
9 பிப்ரவரி 2022
_______________________________________________
சான்டியாகோ, சிலி, 9 பிப்ரவரி 2022, (BWNS) — நீதி மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக கொள்கைகள் எவ்வாறு நகரங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியும்; பெரிய நகர்ப்புற மையங்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் தங்கள் குடிமக்களின் பங்கேற்பை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?
இவை, பொது சமூகத் தலைவர்களாலும், சிலி பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகளாலும், பொது மக்களாலும் “சமூக அநீதி மற்றும் இன ஒதுக்கல் முதல் மனிதரை நடுமையத்தில் கொண்ட நகரங்களின் ஒரு புதிய மாதிரி வரை” என்னும் தலைப்பில் பொது கருத்தரங்கில் ஆராயப்பட்ட சில கேள்விகளாகும். இந்த நிகழ்ச்சி சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் நடந்தது.
“அனைவரின் நலனையும் கவனித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை நோக்கி நகர்வதற்கு — மனித வாழ்க்கையின் லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் – செழிப்பு குறித்த மறுகருத்தாக்கம் தேவைப்படுகிறது,” என சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர் வெரோனிகா ஓரே தமது தொடக்க உரையில் கூறினார்.

சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அந்த நகரத்தின் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து பல இடங்களில் பொது விவாதத்தைத் தூண்டிய ஒரு வார கால நகர அளவிலான முன்முயற்சியான “சாண்டியாகோ திறந்த இல்லத்தின்” ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொது சேவைகள் மற்றும் கல்விக்கான அணுகல் போன்றவற்றில் வளர்ந்து வரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள முயலும் பொது கருத்தரங்கங்களின் செயல்திறனை பஹாய் ஆலோசனை கொள்கை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதை பங்கேற்பாளர்கள் எடுத்துக் காட்டினர்.
“உள்ளூர் வாசிகளின் கருத்துகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத கொள்கைகளைச் செயல்படுத்துவதில் இருந்து அண்டைப்புறங்களில் பல பிரச்சினைகள் எழுகின்றன,” என கிராமப்புற வளர்ச்சிக்கான லத்தீன் அமெரிக்க மையத்தின் இயக்குனர் டானே ம்லினார்ஸ் கூறினார்.

அவர் மேலும் கூறினார்: “எத்தனை முறை முக்கிய முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன என்பதைத் தெரிந்துகொள்ள மட்டுமே ஒரு பொது விவாதத்தில் கலந்துகொள்ள மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்; உள்ளூர் யதார்த்தத்திலிருந்து அப்பாற்பட்டு இருக்கும் மற்றவர்கள் எடுத்த முடிவுகளை வெறுமனே சரிபார்க்க மட்டுமே கூட்டம் நடைபெற்றது?”
பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் லூயிஸ் சாண்டோவல், கடந்த பல ஆண்டுகளாக உள்ளடங்கிய கலந்துரையாடல் தளங்களை உருவாக்குவதில், அரசாங்க அதிகாரிகள், சமய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் சமூக ஒருங்கிணைப்பு என்னும் தலைப்பில் ஒன்றாக கலந்தாலோசிக்க வழிபாட்டு சபை ஆற்றிய பங்கைப் பற்றி பேசினார்.

“தங்கள் சமூகத்தை ப் புதுப்பிப்பதற்குப் பணிபுரிய விரும்பும் அனைத்து மக்களுக்கும் ஆலயமும் அதன் சுற்றுப்புறங்களும் ஓர் ஈர்ப்பு மையமாக மாறியுள்ளன. மக்கள் இங்கு வரும்போது, கோயிலின் ஆன்மீக சூழ்நிலையால் அவர்கள் உத்வேகம் பெறுகிறார்கள். அவர்கள் அது வரை சந்தித்திருக்கவியலாத பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்களுடன் கலந்தாலோசிக்க வாய்ப்பு உள்ளது” என அவர் கூறினார்.
சிலி சமூகத்தின் மாற்றத்திற்குப் பங்களித்திட வழிபாட்டு இல்லம் மிகப்பெரிய இயல்திறனைக் கொண்டுள்ளது என திரு. சாண்டோவல் விளக்கினார். “சிலி மக்களின் அபிலாஷைகளுடன் எதிரொலிக்கும் கோட்பாடுகளான — ஆலயத்தால் ஊக்குவிக்கப்படும் சேவை மற்றும் வழிபாட்டுக் கொள்கைகளை பிரதிபலிப்பதில் இருந்து பார்வையாளர்கள் உத்வேகம் பெறுகிறார்கள்.”
சிலி பஹாய்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் (youtube) சேனலில் ஸ்பானிய மொழியில் விவாதத்தின் பதிவு இங்கே கிடைக்கும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1582/