“நாம் அனைவரும் ஒரே குடும்பம்”: மதத் தலைவர்கள் அமைதிக்கான ஓர் அடித்தலமாக தார்மீகக் கல்வியை முன்னிலைப்படுத்துகின்றனர்


23 மே 2022

ஹைஃபா, இஸ்ரேல் – இஸ்ரேலில் உள்ள மதத் தலைவர்கள் மன்றத்தின் 12-வது ஆண்டு மாநாடு சமீபத்தில் பஹாய் உலக மையத்தில் நடத்தப்பட்டது, இதில் பல்வேறு சமய சமூகங்களின் தலைவர்கள், உள்துறை அமைச்சர், ஹைஃபா நகர தலைவர் மற்ற அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 115 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தார்மீகக் கொள்கைகளைப் பேணுதல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடும் திறனை வளர்ப்பதில் கல்வியின் முக்கியப் பங்கை இக்கூட்டத்தில் நடந்த விவாதங்கள் எடுத்துக்காட்டின.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஒரு வீடியோ செய்தியின் வழி கூட்டத்தில் உரையாற்றினார், மதங்களுக்கிடையில் பகிரப்பட்ட விழுமியங்களை முன்னிலைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “ஒற்றுமை என்பது சீர்மை அல்ல, அது நமக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மங்கச் செய்வது என்பதல்ல, மாறாக, பாரம்பரிய மற்றும் கலாச்சார வேறுபாடுகள் தான் நம்மை மிகவும் சிறப்புறச் செய்கின்றன.”

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வீடியோ செய்தியில் கூட்டத்தில் உரையாற்றினார், மதங்களுக்கிடையில் பகிரப்பட்ட விழுமியங்களை முன்னிலைப்படுத்தினார் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஹைஃபாவில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அரியன் சபேட் தனது தொடக்கக் கருத்துக்களில் கூறியது: “மனிதகுலத்தின் உன்னதத்தை உறுதிப்படுத்தவும், அதன் தன்மையை செம்மைப்படுத்தவும், நிலையான மற்றும் செழிப்பான நாகரிகத்தை உருவாக்குவதற்கு அர்த்தத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதில் மதத்தின் தனித்துவமான சக்தியை மிகைப்படுத்தவியலாது.”

அவர் மேலும் கூறியதாவது: “இந்த மாநாடு நம் அனைவருக்கும், சமயங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் தலைவர்கள் எனும் முறையில் மனிதகுலம் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்களாக ஒன்றிணைவதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அழைப்பாக அமையட்டும்.”

மதத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் அமைதி, நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பற்றி விவாதிக்க ஒன்றுகூடினர்.

உள்துறை அமைச்சரான, அய்லெட் ஷாகெட் கூட்டத்திற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “இந்த மாநாடு மரியாதை மற்றும் பரஸ்பரம், குறிப்பாக வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.”

ஹைஃபா மேயர், ஐனாட் கலிஷ்-ரோடெம், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த ஹைஃபா நகரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து பேசினார். “இங்கே ஹைஃபாவில், நாங்கள் ஒன்றாக வாழ்வதை மட்டும் நம்பியிருக்கவில்லை, மாறாக நாங்கள் அனைவரும் ஒரே சமூகமாக, ஒன்றாக வாழ்கிறோம்.”

மற்றொரு பங்கேற்பாளரான முஸ்லீம் மதகுருமார்கள் சங்கத்தின் தலைவர் ஷேக் நாதர் ஹெய்ப் கூறினார்: “…அன்புடனும் எதிர்காலத்தை நோக்கிய புதிய பார்வையுடனும்… எப்படி மீண்டும் ஒன்றாக இணைவது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…”

மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல், ஒற்றுமையை மேம்படுத்துவதில் கல்வியின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்து ஆராய்ந்தன.

பள்ளிகளிலும் பிற சமூகத் தளங்களிலும் தங்களிடையே கூடுதல் ஒத்துழைப்பு அவர்களின் ஒற்றுமையையும் அமைதிக்கான அர்ப்பணிப்பையும் குறிப்பாக இளைஞர்களுக்கு வெளிப்படுத்தும் என்று மதத் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவியது.

இஸ்ரேலிய தலைமை ரபினேட் கவுன்சிலின் உறுப்பினர் ரப்பி சிம்ஹா வெயிஸ், இந்த உணர்வை எதிரொலித்தார்: பஹாய் உலக மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பன்முகத்தன்மை ஒரு நம்பிக்கையான எதிர்காலத்திற்கான பார்வையை அளிக்கிறது என்று கூறினார். “ஒன்றாக வாழ்வது சாத்தியம் என்பதை [அவர்கள்] எங்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.”

அவர் மேலும் கூறியதாவது: “நாம் அனைவரும் ஒரே குடும்பம்… இதைத்தான் இன்றைய இளைஞர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1596/

“அமைதி மற்றும் நம்பிக்கையைப் பிரகாசித்தல்”: பனாமாவில் உள்ள கோவில் 50-வது வருடத்தைக் குறிக்கின்றது


17 மே 2022

பனாமா சிட்டி, 17 மே 2022, (BWNS) – செர்ரோ சொன்சொனேட்-டின் (ஒரு மண்டலத்தின் பூர்வீக பேச்சுவழக்கில் “இனிய கீதங்களின் மலை என பொருள்படும்) உச்சியில் பனாமா நகர வழிபாட்டு இல்லம் வீற்றிருக்கின்றது. இது அனைத்து பின்னணிகளையும் சேர்ந்தவர்கள் பிரார்த்தனைக்காகவும் அவர்களின் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகம் பெறவும் செல்கின்ற ஓர் இடமாகும்.

பனாமா பஹாய்கள் சமீபத்தில் இந்தக் கோவில் முதன் முதலில் அர்ப்பணிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு விழாவை நடத்தினர். கோலிலைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, அரசாங்க அதிகாரிகள், மாவட்ட மேயர், பழங்குடி மற்றும் பலதரப்பட்ட சமய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் பஹாய் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றுசேர்த்தனர்.

பனாமா நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் அர்ப்பணிக்கப்பட்ட 50-வது ஆண்டு விழாவின் காட்சிகள் இங்கே படத்தில் உள்ளன.

“உயிர்களை குணப்படுத்துவதிலும், அண்டையரிடையே அன்பைப் பேணுவதிலும் இந்த வழிபாட்டு இல்லம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பஹாய்கள் நமது சமூகத்தில் அதிக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளைத் தொடர நான் ஊக்குவிக்கிறேன்,” என மாவட்ட மேயர் ஹெக்டர் கராஸ்குல்லா கூறினார்.

பனாமாவின் பஹாய் தேசிய ஆன்மிகச் சபையின் செயலாளரான யோலண்டா ரோட்ரிகஸிடம், நம்பகம் மற்றும் நட்பைப் பிரதிநிதிக்கும் அடையாளத் திறவுகோலை திரு. கராஸ்குவிலா வழங்கினார்.

ரபி குஸ்டாவோ க்ராசெல்னிக் கூட்டத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்: “கோயில் எப்போதும் உரையாடலுக்கான இடமாக இருக்கட்டும். மேலும், அதன் ஆன்மீகம் தொடர்ந்து பனாமா முழுவதும் அமைதியையும் நம்பிக்கையையும் பரப்பட்டும்.”

வருங்காலத்தை நோக்கி, திருமதி. ரோட்ரிகுவெஸ், சமுதாயத்தின் பலதரப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்த இந்த விழா, கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவிலின் ஒருங்கிணைக்கும் சக்தியின் பிரதிபலிப்பாகவும், சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ளோரின் ஆன்மீக வாழ்வில் அதன் வளர்ந்துவரும் தாக்கத்தின் அறிகுறியாகவும் இருந்தது என விளக்கினார்.

அவர் கூறுகிறார்: “பஹாய் திருவாக்குகளில் வழிபாட்டு இல்லமானது மாஷ்ரிகுல்-அஸ்கார் அல்லது ‘கடவுள் துதியின் உதயஸ்தலம்’ என குறிப்பிடப்படுகிறது. மக்கள் பனாமா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது, அவர்களின் சக குடிமக்களுக்கு சேவை செய்வதற்கான தெளிவு, நம்பிக்கை மற்றும் உந்துதலை அங்கு பெறுகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1595/

BIC: ஆப்பிரிக்க-ஐரோப்பிய கூட்டாண்மையில் ஒற்றுமை கோட்பாட்டை ஊக்குவித்தல்


11 மே 2022

பிரஸ்ஸல்ஸ் – கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக அவற்றின் பொருளாதார உறவுகளில், நாடுகள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருப்பதற்கான உலகளாவிய அங்கீகார உணர்வை பெருந்தொற்று தூண்டியுள்ளது. அதே நேரத்தில், பஹாய் அனைத்துலக சமூகம் (BIC), அடிப்படை மட்டத்தில் மனிதகுலம் ஒன்றே என்னும் ஓர் ஆழமான யதார்த்தத்தின் புரிதலைப் பேணிட முற்பட்டது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) நிகழ்வில் BIC-யின் அடிஸ் அபாபா மற்றும் பிரஸ்ஸல்ஸ் அலுவலகங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்ட “மனுக்குலத்தின் ஒற்றுமை—ஆப்பிரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மைக்கான தாக்கங்கள்” என்னும் தலைப்பில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் (EU) உச்ச மாநாடுக்கான BIC-யின் சமீபத்திய அறிக்கையின் கருப்பொருள் இதுவாகும்.

அடிஸ் அபாபா அலுவலகத்தின் சாலமன் பெலே குறிப்பிடுவதாவது: “அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் BIC-யின் பல உரையாடல்களிலிருந்து வெளிவரும் உலகளாவிய நிர்வாகம், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சமீபத்திய ஆண்டுகளில் BIC-ஆல் ஆராயப்பட்ட முக்கிய நுண்ணறிவுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கிட உச்சமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கியது. AU தலைவர்களுக்கும் நாங்கள் அதே கண்ணோட்டத்தை வழங்குவோம்.

இரு கண்டங்களும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்னிப்பிணைந்திருப்பதால் AU-EU உறவின் முக்கியத்துவத்தை டாக்டர் பெலே விளக்குகிறார். “தற்போதைய உறவுகள் இரு கண்டங்களிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதன் அடிப்படையில் கூட்டாக மாற வேண்டும். இதற்கு பரஸ்பர ஆதரவும் நம்பகமும் தேவை,” என்கிறார்.

ஒரு கண்டத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு ஆகியன மற்றொரு கண்டத்தின் நலனுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக்கொண்டாலும், “உலகளாவிய ஒழுங்கமைப்பின் தற்போதைய கட்டமைப்பு அதன் முழு வெளிப்பாட்டிற்கு இடங்கொடுக்கவில்லை” என BIC தனது அறிக்கையில் அங்கீகரிக்கின்றது.

தொடர்ந்து அந்த அறிக்கை: “இன்றைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார அமைப்புகளில் பெரும்பாலானவை, உலகின் ஒரு பகுதி மற்றவற்றின் மீது ஆதிக்கம் கொண்டிருப்பது அடிப்படையான மெய்நிலை என கருதப்பட்ட நேரத்தில் உருவாக்கப்பட்டவை. சமீபத்திய தசாப்தங்களில் இந்த அனுமானத்தின் சில அப்பட்டமான வெளிப்பாடுகளை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமத்துவமின்மையின் வடிவங்கள் மாற்றத்திற்குப் பிடிவாதமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.”

பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, மனிதகுல ஒருமைப்பாட்டின் கொள்கையின்படி சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் உறவுகளை மறுவடிவமைப்பது ஒரு சவாலான பணியாகும், இதற்குப் பல தலைமுறைகளாக முயற்சி தேவைப்படும். “இந்த இலக்கை நோக்கிச் செல்வதற்கான சில நடைமுறை ஆலோசனைகளை அறிக்கை வழங்குகிறது. முதலாவதாக, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஐரோப்பிய கொள்கைகளின் தாக்கத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டும்,” என அவர் கூறுகிறார்.

“மற்றொரு ஆலோசனையானது, சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய சமூக நடவடிக்கையாளர்களுக்கு, பரிவர்த்தனை பேரம் பேசுவதைத் தாண்டி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட மற்றும் முன்னரே முடிவுசெய்யப்பட்ட தீர்வுகளுக்கு வாதிடாத கலந்தாலோசனைச் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு, சில கட்டமைக்கப்பட்ட தளங்களை உருவாக்குவது” என்று திருமதி. பயானி தொடர்கிறார். ”

பிரஸ்ஸல்ஸ் மற்றும் அடிஸ் அபாபா அலுவலகங்களின் அறிக்கையானது, உலகளாவிய ஆளுகை பற்றிய உரையாடலுக்கு பங்களிப்பதற்கான BIC-யின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் “ஒரு பொருத்தமான ஆளுமை: மனிதநேயம் மற்றும் ஒரு உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதை” என்னும் தலைப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட கருத்துகளை உருவாக்குகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1594/

உலகளாவிய மாநாடுகள்: அடித்தட்டு ஒன்றுகூடல்கள் சமூகங்களுக்கு ஒரு பொது நோக்கத்தை வழங்குகின்றன


பஹாய் உலக மையம், 6 மே 2022, (BWNS) – அமைதியான உலகம் பற்றிய பஹாய் நம்பிக்கையின் அடிப்படையில் துடிப்பான சமூகங்களை அவர்கள் எவ்வாறு நிர்மாணிக்கலாம் என்பதைப் பற்றி ஆலோசிக்க, நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அறிமுகமானவர்கள், வீடுகள் மற்றும் கொல்லைப்புறங்கள், தாழ்வாரங்கள் மற்றும் கூரைகள் மற்றும் பல வேறுபட்ட அமைப்புகளில்-பெரிய மற்றும் சிறிய— இடங்களில் ஒன்றுகூடுகின்றனர்.

இந்தக் கூட்டங்கள் ஒரு வரவேற்கும் மற்றும் ஆன்மீகமான சூழலை வழங்கி, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு ஆழமான நோக்கத்துடன் ஊக்கமளிக்கும் நட்பின் வலுவான பிணைப்பை உருவாக்க உதவுகின்றன.

பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்துடன் கலந்துரையாடல்களை வளப்படுத்த, கூட்டங்களில் இளைஞர்கள் குறிப்பாக முக்கிய பங்கு வகித்துள்ளனர். மக்கள் தன்னலமின்றி சக குடிமக்களுக்கு சேவை செய்யும் போது சமூக மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை அவர்களின் அனுபவம் வெளிப்படுத்துகிறது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் எண்ணற்ற கூட்டங்களின் மாதிரியைப் பெற news.bahai.org ஐப் பார்வையிடவும்.

ஓர் உள்ளூர் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் கொலம்பியா,நோர்ட்டே டெல் கௌகா பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு முன் நிற்கின்றனர்

மேலும் இது போன்ற ஒன்றுகூடல்கள் பற்றிய படங்களைப் பார்க்கவும் விவரங்களைப் பெறவும் இங்கு செல்லவும்: https://news.bahai.org/story/1593/