
14 ஏப்ரல் 2022

செய்தியை இணையத்தில் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைப் பார்க்க, news.bahai.org-ஐப் பார்வையிடவும்.
இந்தூர், இந்தியா, 14 ஏப்ரல் 2022, (BWNS) – கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கான பஹாய் இருக்கை, இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது பெருந்தொற்றின் சமூக மற்றும் பொருளாதார தாக்கம் குறித்த வலையரங்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
அதன் மிக சமீபத்திய கூட்டத்தில், இயற்கை உலகத்துடன் மனிதகுலத்தை அதிக சமநிலைக்கு கொண்டு வருவதற்கு சமூக அமைப்புகளிலும் கூட்டு புரிதலிலும் தேவைப்படும் மாற்றத்தின் தன்மை பற்றி ஆராய்ந்திட அவ்விருக்கை கல்வியாளர்களையும் பொருளாதார வல்லுனர்களையும் ஒன்றுகூட்டியது.
“நீண்ட காலத்திற்கு, காலநிலை மாற்றம் தொடர்பான பல்பரிமாண மற்றும் பலக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு அப்பாலும் தணிப்புக்கான உத்திகளுக்கு அப்பாலும் செல்ல வேண்டும். மாறாக, மனித குலத்தின் ஒருமைப்பாடு, நீதி மற்றும் பூமியின் இயற்கை வளங்களை வழிநடத்துதல் போன்ற காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மையமாக இருக்கும் புதிய அடிப்படை மதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை அவர்கள் மேம்படுத்த வேண்டும்,” என உதவிப் பேராசிரியரும் பஹாய் இருக்கையின் தலைவருமான அராஷ் ஃபாஸ்லி கூறினார்.

உலக வள நிறுவனத்தைச் சேர்ந்த அஷ்வினி ஹிங்னே கூறியது: “இதுவரை, நாம் பார்த்தது என்னவென்றால், [காலநிலை நடவடிக்கை குறித்து] உரையாடல் பெரும்பாலும் மேலிருந்து கீழாகவும் தொழில்நுட்பத்தை மையமாகவும் கொண்டிருந்தது. உரையாடல்கள் பெரும்பாலும் சரியான திசையில் நகர்வதற்கு பொருளாதார அடிப்படையிலான வாதத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்திவந்துள்ளன மற்றும் தனியார் துறை நலன்களை முன்னணியில் வைத்தன; இது மெதுவான அரசியல் செயல்முறைக்கு வழிவகுத்துள்ளது.
“இருப்பினும், நமது வாழ்க்கை, இயற்கை மற்றும் நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியவற்றின் பரஸ்பரமான இணைப்பை மிகவும் அர்த்தமுள்ள வகையில் ஒப்புக்கொண்டு, ஒருங்கிணைக்கும் காலநிலை நடவடிக்கை பற்றிய உரையாடலில் மாற்றம் தேவை.”
காலநிலை நடவடிக்கை குறித்த சொற்பொழிவில் அத்தகைய மாற்றத்தை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளின் அடிப்படையிலான ஆழமான வேரூன்றிய–மனிதர்கள் திருத்த முடியாத சுயநலவாதிகள்–அனுமானத்தை எவ்வாறு தீர்க்க வேண்டும் என பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.
“மனிதர்களைப் பற்றிய இந்த அனுமானங்களைச் செய்வதற்கான உரிமை எங்களுக்கு இல்லை. … மக்கள் சுயநலம் இல்லாத ஒரு வித்தியாசமான மதிப்புகளின் முறைமைக்கு திறன் பெற்றவர்கள் என நாம் நம்ப வேண்டும்,” என்று அசோகா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூத்த உறுப்பினர் சரச்சந்திர லேலே கூறினார்.
இத்தகைய மதிப்புகளின் முறைமை காலநிலை நடவடிக்கையில் உலகளாவிய பங்கேற்பை ஊக்குவிப்பதுடன், பொது நலனுக்காக கூட்டு முடிவுகள் எடுப்பதற்காக வேறுபாடுகளைக் கடப்பதற்கு மனிதர்களிலும் ஸ்தாபனங்களிலும் ஆற்றலைக் காணும் என்பதை விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நிகழ்வைப் பற்றி பிரதிபலிக்கும் போது, டாக்டர். ஃபாஸ்லி, மனிதகுலம் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களிடையே கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்தும் பஹாய் போதனைகளிலிருந்து நுண்ணறிவுகளைப் பற்றி உரைக்கின்றார்.
“அரசின் முகமைகள் மூலமாகவோ அல்லது சமூகங்களில் தன்னார்வ நடவடிக்கை மூலமாகவோ அணிதிரட்டப்பட்டாலும், உள்ளூர் அமைப்புகள், சமூகங்கள், அரசு, கல்வித்துறை மற்றும் தனியார் துறையில் உள்ளவர்கள் தங்கள் சவால்களில் அடையக்கூடிய மைல்கற்கள் மற்றும் சூழல் சார்ந்த தீர்வுகளை அடையாளம் காண ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என அவர் கூறினார்.
இந்தோர் பஹாய் இருக்கை நடத்தும் வலையரங்கம் இங்கே பார்க்கபுபடலாம்.