“அமைதி மற்றும் நம்பிக்கையைப் பிரகாசித்தல்”: பனாமாவில் உள்ள கோவில் 50-வது வருடத்தைக் குறிக்கின்றது


17 மே 2022

பனாமா சிட்டி, 17 மே 2022, (BWNS) – செர்ரோ சொன்சொனேட்-டின் (ஒரு மண்டலத்தின் பூர்வீக பேச்சுவழக்கில் “இனிய கீதங்களின் மலை என பொருள்படும்) உச்சியில் பனாமா நகர வழிபாட்டு இல்லம் வீற்றிருக்கின்றது. இது அனைத்து பின்னணிகளையும் சேர்ந்தவர்கள் பிரார்த்தனைக்காகவும் அவர்களின் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகம் பெறவும் செல்கின்ற ஓர் இடமாகும்.

பனாமா பஹாய்கள் சமீபத்தில் இந்தக் கோவில் முதன் முதலில் அர்ப்பணிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு விழாவை நடத்தினர். கோலிலைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, அரசாங்க அதிகாரிகள், மாவட்ட மேயர், பழங்குடி மற்றும் பலதரப்பட்ட சமய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் பஹாய் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றுசேர்த்தனர்.

பனாமா நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் அர்ப்பணிக்கப்பட்ட 50-வது ஆண்டு விழாவின் காட்சிகள் இங்கே படத்தில் உள்ளன.

“உயிர்களை குணப்படுத்துவதிலும், அண்டையரிடையே அன்பைப் பேணுவதிலும் இந்த வழிபாட்டு இல்லம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பஹாய்கள் நமது சமூகத்தில் அதிக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளைத் தொடர நான் ஊக்குவிக்கிறேன்,” என மாவட்ட மேயர் ஹெக்டர் கராஸ்குல்லா கூறினார்.

பனாமாவின் பஹாய் தேசிய ஆன்மிகச் சபையின் செயலாளரான யோலண்டா ரோட்ரிகஸிடம், நம்பகம் மற்றும் நட்பைப் பிரதிநிதிக்கும் அடையாளத் திறவுகோலை திரு. கராஸ்குவிலா வழங்கினார்.

ரபி குஸ்டாவோ க்ராசெல்னிக் கூட்டத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்: “கோயில் எப்போதும் உரையாடலுக்கான இடமாக இருக்கட்டும். மேலும், அதன் ஆன்மீகம் தொடர்ந்து பனாமா முழுவதும் அமைதியையும் நம்பிக்கையையும் பரப்பட்டும்.”

வருங்காலத்தை நோக்கி, திருமதி. ரோட்ரிகுவெஸ், சமுதாயத்தின் பலதரப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்த இந்த விழா, கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவிலின் ஒருங்கிணைக்கும் சக்தியின் பிரதிபலிப்பாகவும், சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ளோரின் ஆன்மீக வாழ்வில் அதன் வளர்ந்துவரும் தாக்கத்தின் அறிகுறியாகவும் இருந்தது என விளக்கினார்.

அவர் கூறுகிறார்: “பஹாய் திருவாக்குகளில் வழிபாட்டு இல்லமானது மாஷ்ரிகுல்-அஸ்கார் அல்லது ‘கடவுள் துதியின் உதயஸ்தலம்’ என குறிப்பிடப்படுகிறது. மக்கள் பனாமா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது, அவர்களின் சக குடிமக்களுக்கு சேவை செய்வதற்கான தெளிவு, நம்பிக்கை மற்றும் உந்துதலை அங்கு பெறுகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1595/