BIC: ஆப்பிரிக்க-ஐரோப்பிய கூட்டாண்மையில் ஒற்றுமை கோட்பாட்டை ஊக்குவித்தல்


11 மே 2022

பிரஸ்ஸல்ஸ் – கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக அவற்றின் பொருளாதார உறவுகளில், நாடுகள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருப்பதற்கான உலகளாவிய அங்கீகார உணர்வை பெருந்தொற்று தூண்டியுள்ளது. அதே நேரத்தில், பஹாய் அனைத்துலக சமூகம் (BIC), அடிப்படை மட்டத்தில் மனிதகுலம் ஒன்றே என்னும் ஓர் ஆழமான யதார்த்தத்தின் புரிதலைப் பேணிட முற்பட்டது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) நிகழ்வில் BIC-யின் அடிஸ் அபாபா மற்றும் பிரஸ்ஸல்ஸ் அலுவலகங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்ட “மனுக்குலத்தின் ஒற்றுமை—ஆப்பிரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மைக்கான தாக்கங்கள்” என்னும் தலைப்பில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் (EU) உச்ச மாநாடுக்கான BIC-யின் சமீபத்திய அறிக்கையின் கருப்பொருள் இதுவாகும்.

அடிஸ் அபாபா அலுவலகத்தின் சாலமன் பெலே குறிப்பிடுவதாவது: “அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் BIC-யின் பல உரையாடல்களிலிருந்து வெளிவரும் உலகளாவிய நிர்வாகம், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சமீபத்திய ஆண்டுகளில் BIC-ஆல் ஆராயப்பட்ட முக்கிய நுண்ணறிவுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கிட உச்சமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கியது. AU தலைவர்களுக்கும் நாங்கள் அதே கண்ணோட்டத்தை வழங்குவோம்.

இரு கண்டங்களும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்னிப்பிணைந்திருப்பதால் AU-EU உறவின் முக்கியத்துவத்தை டாக்டர் பெலே விளக்குகிறார். “தற்போதைய உறவுகள் இரு கண்டங்களிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதன் அடிப்படையில் கூட்டாக மாற வேண்டும். இதற்கு பரஸ்பர ஆதரவும் நம்பகமும் தேவை,” என்கிறார்.

ஒரு கண்டத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு ஆகியன மற்றொரு கண்டத்தின் நலனுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக்கொண்டாலும், “உலகளாவிய ஒழுங்கமைப்பின் தற்போதைய கட்டமைப்பு அதன் முழு வெளிப்பாட்டிற்கு இடங்கொடுக்கவில்லை” என BIC தனது அறிக்கையில் அங்கீகரிக்கின்றது.

தொடர்ந்து அந்த அறிக்கை: “இன்றைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார அமைப்புகளில் பெரும்பாலானவை, உலகின் ஒரு பகுதி மற்றவற்றின் மீது ஆதிக்கம் கொண்டிருப்பது அடிப்படையான மெய்நிலை என கருதப்பட்ட நேரத்தில் உருவாக்கப்பட்டவை. சமீபத்திய தசாப்தங்களில் இந்த அனுமானத்தின் சில அப்பட்டமான வெளிப்பாடுகளை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமத்துவமின்மையின் வடிவங்கள் மாற்றத்திற்குப் பிடிவாதமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.”

பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, மனிதகுல ஒருமைப்பாட்டின் கொள்கையின்படி சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் உறவுகளை மறுவடிவமைப்பது ஒரு சவாலான பணியாகும், இதற்குப் பல தலைமுறைகளாக முயற்சி தேவைப்படும். “இந்த இலக்கை நோக்கிச் செல்வதற்கான சில நடைமுறை ஆலோசனைகளை அறிக்கை வழங்குகிறது. முதலாவதாக, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஐரோப்பிய கொள்கைகளின் தாக்கத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டும்,” என அவர் கூறுகிறார்.

“மற்றொரு ஆலோசனையானது, சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய சமூக நடவடிக்கையாளர்களுக்கு, பரிவர்த்தனை பேரம் பேசுவதைத் தாண்டி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட மற்றும் முன்னரே முடிவுசெய்யப்பட்ட தீர்வுகளுக்கு வாதிடாத கலந்தாலோசனைச் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு, சில கட்டமைக்கப்பட்ட தளங்களை உருவாக்குவது” என்று திருமதி. பயானி தொடர்கிறார். ”

பிரஸ்ஸல்ஸ் மற்றும் அடிஸ் அபாபா அலுவலகங்களின் அறிக்கையானது, உலகளாவிய ஆளுகை பற்றிய உரையாடலுக்கு பங்களிப்பதற்கான BIC-யின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் “ஒரு பொருத்தமான ஆளுமை: மனிதநேயம் மற்றும் ஒரு உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதை” என்னும் தலைப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட கருத்துகளை உருவாக்குகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1594/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: