அப்துல்-பஹாவின் நினைவாலயம்: உருபெற்று வரும் நினைவாலயம் மானிடத்தின் அமைதிக்கும் சேவைக்குமான ஒரு சின்னமாகத் திகழ்கின்றது.
21 மார்ச் 2022
பஹாய் உலக மையம் — ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்துக்கான தளத்தில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பஹாய்கள் குறிப்பாக நவ்-ரூஸ் தினமான இன்று வசந்தகாலத்தின் முதல் நாளும் ஆன்மீக புதுப்பிப்பிற்கான நாளுமான இன்று உலகளாவிய அமைதிக்கான அவரது அவசர அழைப்பை, நினைவு கூர்கின்றனர்.
இந்த நினைவாலயம் கட்டி முடிக்கப்பட்டதும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் எண்ணற்ற பார்வையாளர்கள், ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுவதற்கும், அமைதியின் தூதர், சமூக நீதியின் நாயகர், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு குறித்த கொள்கையை நிலைநிறுத்துபவர் என்னும் அவரது பணிகளிலிருந்து உத்வேகம் பெறுவதற்கு அமைதிமிகு தியனத்திற்கான தளமாக விளங்கும். .
மேற்கத்திய பயணத்தின் போது அவர் ஆற்றிய உரைகளில் ஒன்றில், ‘அப்துல்-பாஹா வசந்த உத்தராயணம் (மகா விசுவம்) தொடர்புடைய இயற்கையின் புதுப்பித்தல் பற்றிய உருவகத்திலிருந்து: “நீங்கள் வளரும் தாவரங்களாக மாறுங்கள். உங்கள் இதயங்கள் என்னும் மரங்கள் புதிய இலைகளையும் பலவிதமான பூக்களையும் விளைவிக்கட்டும். லௌகீக நாகரீகத்தில் வளர்ந்து மேம்பாடு கண்டுள்ள மனிதகுல உலகமானது ஆன்மீக இலட்சியங்களை வெளிக்கொண்டு வருவதில் விரைவாகி அதனிலிருந்து சிறந்த கனிகள் தோன்றட்டுமாக.
நினைவாலய தளத்தின் முன்னேற்றம் பின்வரும் படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சன்னதியின் மையப் பகுதியில் விரிந்து கிடக்கும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிக்கான கட்டமைப்பை உருவாக்கும் உன்னிப்பான வேலை முடியும் தருவாயில் உள்ளது.
Formwork பணியின் இந்த அனிமேஷன் வரிசையானது, பாலிஸ்டிரீன் கட்டமைப்பை வைப்பது, rebar வைப்பது, கான்கிரீட்டை ஊற்றுவது மற்றும் இறுதியாக formwork-ஐ அகற்றுவது உள்ளிட்ட trellis-M உருவாக்கும் செயல்முறையைக் காட்டுகிறது.
Formwork-இல் துல்லியமாக வைக்கப்பட்டுள்ள EPS தொகுதிகள் உள்ளன, அவை குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் கட்டமைப்பிற்கு ஓர் அச்சை உருவாக்கும்.வடக்கு மற்றும் தெற்கு பிளாசாக்களின் வாசல் சுவர்களுடன் இணைக்கும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் பக்கங்களில் நீட்டிப்புகளை உருவாக்க எஃகு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டையான பளிங்குக் கற்களை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. இங்கே படத்தில் இருப்பது இத்தாலியின் கராரா நகரில் உள்ள குவாரியின் காட்சியாகும், அங்கு திட்டத்தில் பணிபுரியும் மார்பிள் நிறுவனமான மார்கிராஃப் – நினைவாலயத்திற்கு கற்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பஹாய் சமூகத்தின் பணிக்கும் இத்தாலியின் இந்தப் பகுதிக்கும் 1940கள் வரையிலான உறவைப் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்..
குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் ஒரு பகுதியின் முழு அளவிலான மாதிரியானது இத்தாலியின் சியாம்போவில் உள்ள மார்கிராஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது, இது குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட அடிப்பகுதியில் கல்லை ஏற்றும் பலக்கிய செயல்பாட்டில் பயன்படுத்த சாத்தியமான அணுகுமுறைகளை உருவாக்க உதவுகிறது. இங்கு காணப்படும் பளிங்கு காட்சிக்கானது மற்றும் இறுதிப் பொருள் அல்ல.பஹாய் உலக மையத்தில் உள்ள திட்ட அலுவலகத்தின் பணியாளர்கள் சமீபத்தில் மார்கிராஃப் (Margraf) தொழிற்சாலைக்கு வருகை தந்து, குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி மற்றும் ஆலயத்தின் முக்கிய கட்டிடத்திற்கான பளிங்கு தயாரிப்பதற்கான திட்டங்களின் அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.
இதற்கிடையில், விரிவாக்கப்பட்ட EPS தொகுதிகளால் நிரப்பப்படும் போது சன்னதியின் இருபுறமும் உள்ள இரண்டு தோட்ட berm-களின் கட்டுமானத்தின் ஒரு புதிய கட்டம் தொடங்கப்பட்டது. இது EPS-இன் புதுமையான பயன்பாடாகும், இது கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் சிறிய எடையைச் சேர்க்கும் அதே வேளையில் berm-களுக்கு வடிவத்தையும் அளவையும் கொடுக்கும்.
கிழக்கு berm மீண்டும் நிரப்பப்படுவதில் முன்னேற்றம் இங்கே காணப்படுகிறது. ஒன்றுடன் ஒன்று அடுக்குகளில் தொகுதிகள் வைப்பது, berm-களின் நிலப்பரப்புக்கு உறுதியான தளத்தை வழங்குவதற்கு கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது.நினைவாலயத்திற்கு வடக்கே, வடக்கு பிலாஸா தரை பூர்த்தியாகிவிட்டதுஇடதுபுறத்தில் உள்ள வான்வழிக் காட்சியில் காணப்படுவது போல், தெற்கு பிளாசா தளத்தின் பெரும்பகுதியும் சன்னதியைச் சுற்றியுள்ள பாதையும் முடிக்கப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் தெற்கு பிளாசா பூங்கா தொட்டிகள் கட்டப்பட்டு, இப்போது தளத்தின் பிற பகுதிகளிலிருந்து மீண்டும் பயன்படுத்தப்பட்ட EPS மூலம் நிரப்பப்படுகின்றன.தொட்டிகளில் வைக்கப்படவிருக்கும் EPS புலோக்குகள் இங்கே காணப்படுகின்றனஇத்தலத்தில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி, நினைவாலயத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களில் நிலவடிவ வேலை ஆகும். இங்கு காணப்படுகின்ற சில தாவரங்கள் (இடதுபுறம்) வெளியே உள்ள ஓரிடத்தில் வளர்க்கப்படுகின்றன. மற்றும், ஒரு வளைந்த தோட்டப் பாதை (வலது) ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் படங்கள் தளத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள பாதைகளுக்கான அடித்தலங்களைக் காண்பிக்கின்றன. கோவிலின் கிழக்கே பக்க தோட்டப் பாதைக்கான அடித்தளம் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. பிரதான கட்டமைப்பின் ஆதரவு தூண்களுக்கு நோண்டப்பட்ட மண் இப்போது தோட்டப் பாதையை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது.மேலே உள்ள படம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நுண்ணிய கொள்கலன்களின் பூகோளப் பின்னலை காட்டுகிறது, அவை மண்ணின் அடிப்படை அடுக்கைக் கட்டுப்படுத்துகின்றன, இது பக்க தோட்டப் பாதையின் அடித்தளத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான நுட்பமாகும்.தோட்டத்தின் பாதைகளின் ஓரங்களை அலங்கரிக்கவிருக்கும் மரங்களும் செடிகளும் இங்கு காணப்படுகின்றன.தோட்டப் பாதைகளில் பல இடங்களில் நடைமேைகள் உருவாக்கப்பட்டுள்ளன, அங்கு பெஞ்சுகள் மற்றும் நீரூற்றுகள் நிறுவப்பட்டு பார்வையாளர்களுக்கு அமைதியான தியானத்தை இடைநிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.தளத்தின் மற்றோர் இடத்தில் வருகையாளர் மையத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன.