கைகள் எவ்வாறு நகரங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியும்; பெரிய நகர்ப்புற மையங்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் தங்கள் குடிமக்களின் பங்கேற்பை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?

இவை, பொது சமூகத் தலைவர்களாலும், சிலி பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகளாலும், பொது மக்களாலும் “சமூக அநீதி மற்றும் இன ஒதுக்கல் முதல் மனிதரை நடுமையத்தில் கொண்ட நகரங்களின் ஒரு புதிய மாதிரி வரை” என்னும் தலைப்பில் பொது கருத்தரங்கில் ஆராயப்பட்ட சில கேள்விகளாகும். இந்த நிகழ்ச்சி சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் நடந்தது.

“அனைவரின் நலனையும் கவனித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை நோக்கி நகர்வதற்கு — மனித வாழ்க்கையின் லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் – செழிப்பு குறித்த மறுகருத்தாக்கம் தேவைப்படுகிறது,” என சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர் வெரோனிகா ஓரே தமது தொடக்க உரையில் கூறினார்.

சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் சிலியின் பஹாய்களின் பிரதிநிதிகள் அனைவரின் நல்வாழ்வுக்காக நகரங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்கின்றனர்.

சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அந்த நகரத்தின் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து பல இடங்களில் பொது விவாதத்தைத் தூண்டிய ஒரு வார கால நகர அளவிலான முன்முயற்சியான “சாண்டியாகோ திறந்த இல்லத்தின்” ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பொது சேவைகள் மற்றும் கல்விக்கான அணுகல் போன்றவற்றில் வளர்ந்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள முயலும் பொது கருத்தரங்கங்களின் செயல்திறனை பஹாய் ஆலோசனை கொள்கை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதை பங்கேற்பாளர்கள் எடுத்துக் காட்டினர்.

“உள்ளூர் வாசிகளின் கருத்துகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத கொள்கைகளைச் செயல்படுத்துவதில் இருந்து அண்டைப்புறங்களில் பல பிரச்சினைகள் எழுகின்றன,” என கிராமப்புற வளர்ச்சிக்கான லத்தீன் அமெரிக்க மையத்தின் இயக்குனர் டானே ம்லினார்ஸ் கூறினார்.

கலந்துரையாடல் சிலி பஹாய் வழிபாட்டு இல்ல மைதானத்தில் நடைபெற்றது

அவர் மேலும் கூறினார்: “எத்தனை முறை முக்கிய முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன என்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே ஒரு பொது விவாதத்தில் கலந்துகொள்ள மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்; உள்ளூர் யதார்த்தத்திலிருந்து அப்பாற்பட்டு இருக்கும் மற்றவர்கள் எடுத்த முடிவுகளை வெறுமனே சரிபார்க்க மட்டுமே கூட்டம் நடைபெற்றது?”

பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் லூயிஸ் சாண்டோவல், கடந்த பல ஆண்டுகளாக உள்ளடங்கிய கலந்துரையாடல் தளங்களை உருவாக்குவதில், அரசாங்க அதிகாரிகள், சமய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் சமூக ஒருங்கிணைப்பு என்னும் தலைப்பில் ஒன்றாக கலந்தாலோசிக்க வழிபாட்டு சபை ஆற்றிய பங்கைப் பற்றி பேசினார்.

கலுந்துரையாடலுக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் கோயிலில் நடைபெற்ற ஒரு வழிபாட்டில் கலந்துகொண்டனர்

“தங்கள் சமூகத்தை ப் புதுப்பிப்பதற்குப் பணிபுரிய விரும்பும் அனைத்து மக்களுக்கும் ஆலயமும் அதன் சுற்றுப்புறங்களும் ஓர் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளன. மக்கள் இங்கு வரும்போது, கோயிலின் ஆன்மீக சூழ்நிலையால் அவர்கள் உத்வேகம் பெறுகிறார்கள். அவர்கள் அது வரை சந்தித்திருக்கவியலாத பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்களுடன் கலந்தாலோசிக்க வாய்ப்பு உள்ளது” என அவர் கூறினார்.

சிலி சமூகத்தின் மாற்றத்திற்குப் பங்களித்திட வழிபாட்டு இல்லம் மிகப்பெரிய இயல்திறனைக் கொண்டுள்ளது என திரு. சாண்டோவல் விளக்கினார். “சிலி மக்களின் அபிலாஷைகளுடன் எதிரொலிக்கும் கோட்பாடுகளான — ஆலயத்தால் ஊக்குவிக்கப்படும் சேவை மற்றும் வழிபாட்டுக் கொள்கைகளை பிரதிபலிப்பதில் இருந்து பார்வையாளர்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.”

சிலி பஹாய்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் (youtube) சேனலில் ஸ்பானிய மொழியில் விவாதத்தின் பதிவு இங்கே கிடைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1582/

ஐக்கிய அரசு: புதிய வலையொளி மதத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான உறவை ஆராய்கின்றது.


ஐக்கிய அரசின் பஹாய்களால் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு வலையொளி, சமூகத்தில் ஊடகங்கள் எவ்வாறு ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பது பற்றிய ஆழமான விவாதங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைக்கிறது.

லண்டன், 2 பிப்ரவரி 2022, (BWNS) – மதத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான உறவை ஆராயும் புதிய போட்காஸ்ட் (வலையொளி) தொடர், “In Good Faith)”, ஐக்கிய இராஜ்யத்தில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தால் தொடங்கப்பட்டது.

இந்த வலையொளி, சமூகத்தில் ஊடகங்களின் பங்கு பற்றிய சொல்லாடலுக்குப் பங்களிக்கும் அலுவலகத்தின் நீண்டகால முயற்சிகளின் ஒரு பகுதியாகும். சமீபத்திய ஆண்டுகளில், அலுவலகம் ஊடகங்கள் எவ்வாறு பொது உரையாடலை வடிவமைக்கிறது போன்ற தேடல் கேள்விகளைக் கேட்பதற்கு பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமய சமூகங்களின் தலைவர்களை ஒன்றிணைத்து.

சமீபத்திய ஆண்டுகளில், அலுவலகம் பல ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் நம்பிக்கை சமூகங்களின் தலைவர்களை ஒன்றிணைத்து, ஊடகங்கள் எவ்வாறு பொது உரையாடலை வடிவமைக்கிறது என்பது போன்ற தேடல் கேள்விகளைக் தொடுக்கிறது.

“அதிகமான ஊடகவியலாளர்களும் ஊடகப் பயிற்சியாளர்களும் மதத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான உறவு எவ்வாறு ஆக்கபூர்வமான முறையில் உருவாகலாம் என்பது பற்றிய சிந்தனைமிக்க விவாதங்களில் ஆர்வமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என பொது விவகார அலுவலகத்தின் சோஃபி கிரிகோரி கூறுகிறார்.

இந்தத் தொடரின் முதல் பகுதி, முஸ்லீம் கவுன்சில் ஆஃப் பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் ரிஸ்வானா ஹமீத் மற்றும் ஃப்ரீலான்ஸ் மத பத்திரிகையாளரும் பிபிசி வானொலியின் முன்னாள் தயாரிப்பாளருமான ரோஸி டாசன் ஆகியோரை ஒன்றிணைத்து, ஊடகங்களில் மதத்தின் பிரதிநிதித்துவத்தை ஆராய்கிறது.

திருமதி. டாசன் கூறுகிறார்: “மதத்தின் ஒரு முழுமையான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு, விஷயங்களை கருப்பு மற்றும் வெள்ளையாகப் பார்க்கும் பரபரப்பான செய்தி அறிக்கையிடலில் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். … இது நடக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் என நான் நினைக்கின்றேன்.

“In Good Faith” வலயைொளி தொடரின் முதல் பகுதி, ரிஸ்வானா ஹமீத் (கீழ்-வலது), முஸ்லிம் கவுன்சில் ஆஃப் பிரித்தானியாவின் ஊடக கண்காணிப்பு மையத்தின் இயக்குநர், ஒரு ஃப்ரீலான்ஸ் மத பத்திரிகையாளர் மற்றும் பிபிசி வானொலியின் முன்னாள் தயாரிப்பாளரான ரோஸி டாசன் (கீழ்-இடது) ஆகியோருடன் பொது விவகார அலுவலக உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது.

சவாலின் ஒரு பகுதி என்னவென்றால், பொது நலனுக்காகச் செயல்படும் நபர்களைப் பற்றிய செய்திகள் அகத்தூண்டலின் மூலத்தை அரிதாகவே வெளிப்படுத்துகின்றன, அதாவது அவர்களின் மத நம்பிக்கைகள். “நீங்கள் அதை அரிதாகவே பார்ப்பீர்கள். … ‘நான் ஒரு கிறிஸ்தவன் அல்லது முஸ்லீம் என்பதால் இதைச் செய்கிறேன்’ என்று மக்கள் கையை உயர்த்திக் காட்ட மாட்டார்கள்.

திருமதி கிரிகோரி, வலையொளியின் எதிர்காலத்தைப் பற்றி பிரதிபலிக்கும் போது: “In Good Faith’ சமூகத்தின் முன்னேற்றத்திற்கான மதத்தின் ஆக்கபூர்வமான சக்திகள் பற்றியும் மக்களிடையே நல்லிணக்கத்தைத் தூண்டுவதுடன் அந்த சக்தியை மேம்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கு பற்றிய ஆழமான பிரதிபலிப்பையும் தூண்டும் என நாங்கள் நம்புகிறோம். .”

வலையொளியின் முதல் பகுதி இங்கே கிடைக்கிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1581/