பஹாய் சமயம் பற்றிய வட்டிக்கன் 2-இன் சுற்றறிக்கை-8


பிற சமயத்தைச் சார்ந்தவர்களைத் தெரிந்துகொள்ளுதல் – எண். 8

வட்டிக்கனிலிருந்து  வெளிவந்த பிற சமயங்களைப் பற்றிய சுற்றறிக்கை – 2002

பஹாய் சமயம் என்றால் என்ன?

அறிமுகம்

கிருஸ்துவர் அல்லாதாரோடுடனான சபையின் உறவைப் பற்றி வட்டிக்கன் ii-ன் பிரகடனத்தில், பிற சமய விசுவாசிகளை ஒரே மாபெரும் பணியின் பங்காளிகள் என வாஞ்சையுடனும் திறந்த மனதுடனும் சபை வரவேற்பதைக் காணலாம். இச்சமயங்கள், பல நன்மைகளும் பவித்திரமும் நிறைந்து, உலக முழுவதுமுள்ள பல கோடி மக்களுக்கு ரட்சிப்பை அளிக்கவல்லவைகளாக விளங்குகின்றன. நம்முடையதினின்று வேறுபடும் சமயங்களை ஏற்றுள்ளவர்களை மதித்து, ஏற்று மற்றும் நண்பர்களாக. அவர்களைக் காண இந்த வட்டிக்கன் ii-ன் வெளியீடுகள் ஊக்குவிப்பதைக் காணலாம். இதே உணர்வில் பஹாய் சமயமும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

பஹாய்கள் யார்

பஹாய் சமய ஸ்தாபகர்கள் இஸ்லாமிய பூர்வீகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், கடந்த கால சமயங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் ஒரு புதிய சமயத்தை ஸ்தாபிப்பவர்களென பஹாய்களால் கருதப்படுகின்றனர். பல்வேறு சமயப் பிண்ணனிகளைச் சார்ந்தவர்களாக இன்றைய பஹாய்கள் உள்ளனர். அவர்கள், கிருஸ்துவர்களாக, யூதர்களாக, முஸ்லிம்களாக, ஹிந்துக்களாக, சீக்கியர்களாக, பௌத்தர்களாக, பார்சிகளாக இருந்துள்ளதோடு, எச்சமயத்தையும் சாராதவர்களாகவும் இருந்துள்ளனர். கடந்தகால அவதாரபுருஷர்கள் அனைவருக்கும் ஒருங்கே வந்தனம் செலுத்தினாலும், சமயம் கட்டம் கட்டமாக வளர்கின்றது எனவும் பஹாவுல்லா இறைவனின் இக்கலாத்திற்கான இறைத்தூதர்  எனவும் நம்புகின்றனர். பஹாய்கள் பல்வேறு சமய, இன, தேசிய, பொருளாதார, சமூகச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சார்ந்தவர்களாக இருப்பினும், பஹாய் போதனைகள் அவர்களுக்கு இவற்றினும் உயர்ந்த, மனிதகுலத்திற்கான விசுவாசத்தை வழங்குகின்றது.

பஹாய்களைப் பொறுத்தமட்டில் தினசரி வாழ்க்கைக்கும் சமயத்திற்குமிடையிலும் வேறுபாடு கிடையாது. பிரார்த்தனைகளிலேயே மிகவும் உயர்ந்த பிரார்த்தனை ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையே என பஹாய்கள் கூறுகின்றனர். அதாவது, சமயம் தினசரி வாழ்க்கையில் வெளிப்படும் இறைவனை நோக்கிய ஒரு மனப்பான்மையே ஆகும்.

உலகம் முழுவதும் இன்று முந்நூற்று நாற்பது நாடுகள், பிரதேசங்கள், தீவுகள் ஆகியவற்றுக்கும் மேல் பரந்து 50 அல்லது 60 இலட்சம் பஹாய்களுக்கு மேல் உள்ளனர். இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட (1989ல்) சுமார் 6000 பஹாய்கள், 180 உள்ளூர் ஆன்மீகச் சபைகளுடன், 400 உள்ளூர் சமூகங்களில் உள்ளனர். ஓர் உள்ளூர் ஆன்மீகச் சபையை அமைக்க குறைந்தது 9 பேர் தேவைப்படுகின்றனர். பஹாய்களின் புனித வாசகங்கள் அவர்கள் சமய ஸ்தாபர்களின் எழுத்து வடிவங்களாகவும் சுமார் 600 மொழிகளுக்கும் மேல் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டும் உள்ளன. பஹாய்கள் கண்டுவரும் துரித வளர்ச்சியானது அவர்களை இறைவெளிப்பாட்டுச் சம்பிரதாயத்தில் ஓர் ஆக சமீபத்திய உலக சமயத்தினர், எனும் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது.

பஹாய் சமயத்தின் பூர்வீகம்

பஹாய் சமயத்தின் முன்னறிவிப்பாளராக பாப்(வாசல்) என்னும் நாமத்துடன் இளம் பாரசீக வணிகர் ஒருவர், 1844-இல் தம்மை ஓர் இறைத்தூதர் என அறிவித்ததுடன் தாம் தம்மைவிட, உயர்ந்த வேறு ஓர் இறைத்தூதரின், சமயம் மற்றும் நாகரீகத்தில் ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிப்பவராகவும் உள்ள ஒருவரின், முன்னோடி எனவும் அறிவித்தார் முன்வந்த எல்லா இறைத்தூதர்களைப் போலவே பாப் அவர்களும் பல எதிர்ப்புகளையும் பழிச்சொற்களையும் சந்தித்தார். சுமார் 6 வருடகால துன்புறுத்தலுக்குப் பிறகு தம்முடைய 30-வது வயதில், தப்ரீஸ் நகரில் (750 துப்பாக்கிகளின் இரவைகளுக்கு இறையாகி) தியாக மரணத்தைத் தழுவினார்.

அதன் ஸ்தாபகராக ஒரு பாரசீகப் பிரபு வம்சத்தைச் சார்ந்த பஹாவுல்லா (கடவுளின் ஜோதி) 1863ல், பாப் அவர்களும் கடந்தகால  இறைத்தூதர்கள் அனைவரும் முன்னறிவித்த அந்த இறைத்தூதர் தாமே எனப் பிரகடனப்படுத்தினார். தமக்கு முன் வந்தவர் போலவே, அவரும் கடுந்துன்புறுத்தலுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகினார். தாம் சிறைப்பட்டிருந்த, நாடுகடத்தல் அனுபவித்த சுமார் 40 வருடகாலத்தில் தமது வெளிப்பாட்டின் போதனைகள், சில அக்காலத்து அரச, சமயத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டவை மேலும் தமது நம்பிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட போதனை, பயிற்சி ஆகியவை சம்பந்தப்பட்டவை அனைத்தையும் ஏட்டில் பதித்தார். 1865-இல் அடைந்த நான்காவதும் இறுதியானதுமான சிறைவாசம் பாலஸ்தீனத்தைச் சார்ந்த சிறை நகரான அக்காநகர சிறைவாசத்தின் இறுதியில் தமது எழுபத்துநான்காவது வயதில் இறையடி சேர்ந்தார்.

இதன் அதிகாரபூர்வ விளக்கவுரையாளராகவும் உதாரண புருஷராகவும் பஹாவுல்லாவின் மூத்த குமாரர், பஹாவுல்லாவினால் அவரது திருவொப்பந்தத்தின் மையம் என நியமிக்கப்பட்டார் மேலும் சகலரும் வழிகாட்டுதலுக்கும் பயிற்றுவிப்பிற்கும் திரும்பவேண்டியவராக அப்துல்-பஹா (கடவுள்ட்ட ஜோதியின் சேவகர்) இருந்தார். தமது தந்தையாருக்கு நெருங்கிய சகாவாகவும் எந்நேரத்திலும் அருகிலிருந்து உதவுபவராகவும், அவரது துன்பங்களில் பங்கெடுப்பவராகவும் இருந்தார். துருக்கி அரசாங்கத்தின் பழைய அரச வம்சம் பதவியிலிருந்து இறக்கப்பட்டுத் துருக்கி சாம்ராஜ்யம் முழுவதும் இருந்த சமய மற்றும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரையில், 1908-வரையில் கைதியாகவே வாழ்ந்தார். அதன் பிறகு அவர் எகிப்து, ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவலாகப் பிரயாணம் செய்து, தமது சமயத்தின் கோட்பாடுகளை விளக்கியும் அவற்றிற்கு உதாரணமாகவும் இருந்து உலகம் முழுவதும் இருந்த பஹாய் நம்பிக்கையாளர்கள் அனைவரையும் ஊக்குவித்தும் வழிகாட்டியும் வந்தார். அவர் 1921-இல் ஹைஃபா நகரில் எல்லா சமயங்களைச் சார்ந்தவர்களும் துக்கித்த நிலையில் இறைவனடி சேர்ந்தார். எல்லாருக்கும் அவர் வாழ்வு ஒரு பிரகாசமான வழிகாட்டியாக இருந்தது. இப்போதும் இருந்து வருகின்றது. தமது உயில் மற்றும் சாசனத்தில் தமது மூத்த பேரரான ஷோகி எஃபெண்டியைச் சமயத்தின் பாதுகாவலராகவும் அதன் போதனைகளின் வியாக்கியானராகவும் நியமித்தார். அவரது வழிகாட்டும் கரங்களின் கீழ் பஹாய் சமயம் பல்கிப் பரந்த வளர்ச்சி கண்டது. அவர் 1957-இல் லண்டன் மாநகரில் காலமானார். 1963-இல் இருந்து  உலக நீதி மன்றத்தின்’ வழிகாட்டுதலின் கீழ் பஹாய் சமயம் இருந்து வருகின்றது.

பஹாய் சமயம்… பிரகடனப்படுத்துவது:-

இறைவனின் ஒருமைத்தன்மை, சமயங்கள், மானிடம் ஆகியவற்றின் ஒற்றுமை, ஆண், பெண் சமத்துவம், சகலவிதமான முன்தீர்மானங்களையும் தப்பெண்ணங்களையும் நீக்குதல், வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாத்தல். அது தன்னிச்சையாக உண்மையைத் தேடுவதை ஆதரிக்கின்றது. அறிவியல், சமயம் இரண்டிற்குமிடையே இணக்கம், ஓர் அனைத்துலக மொழியும் உலக அரசாங்கமும்.

பஹாய் வழிபாட்டு இல்லங்கள்

பஹாய் கோவில்கள் எல்லா தேசங்கள், இனங்கள் வகுப்புகள் மற்றும் சமயங்கள் சார்ந்த அனைவருக்கும் திறந்திருக்கும். அனைவருக்கும் அது பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றைச் செய்வதற்கான தலமாக பஹாய்கள் வழங்கும் ஓர் அன்பளிப்பாகும், இறைவனின் ஒருமைத்தன்மை, இறைத்தூதர்கள், மானிடம் இரண்டிற்கிடையிலான ஒற்றுமை பற்றிய அவர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு. ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு தலையாய பஹாய் கோவில் உள்ளது. உள்ளூர்களில் இல்லங்கள் அல்லது வாடகை மண்டபங்களை பஹாய்கள் தங்கள் கூட்டங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பஹாய் சமூகத்திற்கு  சமயகுருக்களோ சடங்குகளோ கிடையாது. பஹாய்கள் தங்கள் போதனைகளையே செயலாற்றத்திற்கான அழைப்பாகக் கொள்கின்றனர். பிரச்சனைகளால் சூழ்ந்துள்ள உலகத்திற்கு அவை நம்பிக்கையூட்டுவனவாகவும், மனவுறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை அளிப்பனவாகவும் காண்கின்றனர்.

பஹாய் நிர்வாக முறை

பஹாய் நிர்வாக முறைக்கு கலந்தாலோசனையே அடித்தலமாகும்.

 சமயகுருக்களோ சடங்குகளோ கிடையாது.

புனித வசனங்கள் பாதுகாப்பாகவும் அதிகாரபூர்வமாகவும் எழுத்துவடிவத்தில் உள்ளன. நிர்வாக ஸ்தாபனங்கள் ஆன்மீக சபைகள் என அழைக்கப்படுகின்றன; அவை உள்ளூர், தேசிய, அனைத்துலக ரீதியிலானவையாகும். எல்லா ஆன்மீகச் சபைகளும் பிரார்த்தனை உணர்வுடனேயே ஒன்றுகூடுகின்றன.

இந்தச் சபைகள் பஹாய்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவற்றின் உறுப்பினர்கள் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு அவர்மீதான நம்பிக்கையை அவர்களின் கடமையாகக் கொள்கின்றனர்.

ஓட்டு வேட்டை கிடையாது, வேட்பாளர் கிடையாது. தேர்தல் வாக்குறுதிகள் கிடையாது, கட்சிகளும் கிடையாது. பிரார்த்தனைகள் கூறவும், உள்ளூர் ஆன்மீகச் சபையுடன் பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்கவும் ஒன்றாக விருந்துண்ணவும் பத்தொன்பதாம் நாள் பண்டிகை ஒரு சமூக (,நிர்வாக மற்றும் கலை) நிகழ்ச்சியாக விளங்குகின்றது.

தேர்ந்தெடுக்கப்படுவதும், பஹாவுல்லாவினால் பஹாய் சமயத்திற்கான சட்டம் இயற்றவும் ஆட்சி மன்றமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதுமான ‘உலக நீதிமன்றம்’ பஹாய் உலக மையமாக இஸ்ரேலின் ஹைஃபா நகரிலிருந்து செயல்படுகின்றது.

பஹாய் நிதிகளுக்கு பஹாய்கள் மட்டுமே நிதியளித்திட முடியும்.

கலந்தாலோசனைக்கான கேள்விகள்:

1.           பஹாய்கள் சமூகக் கோட்பாடுகள், உலக சமூகத்தின்பால், தெளிவான அழுத்தம் கொடுக்கின்றனர். கிருஸ்துவர்களாகிய நாம் நமது சபையின் சமூகக் கோடுபாடுகளுக்கு எவ்விதம் செவிசாய்க்கின்றோம்?

2.          பஹாய் சமூகத்திற்கும் நமது சபைக்கும் இடையில் எந்தெந்த ரீதியில் பலனளிக்கக்கூடிய ஒத்துழைப்பு ஏற்பட வாய்ப்புண்டு?

மேற்கொண்டு படிக்கப்படக் கூடிய நூல்கள்:

  • “The Bahá’í Faith” Leaflet published by the Bahá’í Publishing Trust, 6 Mount Pleasant, Oakham, Leicestershire.
  • “The Bahá’í Faith” Booklet Ibid
  • “Gleanings from the Writings of Bahá’u’lláh” by Bahá’u’lláh
  • “Paris Talks” by Adbdu’l-Bahá
  • “Guidellines for Today and Tomorrow” by Shoghi Effendi.
  • “Bahá’u’lláh and the New Era” by Dr. J.E. Esselmont. A complete catalogue of Bahá’í literature can be obtaned by writing to: The Bahá’í Publishing Trust, 6 Mount Pleasant, Oakham, Leicestershire LE156Y.

இது கத்தோலிக்கச் சமூகத்திற்குப் பிற சமயங்கள் சம்பந்தமான செயற்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல கையேடுகளில் ஒன்றாகும். இறை நம்பிக்கை, தங்கள் வாழ்க்கையை சமய கோட்பாடு, நோக்கங்கள் ஆகியவற்றுக்கு இணங்க வாழ்ந்து, சமூகத்தின் இணக்கத்திற்குச் சேவையாற்றி, எல்லோருடைய சந்தோஷத்திற்கும் செயலாற்றுவோருடன் புரிந்துணர்வும் சினேகமும், அறியாமையினால் எழும் இடயூறுகளை வெற்றிகொள்ளவும், “எல்லா மக்களுக்குமான மரியாதையும் அன்பும்” எனும் கத்தோலிக்கச் சபையின் போதனையை ஆலோசனை, பிரார்த்தனை, செயல்பாடு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றவும் இந்தக் கையேடுகள் தேவையான தகவல்களை வழங்குகின்றன.

செயற்குழு தன்னுடைய அங்கத்தினர்களுள் ஒருவரான Sr. எலிசபெத் வெஸ்ட் rscj அவர்களுக்கு இந்தச் சேவைக்காக நன்றி நவில்கின்றது.

+சார்ல்ஸ் ஹென்டர்ஸன்

தலைவர்

__பிற சமயங்களுக்கான செயற்குழு__

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பிஷப்புகள் மாநாடு

http://bahai-library.com/newspapers/2002/021124-3.html©Copyright 2002, Bishops’ Conference of England and WalesThe original document can be found at: http://217.19.224.165/resource/interfaith/interfaith08.pdf