
3 ஆகஸ்ட் 2022
கின்ஷாஷா, காங்கோ ஜனநாயகக் குடியரசு — சமீபத்திய வாரங்களில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள பஹாய் வழிபாட்டு இல்ல குவிமாடத்தின் அலங்கார ஓட்டு உறைப்பூச்சு வேலை, பிரதான கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள மைதானம் ஆகியவற்றின் பிற அம்சங்களின் முன்னேற்றத்துடன் சேர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளது, .
குவிமாடத்தின் ஓடுகள் காங்கோ நதியைக் குறிக்கும் நுண்ணிய வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் துணை நதிகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மழையை ஒரு பெரிய நீரோடையாக சேகரிக்கின்றன. பாரம்பரிய கலைப்படைப்புகளை நினைவூட்டும் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த வடிவமுறை, அனைத்து மக்களும் ஒன்றிணைவதை ஒரு சக்திவாய்ந்த காட்சியாக வழங்குவதுடன் மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய பஹாய் கொள்கையையும் பிரதிபலிக்கிறது.
“வழிபாட்டு இல்லம் அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களுக்குத் திறந்திருக்கும், மற்றும் மனிதகுலத்திற்கான வழிபாடு மற்றும் தன்னலமற்ற சேவை எண்ணும் பிரிக்கமுடியாத கொள்கைகளை பிரதிநிதிக்கின்றது” என பஹாய் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் ரேச்சல் ககுட்ஜி கூறுகிறார்.
மிஸ். ககுட்ஜி தங்கள் சக குடிமக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி ஆழமாகப் பிரதிபலிக்க, அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கும் DRC முழுவதும் உள்ள பலருக்கும் ஊக்கமளிக்கின்றது என விளக்குகிறார்.
“இதனால்தான் சமூக மேம்பாட்டிற்கான ஒரு சக்தியாக வழிபாட்டு இல்லத்தைப் பற்றிய புதிய வீடியோ தொடரை இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என அவர் விளக்குகிறார்.
“வீடியோ வலைப்பதிவு வெளிப்படும் கோவிலின் முன்னேற்றத்தைக் காட்டுவதுடன் நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது,” என அவர் கூறுகிறார்.
கட்டுமானப் பணியின் முன்னேற்றம் கீழே உள்ள படங்களின் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.












மூலாதாரம்: https://news.bahai.org/story/1609/