BIC நியூயார்க்: காலநிலை நடவடிக்கையில் பெண்களின் முக்கிய பங்கை கருத்தரங்கு முன்னிலைப்படுத்துகிறது.


காலநிலை நடவடிக்கை மற்றும் விவாதங்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வண்ணமயமான படத்தொகுப்பு

இணையத்தில் கதையைப் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைக் காண, news.bahai.org செல்லவும்.

27 மார்ச் 2022

(BWNS) — BIC நியூயார்க் – பஹா’யி சர்வதேச சமூகத்தின் (BIC) நியூயார்க் அலுவலகம் சமீபத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா), சிவில் சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து காலநிலை நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் பெண்கள் எவ்வாறு ஒரு தனித்துவ நிலையில் உள்ளனர் என்பதை ஆராய பஹாய் வெளிவிவகார அலுவலகங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.

BIC-யின் ஒரு பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர், மன்றம் சமீபத்தில் வெளியிடப்பட்ட BIC-யினால் முன்வைக்கப்பட்ட “மீள்ச்சித்திறத்தின் மையம்: காலநிலை நெருக்கடியானது சமத்துவ கலாச்சாரத்திற்கான ஒரு வினையூக்கி” என்னும் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் கவனம் செலுத்தியது என விளக்கினார்.

“அந்த அறிக்கையின் கருத்தாக்கங்கள் மற்றும் கருப்பொருள்களை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இது உலகெங்கிலும் உள்ள பல சமூக நடவடிக்கையாளர்கள், அறிக்கையில் அடங்கியிருந்த யோசனைகளின் அடிப்படையில் ஒருவர் மற்றவரின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதித்தது, “என திருமதி ரமேஷ்ஃபர் கூறினார்.

பி.ஐ.சி. அறிக்கையில் ஒரு முக்கிய விஷயம் மற்றும் கூட்டத்தின் முக்கிய அம்சம் யாதெனில், அதிகரித்து வரும் காலநிலை அபாயங்களுக்கு மத்தியில், சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஊக்குவிக்கப்படும்போது மனிதகுலம் பயனடைகிறது.

ஐ.நா.வுக்கான செயிண்ட் லூசியாவின் நிரந்தர தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேட் வில்சன், காலநிலை நெருக்கடியில், முடிவெடுக்கும் இடங்களில் அதிகமான பெண்களைச் சேர்க்க வேண்டிய முக்கியமான தேவை குறித்துப் பேசினார். ஏனெனில், விகிதாசாரமற்ற முறையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் சவால்களை எதிர்கொள்வதில் அவர்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டியும் உள்ளது.

“பெண்கள் தங்கள் தேசங்களின் தாய்மார்கள் ஆவர். தங்கள் குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது, அவர்கள் உயிர்வாழ உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். பெண்கள் தொடர்ந்து தீர்வுகளைத் தேடுகிறார்கள், “என்று அவர் கூறினார், கரீபியனில் உள்ள பெண்களின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி, இயற்கை பேரழிவுகளின் காலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் அடிக்கடி பாதிக்கப்படும் நாட்டின் கட்டமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முற்படுகிறார்கள்.

புவேர்ட்டோ ரிக்கோவின் பஹா’யி சமூக நடவடிக்கை குழுவின் மற்றொரு பங்கேற்பாளரான இடாலியா மொராலெஸ்-சிமிகா, சமீபத்திய ஆண்டுகளில், புவேர்ட்டோ ரிக்கோவின் நிலையான விவசாயத்திற்கு பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர், இது அதன் உணவில் 85%0-ஐ இறக்குமதி செய்யும் ஒரு நாடு.  “இரண்டு சூறாவளிகளான பூகம்பங்கள் மற்றும் தொற்றுநோய்களின் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஒரு தேசிய சமூகமாக, எங்கள் மண் மிகவும் வளமானதாக இருந்தாலும், வெளியிலிருந்து வரும் உணவை நாங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ளோம்.”

இந்த உணர்தல் இளைஞர்களை, குறிப்பாக பெண்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவின் அளவை அதிகரிப்பதற்காக உணவு உற்பத்தி மற்றும் விவசாய வலைப்பின்னல்களின் வளர்ச்சியில் ஈடுபடத் தூண்டியுள்ளது என அவர் விளக்கினார். “சூறாவளியின் போது எல்லோரும் எங்களுக்கு உதவ விரும்பினாலும், இங்கே உணவைக் கொண்டுவர எந்த வழியும் இல்லை, தொங்கா தீவிவிலும் அதே விஷயம் நடப்பதை நாங்கள் இப்போதுதான் பார்த்திருக்கிறோம்.”

“பெண்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்சம் இரண்டு முனைகளில் நடவடிக்கை தேவைப்படும்: தலைமைப் பாத்திரங்களில் பெண்களின் பங்கை அதிகரிப்பது மற்றும் பெண்கள் மிகவும் அர்த்தமுள்ள, சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல்” என திருமதி ரமேஷ்ஃபர் மேலும் கூறினார்.

இந்தக் கருப்பொருளைப் பற்றி பேசுகையில், CSW இளைஞர் தலைவர்கள் மற்றும் இளம் வல்லுநர்கள் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சயீதா ரிஸ்வி, தலைமைத்துவம் குறித்த ஆழமான கருத்துக்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என விளக்கினார். “[தலைமைத்துவம்] தற்போது ஆண்மை நிலையில் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணத்தில் மிகவும் வேரூன்றியுள்ளது,” என அவர் கூறினார். “பல வழிகளில், இது ஒரு வலுவான தலைவரையும் அதற்கு எதிர்வினையாக பலவீனமான தலைவரையும் வரையறுக்கிறது. நெகிழ்வான மற்றும் அதிக அனுதாபத்துடன் இருப்பதில் பெண்களின் பலம் ஒரு வலுவான தலைவரின் பண்புகளாக கொண்டாடப்பட வேண்டும்.”

துருக்கியில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் சுசான் கரமன், BIC அறிக்கையைக் குறிப்பிட்டு, “ஒத்துழைப்பு மற்றும் உள்சேர்ப்பை நோக்கிய சாய்வு, கவனிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையை நோக்கிய மனப்பான்மை, நீண்டகால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளுதல்” போன்ற தலைமைக்கு இன்றியமையாத, பெண்மையுடன் தொடர்புடைய சில பண்புகளை எடுத்துக்காட்டினார். பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொற்பொழிவில் பி.ஐ.சி நியூயார்க் அலுவலகத்தின் தற்போதைய பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த விவாத மன்றம் இருந்தது, மேலும் பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ஆணையத்தின் 66- வது அமர்வின் ஒரு பக்க நிகழ்வாகவும் இது நடைபெற்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1589/