உலகளாவிய மாநாடுகள்: எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கை நிறைந்த கண்ணோட்டத்தை இளைஞர்கள் வழங்குகின்றனர்


5 ஏப்ரல் 2022

பஹாய் உலக நிலையம், 05 ஏப்ரல் 2022, (BWNS) – செய்தி சேவையின் சமீபத்திய கதைகள், உலகெங்கிலும் உள்ள பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை நிர்மாணிப்பதற்கும் மேலும் அமைதியான சமூகங்களைப் பேணுவதற்கும் தங்கள் முயற்சிகளை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பதை ஆராய்வதற்காக மாநாட்டு அலைகளைப் பற்றி அறிக்கைகள் வழங்கியுள்ளன. .

பெரிய மற்றும் சிறிய அளவிலான கூட்டங்கள் தொடரும் போது, ​​குறிப்பாக இளைஞர்கள் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் தங்கள் அனுபவத்திலிருந்து புதிய நுண்ணறிவுகளை வழங்கி, எதிர்காலத்திற்கான நம்பிக்கைமிகு கண்ணோட்டத்தை வழங்குகிறார்கள்.

குரோஷியாவில், “உலகின் மேம்பாடு” என்ற தலைப்பில் ஓர் உள்ளூர் மாநாட்டின் முடிவில், இளம் பங்கேற்பாளர்கள் ஒரு மோசமடைந்த பொது இடத்தை அழகுபடுத்த ஒரு சமூக நடவடிக்கை முயற்சியை மேற்கொண்டனர். ஏனெனில், உலகில் அதிக அழகு அமைதியான எண்ணங்களைத் தூண்டுகிறது என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

இதற்கிடையில், பஹ்ரைனில், இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாநாட்டில், பல்வேறு பின்னணியில் இருந்து பங்கேற்பாளர்கள் மனிதகுல ஒருமைப்பாடு கோட்பாட்டின் அடிப்படையில் தங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கை ஆராய உதவியது. “அதிகமான உரையாடல் மற்றும் உள்ளடக்கிய விவாதங்கள் மூலமாகவும், நமது சக குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமாகவும் அமைதியான சமூகங்களைப் பேணிட முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் கூறினார்.

மனிதகுலத்திற்குச் சேவை செய்யும் திறனாற்றலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பஹாய் கல்வியல் திட்டங்களை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் மார்ஷல் தீவுகளில், கல்வி அமைச்சர் கிட்லாங் கபுவா, மாநாடுகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “ஒற்றுமை, மனித நலன் மற்றும் உலக ஒற்றுமை இந்த சமயத்தின் தூண்கள். கல்வி அமைச்சர் என்னும் முறையில்… நான் இந்த தூண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் மற்றும் வலுவான கலாச்சார மற்றும் ஆன்மீக அடித்தளத்துடன் திறமையான மற்றும் இரக்கமுள்ள உலகளாவிய குடிமக்களாக எங்கள் மக்களை வளர்ப்பது குறித்து நான் உறுதியாக இருக்கிறேன்.

உலகம் முழுவதும் நடைபெறும் மேற்கண்ட மாநாடுகளின் படங்களைப் பார்க்க news.bahai.org-ஐப் பார்வையிடவும்.