உலகின் இராணி


இங்கிலாந்தின் எலிஸபெத் ராணியார் 8 செப்டம்பர் 2022-இல் மரணமடைந்தார். ஊடகங்கள் அவரது பெருமையைப் புகழ்பாடுகின்றன. இவர் எழுபது ஆண்டுகள் இங்கிலாத்திற்கும் வேறு பல நாடுகளுக்கும் தேசத் தலைவராக இருந்துள்ளார். காமல்வெல்த் நாடுகளின் உருவாக்கத்திற்கு இவர் தூண்டுகோலாக இருந்துள்ளார். இந்த எலிசபெத் ராணிக்கும் நமது பஹாய் சமயத்திற்கு ஒரு தொலைதூர தொடர்பு உள்ளது. இந்தத் தொடர்பு சுமார் 150 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. பஹாவுல்லா 1868 முதல் 1870 வரை உலகத் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நிருபங்கள் வரைந்தார். அவற்றில் அவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்கள் அனைவரையும் அமைதியின்பால் திரும்பும்படியும் போர்களை நிராகரிக்கும்படியும் வலியுறுத்தினார். அவ்வாறு நிருபங்கள் பெற்றவர்களுள் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியும் ஒருவராவார்.

விக்டோரியா இராணியின் பொன்விழா – 1897

பஹாவுல்லாவிடமிருந்து நிருபத்தைப் பெற்ற விக்டோரியா மகாராணி அந்த நிருபத்தைப் படித்துவிட்டு, “இது கடவுளிடமிருந்து வந்ததென்றால் அது நிலைக்கும், இல்லையெனில் அதனால் எந்தப் பாதகமும் விளையாது,” என்றாராம். இவரது மகன் 7-வது எட்வர்ட், இவரது மகன் 5-வது ஜோர்ஜ், இவரது மகன் ஆறாவது ஜோர்ஜ். இந்த ஆறாவது ஜோர்ஜுக்குப் பிறந்தவர்தான் எலிஸபெத் ராணி. அதாவது எலிசபெத் இராணியின் தாத்தாவான 5-வது ஜோர்ஜின் பாட்டிதான் விக்டோரியா மகாராணி. விக்டோரியா ராணியின் அந்தப் பதிலின், விடையிறுப்பின் விளைவாக, கடவுளின் அருட்கொடையாக பிற்காலத்தில் அவருடைய பேத்தியான ருமேனியாவின் மரீ இராணியார் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒரு விளைவாக அன்றைய பாலஸ்தீனத்தில் அப்துல்-பஹாவின் மனிதநேய சேவைகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு ‘சர்’ பட்டம் (Abdu’l-Baha Abbas, KBE) வழங்கி கௌரவித்தது. அந்தப் புகழ் அப்துல் பஹாவுக்கு அல்ல, மாறாக அப்துல் பஹாவுக்கு அந்தப் பட்டத்தை வழங்கும் அருட்கொடையினால் பிரி்ட்டிஷ் அரசாங்கமே கௌரவம் பெற்றது. பட்டத்தைப் பெற்ற அப்துல்-பஹா அதைக் கடைசி வரை பயன்படுத்தவே இல்லை. பல சாம்ராஜ்யங்கள் வீழ்ந்தபோதும் பிரிட்டிஷ் பேரரசு உலகின் பல பாகங்களில் நீண்டகாலம் நிலைத்திருந்தது. இது அன்று விக்டோரியா இராணி பஹாவுல்லாவின் நிருபத்திற்கான விடையிறுப்பின் விளைவான கடவுளின் அருளன்றி வேறில்லை.

ஜனவரி 19, 2000-த்தில் பஹாய் உலகிற்கும் இராணியை போன்றிருந்த, ஓர் இராணியைவிட உயர்ந்த ஸ்தானம் கொண்ட ஒருவர் விண்ணேற்றம் அடைந்தார். அவரைச் சுற்றியிருந்த கடவுள் சமய திருக்கரங்கள் அவரை ‘உலகின் இராணி’ என அழைத்தனர். அவருடைய பண்புகளும் குணங்களும் அத்தகையதாக இருந்தது. அவர் தாம் வாழ்ந்திருந்த, அப்துல்-பஹாவின் இல்லத்திற்கு எதிரே இருந்த ஒரு சிறு தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். புனித நிலத்திற்குச் செல்லும் பஹாய் புனித யாத்ரீகர்கள், அவரது கல்லறைக்குச் சென்று பிரார்த்தனைகள் கூறத் தவறுவதே இல்லை.

ராணிகளும் பொறாமை கொள்ளும் கம்பீரத் தோற்றம்

அவர் (அமாத்துல் பஹா) பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு (1924) ஓர் இளம் பஹாய் ஆக இருந்தபோது, வட அமெரிக்காவை விட்டு வெளியேறியிருந்தார்; அப்போது, அவர் மே மேக்ஸ்வெல்லின் மகள் என அறியப்பட்டிருந்தார். இப்போது, அவர் அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும் என்னும் பெயருடன் (இப்பெயர் அப்துல்-பஹாவினால் வழங்கப்பட்டது), அன்பார்ந்த பாதுகாவலர் ஷோகி எஃபெண்டியின் மனைவியாக, கடவுள் சமயத்தின் ஒரு திருக்கரமாக, (அமெரிக்கா) திரும்பிக் கொண்டிருந்தார். வில்மெட்டில், ஓர் இராணியைப் போன்று அவர் உரையாற்ற எழுந்தார். அவருடைய மென்மையான மேலாடை அவரது அழகான இளம் முகத்திற்கு வடிவம் தந்தது. மேலும், புகைப்படங்களிலிருந்தும் கூட அவர் பஹாய்கள் மீதும், பஹாய் அல்லாத சமய ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் மீதும் அவர் எவ்வாறு ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதை எளிதில் காணலாம். – https://www.bahai.org/documents/essays/nakhjavani-bahiyyih/tribute-amatulbaha-ruhiyyih-khanum

உதாரணமாக, பஹாய் சமயத்தின் அம்பாஸடர் (தூதர்) என்னும் முறையில் அவரது (ரூஹிய்யா காஃணும்) பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும், தேசிய, உள்ளூர் அல்லது கிராம மட்டங்களில் உள்ள அரசாங்கத் தலைவர்களையும் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்தார், சமூகத்தின் ஒரு வகுப்பினரிலிருந்து மற்றொரு வகுப்பினருக்கு வெகு எளிதாக விஜயம் செய்தார். அவர் எல்லா விதத்திலும் ஓர் இராணியாக, கௌரவத்திற்கும் மரியாதைக்கும் தகுதியுடையவராக இருந்தபோதிலும், அவர் எப்பொழுதும் சட்டரீதியான அதிகாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் இந்த சின்னங்களை மரியாதையுடனும் இயல்பான பணிவுடனேயே அணுகினார். -https://www.bahai.org/documents/essays/nakhjavani-bahiyyih/tribute-amatulbaha-ruhiyyih-khanum

இந்த இராணியின் (அமாத்துல் பஹா) புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அது காலத்தால் அழியாது, நூற்றாண்டுகளின் நகர்ச்சி அவரது உண்மையான நிலையை உலகத்திற்கு மேன்மேலும் வெளிப்படுத்தும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: