ஆகஸ்ட் 3, 2022
BIC ஜெனீவா – சுமார் 200 ஈரானிய அரசாங்க முகவர்கள் 6 வீடுகளை அழித்துள்ளனர் மற்றும் மஸந்தரான் மாகாணத்தில் உள்ள ரோஷான்கூ கிராமத்தில் பஹாய்களுக்கு சொந்தமான 20 ஹெக்டேர் நிலத்தை அபகரித்துள்ளனர் என செய்தி சேவை அறிந்தது.
மக்களை கலைக்க அரசு முகவர்கள் மிளகு நீரைப் பயன்படுத்தியதுடன் நடவடிக்கையின் போது துப்பாக்கி சத்தமும் செவிமடுக்கப்பட்டு.
இந்த சமீபத்திய நடவடிக்கை பல வாரங்களாக பஹாய்கள் மீதான துன்புறுத்தலை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து வருகிறது: சமீப நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் ஜூன் மாதத்தில் இருந்து குறி வைக்கப்பட்டுள்ளனர்.
“பஹாய்களைத் துன்புறுத்துவது பற்றிய ஈரானிய அரசாங்கக் கொள்கை ஆவணங்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தாமதமாகும் முன் உடனடியாகச் செயல்பட வேண்டும்” என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரதிநிதி டயான் அலாய் கூறினார்.


மூலாதாரம்: https://news.bahai.org/story/1608/