
1 ஜூலை 2022
பஹாய் உலக மையம், 1 ஜூலை 2022, (BWNS) —
உலகைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான மாநாடுகள் ஒரு முடிவுக்கு வரும் நிலையில், சமுகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு ஆன்மீக கோட்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களைப் பின்தொடர்வதில் எவ்வாறு இந்தத் துடிப்பான ஒன்றுகூடல்களில் நடைபெற்ற கலந்தாலோசனைகள் வெவ்வேறு கருத்துகளை இணக்கப்படுத்தின என்பதை எல்லா மக்கள் தரப்பினரும் காண்கின்றனர்.
அதிகாரிகள், பாரம்பரியத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கேற்பு இந்தக் கூட்டங்களின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும், இந்தக் கலந்துரையாடல்கள் அண்றடைப்புறங்களையும் கிராமங்களையும் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை உணர்வு, மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டைப் பற்றிய உயர்ந்த நனவுணர்வு் ஆகியவற்றை எவ்வாறு உட்செலுத்துகின்றன என்பது குறித்து தங்கள் மதிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
அதிகாரிகள் மற்றும் தலைவர்கள்–இவர்களில் பலர் மாநாடுகளில் கலந்து கொண்டனர்–குரல் கொடுத்த சில நுண்ணறிவுகள் மற்றும் முன்னோக்குகளின் மாதிரிகள், செய்தி சேவையின் கடைசி அறிக்கைக்குப் பிறகு நடந்த பல மாநாடுகளின் ஒரு சிறிய பகுதியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
கலந்தாலோசனை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் ஆன்மீகக் கோட்பாடுகளின் மீது தலைவர்களின் பிரதிபலிப்பு
ருமேனியா
புக்கரெஸ்ட்டின் மேயர் நிக்குஸோர் டான் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்: “ஒன்றாக விவாதிப்பதன் மூலமும் ஒழுங்கமைப்பதன் மூலமும் மட்டுமே நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளையும் நமது வாழ்க்கையை எளிதாகவும் இனிமையாகவும் ஆக்கக்கூடிய தீர்வுகளையும் நாம் காண முடியும்” என கூறினார்.
ஜெர்மனி
மேய்ன்-கின்ஸிக்-கிரேய்ஸ் -இன் மாவட்ட ஆணையர், தோர்ஸ்டன் ஸ்டோல்ஸ் மாநாடுகள் “அமைதியான ஒத்துழைப்பை” ஊக்குவிப்பதாகக் கூறி, ஒரு வீடியோ செய்தியை அனுப்பினார். தொடர்ந்து அவர், “இந்த அடிப்படை யோசனை முன்னெப்போதையும் விட இப்போது முக்கியம் மிக்கது என நான் நம்புகிறேன், குறிப்பாக இன்று. இந்த மாநாடுகளின் போது நாம் ஒருவரையொருவர் அணுகும் விதம், நீங்கள் பேசுவது போல் ஒருவரிடம் ஒருவர் பேசும் விதம், தப்பெண்ணத்தை நீக்கி, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் விதம், ஆகியவற்றினால் ஒற்றுமை அடையப்படும். உங்கள் மாநாடுகளின் யோசனைக்கு ஏற்ப நாம் அனைவரும் குறிப்பாக ஒரு காரியத்தைச் செய்வோமாக: ஒவ்வொரு நாளும் உலகை இன்னும் கொஞ்சம் மேம்படுத்துவோம்.
மேயர் டோபியாஸ் வில்பிரான்ட், ஜெர்மனியின் எகல்ஸ்பாக் நகரில் நடந்த மாநாட்டில், “உலகின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுதல்” என்னும் மாநாட்டின் தலைப்பைக் குறிப்பிட்டு, “ஒருவருக்கொருவர் எதிராகவோ அல்லது குழப்பத்திலோ அல்ல, மாறாக ஒருவர் மற்றவருடன்” என்றார். அதுதான் இந்த மாநாட்டின் பொன்மொழி, மேலும்… இதுவே நமது காலத்திற்குச் சரியான பொன்மொழியாகவும் தெரிகிறது.
சாட்
மோயன்-சாரி மண்டலத்தின் தனமட்ஜி-இன் ஒரு மாநாட்டில் பாரம்பரிய தலைவர்களுள் ஒருவர், தனது சக தலைவர்கள் சார்பாக பேசுகையில், “இந்தக் கூட்டம் எங்கள் கண்களைத் திறந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் நாம் எப்படி ஆட்சி செய்தோம் என்பதைப் பற்றி சிந்தித்தோம், இப்போது, புதிய நுண்ணறிவுகளுடன், அடுத்த 100 ஆண்டுகளைப் பார்க்கிறோம். நமது பிரதேசங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரச்சினைகளை ஒன்றாகச் சிந்திப்பதும், ஒன்றாகத் தீர்வு காண்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, இளைஞர்களுக்கான பஹாய் கல்வித் திட்டங்கள் எவ்வாறு அவர்களின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க அவர்களை ஊக்குவிக்கின்றன என்பதை நாங்கள் காண்கிறோம்.
சாட் நாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுள் ஒருவரான மஹாமத் ஹசானே இவ்வாறு கூறினார்: “பல நெருக்கடிகள், வன்முறை இடையூறுகள் மற்றும் அநீதிகள் அனைத்தையும் நன்கு அறிந்த நாட்டில் அமைதியை நிர்மாணிப்பதில் இந்த மாநாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும்.”
இந்தியா
ஓர் உள்ளூர் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் கிராமத் தலைவர் ஒருவர் கூறியதாவது: “பஹாய் கொள்கைகளான நல்லிணக்கம், அமைதி, ஒத்துழைப்பு, ஒற்றுமை ஆகியன கல்வியின் மூலமாக மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். … தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் தன்மைமாற்றத்திற்கு கல்வி எவ்வாறு பங்களிக்கிறது என்பதைக் காண பஹாய் கல்வித் திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. இந்த முயற்சிகள் எங்கள் கிராமத்தில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கன்வெதே என்னும் இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ராஜு அர்ஜுன் தத்ரக், குடும்பங்களில் மது அருந்துவதால் ஏற்படும் பேரழிவு விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். “இந்த மாநாடுகளை நாங்கள் தவறாமல் நடத்துவது மிகவும் முக்கியம், ஏனென்றால், நாங்கள் ஆராய்ந்து வரும் பஹாய் கொள்கைகள் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய புதிய கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.”
பிரேசில்
பஹியா மாநிலத்தில் உள்ள கிரிரி மக்களின் முன்னாள் தலைவரான செலியோ டி ஜீசஸ் டா சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார்: “பஹாய் கொள்கைகள் ஒற்றுமையை உருவாக்கி நமது பாரம்பரிய கலாச்சாரத்தை வலுப்படுத்துகின்றன. கிரிரி மக்கள் ஏற்கனவே ஒத்துழைப்பையும் ஒன்றாக வேலை செய்வதையும் திக்கிறார்கள் என்றாலும், பஹாய் போதனைகள் நமது கலாச்சாரத்தை இன்னும் மேலும் வலுப்படுத்த முடியும்.
காங்கோ ஜனநாயக குடியரசு
கசாய் மண்டலத்தில் உள்ள பாகுவா கெங்கே என்னும் இடத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், சுமார் 500 பெண் தலைவர்கள் ஒன்றிணைந்தனர். மாநாட்டைப் பற்றிய ஒரு கட்டுரையில், கனங்கா நகரத்தைச் சேர்ந்த ஒரு தூதுக்குழுவின் உறுப்பினரான க்ளெமெண்டைன் பியோங்கோ பின்வருமாறு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது: “இந்த மாநாடு இந்த எல்லை நகரத்தில் இந்த மண்டலத்தில் அமைதியான சமூகங்கள்பாதுகாப்பிற்கான அணுகுமுறைகளில் பெண் தலைவர்களின் திறனை வலுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைதியை நிர்மாணிப்பதில் பெண்கள் மிக முக்கியப் பங்காற்றுகிறார்கள்—அவர்களின் பங்கேற்பு இன்றி மிகக் குறைவான விளைவுகளே இருக்கும்.”
அமெரிக்கா
வெர்ஜீனியாவின் பிரின்ஸ் எட்வர்ட் மாவட்டத்தின் மேற்பார்வையாளர் குழுவின் உறுப்பினர் பட்டி கூப்பர்-ஜோன்ஸ், உள்ளூர் ஒன்றுகூடல்களின் தாக்கத்தை “நாம் வாழும் இந்த இருண்ட உலகில் ஓர் ஒளி” என வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது: “[அமைதி] தொலைநோக்குப் பார்வைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்”
மலேசியா
மலேசியாவின் சுபாங் ஜெயாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் கூறியதாவது: சமத்துவமின்மை போன்ற பல சமூகப் பிரச்சனைகள் நம்மிடையே உள்ளன. இந்த விவாதங்களில் நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், இந்த பிரச்சினைகளின் மையத்தில் ஒரு ஆன்மீக பிரச்சனை உள்ளது என்பதே.
யாப்
பசிபிக் தீவான யாப்பில் நடந்த உள்ளூர் மாநாட்டில் தனது தொடக்க உரையில், சதாவால் தீவுத் தலைவர்களில் ஒருவரான இக்னாதியோ எமைப்பி, மாநாட்டில் வெளிப்பட்ட திட்டங்களின் மூலம் சமூகத்தில் ஒற்றுமை, ஒத்துழைப்பு, தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமின்மை பலப்படுத்தப்படும் என கூறினார். “இவை சமூகம் செய்ய முயற்சிக்கும் நல்ல விஷயங்கள் ஆனால் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை,” என அவர் கூறினார்.
பாஹ்ரேய்ன்
பஹ்ரைனில் பல சமீபத்திய கூட்டங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் பின்வருமாற எழுதியது: “இரண்டு நாள் மாநாடு… பஹ்ரைன் சமுதாயத்தின் அனைத்து கூறுகளையும் ஒன்றிணைத்து, பங்கேற்பாளர்கள் பலதரப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த பஹ்ரைன் சமூகத்திற்குச் சேவை செய்வதற்கு பங்களிக்கும் வாய்ப்பை வழங்கும்.”
கட்டுரை தொடர்ந்தது: “பொது செழிப்புக்குப் பங்களிப்பதன் மூலமும், சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திட தங்களால் இயன்றதைச் செய்வதன் மூலமும், தங்கள் சமூகத்தை வடிவமைக்கும் செயலில் பங்கேற்பவர்களாக இருக்க அனுமதிக்கும் தனிநபர்களின் பொறுப்பு உணர்வின் வெளிப்பாடாக சமூக சேவையின் முக்கியத்துவத்தை இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது” என்றது.
மார்ஷல் தீவுகள்
மாநாட்டிற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், கல்வி அமைச்சர் கிட்லாங் கபுவா தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “ஒற்றுமை, மனித நலன் மற்றும் உலக ஒற்றுமை ஆகியவை இந்த சமயத்தின் தூண்கள். கல்வி அமைச்சராகவும், இறுதியில், எங்கள் சமூகத்தின் உறுப்பினர் என்னும் முறையிலும், நான் இந்தத் தூண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன், மேலும் வலுவான கலாச்சார மற்றும் ஆன்மீக அடித்தளத்துடன் திறமையான மற்றும் இரக்கமுள்ள உலகளாவிய குடிமக்களாக எங்கள் மக்கள் பேணப்பட வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”
தாய்லாந்து
உள்ளூர் கூட்டத்தில் கலந்து கொண்ட யாங் கேவ் கிராமத் தலைவர் கூறியதாவது: “இந்த மாநாடு எங்கள் கிராமத்தை சிறந்த இடமாக மாற்ற உதவியது. சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், எங்களின் எதிர்காலமாக இருக்கும் குழந்தைகள் அன்பையும் ஒற்றுமையையும் கற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் இதுபோன்ற கூட்டங்களை மேலும் அதிகமாக நான் காண விரும்புகிறேன்.”
சமீபத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற மாநாடுகளின் ஒரு பார்வை:

மேற்கொண்டு பல அற்புதமான மாநாடுகளின் காட்சிகளைக் காண இங்கு செல்லவும்: