எகிப்து: பஹாய் சமூகம் குறித்த குறும்படம் சகவாழ்வுக்கான முயல்வுகளை வலியுறுத்துகின்றது


19 ஜூலை 2022

கெய்ரோ, 19 ஜூலை 2022, (BWNS) – எகிப்தைத் தளமாகக் கொண்ட இணையதள செய்தி சேவையான எல்சாஹா தயாரித்த “எகிப்தில் ஒரு பஹாய்: மூன்று தலைமுறைகளின் கதை” என்னும் குறும்படம், அந்த நாட்டில் பஹாய்களின் அனுபவம் பற்றிய, அந்த நாட்டின் சமூகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதன் தொடக்கம் முதல் இன்று வரை, மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான அதன் முயற்சிகள் ஆகியன குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.

சமூக ஊடகங்களில் ஏறக்குறைய 2 மில்லியன் முறை பார்க்கப்பட்ட ஆறு நிமிடத் திரைப்படம், சில சிவில் உரிமைகளைப் பெறுவதில் எகிப்தின் பஹாய்கள் தங்கள் பயணத்தில் எதிர்கொள்ளும் வரலாற்றுச் சவால்கள் சிலவற்றையும் ஆராய்கிறது.

எகிப்தின் பஹாய் தேசிய ஆன்மீகச் சபையின் உறுப்பினரான பஹா எஷாக் தவ்ஃபீக் கதையை விவரிப்பதுடன், அதிக அமைதியான சமுதாயத்தைப் பேணுவதற்கான அனைத்து எகிப்திய பஹாய்களின் விருப்பத்தையும் எடுத்துக்காட்டுகிறார்.

“நமது சமூகம் சகவாழ்வைப் பற்றிய ஒரு சிறந்த புரிதலையும், அன்பைப் பற்றிய சிறந்த புரிதலையும், மக்கள் ஒருவர் மற்றவருடன் அமைதியான நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்னும் சிறந்த புரிதலையும் அடையும் என்பதே எனது உணர்வு” என்கிறார் திரு.தௌஃபீக்.

எகிப்தின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஹாடெம் எல்-ஹேடி, எகிப்து பஹாய்களின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய பல ஆக்கபூர்வமான உரையாடல்களை இந்த ஆவணப்படம் ஊக்குவித்துள்ளது, இதன் மையத்தில் அவர்களின் சமூகத்திற்கான் அவர்களின் தன்னலமற்ற சேவை உள்ளது, என கூறுகிறார்.

எகிப்தின் பஹாய்கள் தங்கள் சக குடிமக்களுக்கு 2011 ஆம் ஆண்டு வழங்கிய திறந்த கடிதத்தின் (அரபு மொழியில்) பல உணர்வுகளை, மனிதகுலத்தின் ஒருமைப்பாடு உட்பட அத்தியாவசிய ஆன்மீகக் கொள்கைகளை இந்த ஆவணப்படம் எதிரொலிக்கிறது என திரு. எல்-ஹேடி விளக்குகிறார். .

“மானிடத்தின் ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பது முதிர்ச்சியடைந்த சமூகத்தின் அடையாளம் என்பதை அந்த திறந்த கடிதம் விளக்குகிறது. இந்தக் கொள்கையே எகிப்து நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத பல முக்கியக் கொள்கைகளின் அடித்தளமாகும், அதாவது ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம், கலந்தாலோசனை, சர்வலோகக் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், ”என அவர் கூறுகிறார்.

இந்த கொள்கைகள் எகிப்து நாட்டு பஹாய்களின் முன்முயற்சிகளுக்கு அடிப்படையாக அமைகின்றன என திரு. எல்-ஹேடி விளக்குகிறார், அவை அடித்தட்டில் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் அல்லது தேசிய மன்றங்களில் பல்வேறு சhttps://news.bahai.org/story/1604/மூகப் பிரச்சினைகளை யோசிப்பதற்குப் பங்களிக்கும் முயற்சிகள்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1604/