

12 ஆகஸ்ட் 2022
பஹாய் உலக மையம் – கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய அதிகரிக்கும் நனவுணர்வால் தூண்டப்பட்ட, அநீதியை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட சமூக இயக்கங்களின் வளமான பரப்பு வெளிப்பட்டது.
மிக சமீபத்திய பஹாய் உலகக் கட்டுரை, “சமூக நீதிக்கான முயற்சி”, இந்த அதிகரித்து வரும் பரப்பை ஆராய்கிறது. சமூக நீதிக்கான அவற்றின் பணியில் நடைமுறையில் உள்ள இயக்கங்கள் பயன்படுத்தும் அணுகுமுறைகளுடன் பஹாய் முயற்சிகளில் இருந்து அடிப்படை ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் நுண்ணறிவுகளை இக்கட்டுரை தொடர்புபடுத்துகிறது.
பஹாய் உலகம் இணையதளம், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குத் தொடர்புள்ள கருப்பொருள்கள் மற்றும் சிந்தனை மற்றும் செயல் நிலைகளில், பஹாய் நம்பிக்கையின் ஆற்றல்மிக்க வரலாறு, உலகளாவிய பஹாய் சமூகத்தில் முன்னேற்றங்களைச் சிறப்பித்துக் காட்டும் கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவக் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகிறது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1610/