
16 பிப்ரவரி 2022
BIC நியூயார்க், 16 பிப்ரவரி 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஒரு புதிய அறிக்கை, காலநிலை நெருக்கடியின் எதிரில் மீட்சித்திறத்தைப் பேணுவதற்கு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கையானது, ஆளுமைச் செயல்பாட்டில் நனவுடன் பதிக்கப்பட வேண்டும் என முன்மொழிகிறது. .
“பெருந்தொற்றின் போதும் சமீபத்திய காலநிலையால் தூண்டப்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு மனிதகுலம் ஒன்றிணைவதற்கான திறனை வெளிப்படுத்திய பல தருணங்கள் உள்ளன. சமத்துவ கலாச்சாரம் ஒரு பயனுள்ள விடையிறுப்புக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை இந்த தருணங்கள் காட்டுகின்றன,” என்கிறார் BIC-இன் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர்.

இந்த அறிக்கை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் (UN) ஆணையத்தின் 66வது அமர்வுக்கு BIC-யின் பங்களிப்பின் ஒரு பகுதியாகும். இந்த ஆணையம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான ஐநா-வின் முதன்மையான வருடாந்திர உலகளாவிய மன்றமாகும். இது பெண்களின் உரிமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் சமத்துவத்திற்கான உலகளாவிய தரநிலைகளை வடிவமைக்கிறது.

“மீள்ச்சிச்திறத்தின் நடுமையம்: சமத்துவ கலாச்சாரத்திற்கான ஒரு ஊக்கியாக காலநிலை நெருக்கடி” என தலைப்பிடப்பட்ட BIC அறிக்கை, நிர்வாகம், பொருளாதாரம், கல்வி மற்றும் சமூகம் ஆகிய செயல்முறைகளில் அதிகமான பெண்கள் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதுடன், காலநிலை அபாயங்களின், அதிகரிப்பின் போது,”சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது மானிடத்திற்கு அது எவ்வளவு நன்மை பயக்கும் என்பது தெளிவாகிறது…”
அந்த அறிக்கையின் ஒரு பகுதியாக: “சமூகத்தின் சவால்கள் மீதான பயனுள்ள ஆராய்வுக்கு பல முன்னோக்குகள் ஒரு முன்நிபந்தனை என்பதை அங்கீகரிப்பது ஒவ்வொரு கருத்தாடல் சூழலையும் வகைப்படுத்த வேண்டும். இது, வரலாற்று ரீதியாக ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இடங்களை உள்ளடக்கிய சூழலை மாற்றும் பணியின் ஒரு பகுதியாக இருக்கும், அங்கு அனைவரும் ஈடுபடுவதற்கு ஆற்றல் பெற்றதாக உணர்வர். மேலும், ஆண்கள், புரிந்துகொள்ளும் உணர்வால் உந்துதல் பெற்று, பெண்களுடன் உண்மையாகக் கலந்தாலோசிக்கவும் செயல்படவும் கற்றுக்கொள்கிறார்கள்.
இது துல்லியமாக கொந்தளிப்பு காலங்களில், அவற்றின் அடிப்படையிலான அனுமானங்களை மறு ஆய்வு செய்வதன் மூலம், கூட்டு மதிப்புகளை மறுவரையறை செய்வதற்கு ஆழமான வாய்ப்புகள் உள்ளன என BIC கூறுகிறது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1583/