அப்துல்-பஹாவின் நினைவாலயம்: துப்புரவு வேலைகள் முடிவடைந்ததால் கட்டுமானப் பணி தொடர்கின்றது


16 ஆகஸ்ட் 2022

பஹாய் உலக மையம், 16 ஆகஸ்ட் 2022, (BWNS) – ஏப்ரல் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் உண்டாகிய தீ விபத்தைத் தொடர்ந்து, ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேம்பாடு கண்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றுவதில் திட்டக்குழு முன்னேறியுள்ளது. விரிவான சோதனையைத் தொடர்ந்து, உலக நீதிமன்றம் சன்னதியைப் பற்றிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, கடந்த மாதம், திட்டக் குழு பாதிக்கப்பட்ட பரப்புகளில் மேலும் மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், தீயினால் பாதிக்கப்படாத திட்டத்தின் பிற அம்சங்களில், வடக்கு பிளாசாவில் உள்ள பூந்தொட்டிகள், இத்தாலியில் ட்ரெல்லிஸிற்கான பளிங்கு உறைகளை வெட்டுதல் மற்றும் வடிவமைத்தல் மற்றும் போர்ச்சுகல் நாட்டில் மெருகூட்டல் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. பார்வையாளர்கள் மையம் மற்றும் இதர வசதிகளின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

தீயினால் பாதிக்கப்பட்ட கான்கிரீட் சுவர்கள் நீரைக் கொண்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளன. உடைந்த அல்லது தளர்வான கான்கிரீட் துண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இதே சுவர்கள் ரீபார் மூலம் வலுவூட்டப்பட்டு, கூடுதல் கான்கிரீட் அடுக்கு பயன்படுத்தப்படுகிறது. விவரக்குறிப்புகளின்படி அவற்றின் தடிமன் மீட்டமைக்கப்படும்.
ஒரு சிறப்பு கருப்புப் பூச்சைப் பயன்படுத்தி மேற்கு பெர்ம் நீர்ப்புகாப்பு முடிந்தது. பெர்ம் முடிவடையும் போது புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க நீர்ப்புகா பொருளின் மேல் பாதுகாப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு சிறப்பு நீர்ப்புகா பூச்சைப் பயன்படுத்தி பூந்தொட்டிவேலை தொடர்ந்தது.
பாலிஸ்டிரீன் (இபிஎஸ்) ஃபார்ம்வொர்க் வைப்பு மேற்கு பெர்மில் வேகமாக முன்னேறி வருகிறது. இவை சன்னதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள தோட்டங்களின் அமைப்பிற்கு ஆதரவு நல்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1611/