
7 ஜூலை 2022
BIC ஜெனீவா, 7 ஜூலை 2022, (BWNS) – இணையத்தில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரிப்பின் சவாலை எதிர்கொள்ள, தொழில்நுட்பத் துறை, அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பஹாய் சர்வதேச சமூகம் (BIC) கூறுகிறது. . டிஜிட்டல் யுகத்தில் மனித உரிமைகள் பற்றிய வருடாந்திர சர்வதேச மன்றமான RightsCon உச்சமாநாட்டின் ஒரு பகுதியாக BIC-யின் ஜெனீவா அலுவலகம் நடத்திய சமீபத்திய குழு விவாதத்தின் கருப்பொருள் இதுவாகும்.
BIC மன்றமானது, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், அஹ்மத் ஷஹீத், மெட்டா’வின் மேற்பார்வை வாரியத்தின் அறங்காவலர், கிறிஸ்டினா அரியாகா மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளரான தாரா செபெஹ்ரி ஃபார் ஆகியோரை ஈரானின் பஹாய்களுக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் பின்னணியில் இணையத்தில் வெறுப்பைக் கையாள்வதில் உள்ள சவால்களை ஆராய்வதற்காக ஒன்றிணைத்தது.
“வெறுப்பை உருவாக்கும் பேச்சு இறுதியில் வெறுப்புக் கலாச்சாரத்தை உருவாக்குகிறது, அங்கு குறிப்பிட்ட குழுக்கள் சமூகத்தின் முழு உறுப்பினர்களாக கருதப்படுவதில்லை, சமுதாய ஒற்றுமை அரிக்கப்பட்டு, பிளவு வேரூன்ற அனுமதிக்கப்படுகிறது, தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஆளும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவுகளின் ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கிறது. ” என ஜெனிவா அலுவலகத்தின் பிரதிநிதி சிமின் ஃபஹடேஜ் கூறினார்.
முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை இயக்கும் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா’வின் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் திருமதி. அர்ரியாகா, மனித உரிமைப் பணியாளர்களுக்குச் சமூக ஊடகம் ஒரு முக்கிய கருவியாக இருந்தாலும், ஈரான் பஹாய்கள் பிரச்சினையின் தொடர்பில் வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்பவும் அது பயன்படுத்தப்படலாம் என விளக்கினார்.
மெட்டா’வின் பதிலிறுப்பாக, உள்ளடக்கத்தை கண்காணிக்கும் ஒரு மேற்பார்வை வாரியத்தை நிறுவுவது மற்றும் உபகரணங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதற்கான கொள்கைகளை அமைப்பதாகும் என திருமதி அரியாகா கூறினார். இந்த வாரியம் இலக்குக் குழுக்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது, இதனால் வெறுப்பூட்டும் பேச்சுகள் அடையாளப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், பங்கேற்பாளர்கள் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது- நேரடி அல்லது அல்காரிதமாக இருப்பினும்-மிகவும் கடினம் என குறிப்பிட்டனர். “வெறுப்புறுத்தும் பேச்சுக்கு எங்கே வரம்பிடுவது என்பதை அறிவது எளிதல்ல” என திருமதி செபெஹ்ரி ஃபார் கூறினார்.
அவர் மேலும்: “(ஆங்கிலம் அல்லாத) மொழி உள்ளடக்கத்தை மட்டுமல்லாமல், சமூக சூழலையும் புரிந்துகொள்ள இணையதளங்கள் வள ஆதாரங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும்,” என்றார்.
ஒப்புக்கொண்ட திருமதி. அரியாகா, “பிரச்சினையின் அளவு… மனித உரிமைகள் சமூகம் தொழில்நுட்ப சமூகத்தில் [நேரம்] முதலீடு செய்வது எப்படி… வழிமுறைகள் மற்றும் அல்கோரிதங்களுடன் வேலை செய்து மனித உரிமைகள் பற்றிய அறிவை எவ்வாறு தொழில்நுட்பத் துறையில் புகுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்,” என்றார்.
வெறுப்பூட்டும் பேச்சு மக்களிடையே பிளவை உருவாக்க முற்படுகிறது என்றாலும், BIC-யால் உருவாக்கப்பட்ட கருத்துக்களம் போன்ற விவாதங்களை கொள்கையின் நிலைக்கு உயர்த்துவதுடன், பிரச்சனைகளைச் சமாளிக்க பல்வேறு துறைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த இயலும் என குழுவாளர்கள் குறிப்பிட்டனர்.
வெறுப்பை உருவாக்கும் பேச்சுகளைத் தீர்ப்பதில் இணைய தளங்களும் ஊடக நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருந்தாலும், தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் மட்டுமே சிக்கலை தீர்க்க முடியாது என்னும் கருத்தையும் விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
“பரஸ்பர மரியாதை உட்பட [ஒரு] முழு அளவிலான விதிமுறைகள், நடத்தை முறைகள், ஈடுபாட்டிற்கான வழிமுறைகள் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குகின்றன” என டாக்டர் ஷஹீத் கூறினார்.
மேலும் திருமதி அரியாகா: “நம்மிடம் அனைத்து சரியான வழிமுறைகள் மற்றும் சரியான சட்டங்கள் இருக்கலாம்… ஆனால் இறுதியில், நாம் எப்படி மனிதர்களாக நடந்து கொள்கிறோம் என்பது நமது கலாச்சாரத்தின் வாழ்கின்ற யதார்த்தத்துடன் தொடர்புடையது,” என்றார்.
மேலும் அவர்: “அதனால்தான் [உரையாடல்களை] உயர்வுறச் செய்யவும் மற்றவர்களை ஈடுபடுத்தவும் பஹாய்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. இறுதியில், இணையத்தில் நடப்பது நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலிக்கின்றது. நாம் நமது கலாச்சாரத்தை மாற்றினால் மட்டுமே அதைச் சரிசெய்ய முடியும்,” என்றார்.
நிகழ்வைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், திருமதி. ஃபஹண்டேஜ்: “தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையுள்ள சமூக நடவடிக்கையாளரிடையே பகிரப்பட்ட பார்வையை வளர்ப்பதில் மன்றம் ஒரு முக்கியமான தருணத்தை பிரதிநிதிக்கின்கிறது. பல துறை உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இதே கருப்பொருளில் எதிர்கால நிகழ்வுகளை நடத்த BIC திட்டமிட்டுள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1602/