

லண்டன், 2 பிப்ரவரி 2022, (BWNS) – மதத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான உறவை ஆராயும் புதிய போட்காஸ்ட் (வலையொளி) தொடர், “In Good Faith)”, ஐக்கிய இராஜ்யத்தில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தால் தொடங்கப்பட்டது.
இந்த வலையொளி, சமூகத்தில் ஊடகங்களின் பங்கு பற்றிய சொல்லாடலுக்குப் பங்களிக்கும் அலுவலகத்தின் நீண்டகால முயற்சிகளின் ஒரு பகுதியாகும். சமீபத்திய ஆண்டுகளில், அலுவலகம் ஊடகங்கள் எவ்வாறு பொது உரையாடலை வடிவமைக்கிறது போன்ற தேடல் கேள்விகளைக் கேட்பதற்கு பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சமய சமூகங்களின் தலைவர்களை ஒன்றிணைத்து.

“அதிகமான ஊடகவியலாளர்களும் ஊடகப் பயிற்சியாளர்களும் மதத்திற்கும் ஊடகத்திற்கும் இடையிலான உறவு எவ்வாறு ஆக்கபூர்வமான முறையில் உருவாகலாம் என்பது பற்றிய சிந்தனைமிக்க விவாதங்களில் ஆர்வமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என பொது விவகார அலுவலகத்தின் சோஃபி கிரிகோரி கூறுகிறார்.
இந்தத் தொடரின் முதல் பகுதி, முஸ்லீம் கவுன்சில் ஆஃப் பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் ரிஸ்வானா ஹமீத் மற்றும் ஃப்ரீலான்ஸ் மத பத்திரிகையாளரும் பிபிசி வானொலியின் முன்னாள் தயாரிப்பாளருமான ரோஸி டாசன் ஆகியோரை ஒன்றிணைத்து, ஊடகங்களில் மதத்தின் பிரதிநிதித்துவத்தை ஆராய்கிறது.
திருமதி. டாசன் கூறுகிறார்: “மதத்தின் ஒரு முழுமையான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு, விஷயங்களை கருப்பு மற்றும் வெள்ளையாகப் பார்க்கும் பரபரப்பான செய்தி அறிக்கையிடலில் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். … இது நடக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் என நான் நினைக்கின்றேன்.

சவாலின் ஒரு பகுதி என்னவென்றால், பொது நலனுக்காகச் செயல்படும் நபர்களைப் பற்றிய செய்திகள் அகத்தூண்டலின் மூலத்தை அரிதாகவே வெளிப்படுத்துகின்றன, அதாவது அவர்களின் மத நம்பிக்கைகள். “நீங்கள் அதை அரிதாகவே பார்ப்பீர்கள். … ‘நான் ஒரு கிறிஸ்தவன் அல்லது முஸ்லீம் என்பதால் இதைச் செய்கிறேன்’ என்று மக்கள் கையை உயர்த்திக் காட்ட மாட்டார்கள்.
திருமதி கிரிகோரி, வலையொளியின் எதிர்காலத்தைப் பற்றி பிரதிபலிக்கும் போது: “In Good Faith’ சமூகத்தின் முன்னேற்றத்திற்கான மதத்தின் ஆக்கபூர்வமான சக்திகள் பற்றியும் மக்களிடையே நல்லிணக்கத்தைத் தூண்டுவதுடன் அந்த சக்தியை மேம்படுத்துவதில் ஊடகங்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கு பற்றிய ஆழமான பிரதிபலிப்பையும் தூண்டும் என நாங்கள் நம்புகிறோம். .”
வலையொளியின் முதல் பகுதி இங்கே கிடைக்கிறது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1581/