ஒரு தடையற்ற சீரான அனுபவம்: ஸாம்பியாவில் கல்விப் பயணத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுதல்


கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1615/ செல்லவும்

லுசாக்கா, ஸாம்பியா, 9 செப்டம்பர் 2022, (BWNS) — கடந்த ஒரு மாதமாக, ஸாம்பியா நாட்டு பஹாய்கள், ஒரு நடுமையமான கேள்வி˙யைப் பற்றி சிந்தித்து வருகின்றனர்: அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஹாய் கல்வியல் முன்முயற்சிகளின் நெடுக்கம், எவ்வாறு ஒரு சீரான, ஒத்திசைவான அனுபவத்தை குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி வரை வழங்கிட இயலும்?

சமீபத்தில், ஸாம்பியாவிலுள்ள பஹாய் ஸ்தாபனங்களும் பஹாய் உத்வேக அமைப்பாண்மைகளும் (organizations) பல தசாப்தங்களாக அந்த  நாட்டில் மடிப்பவிழ்ந்துவரும் பல்வேறு கல்வியல் நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான கண்ணோட்டமிட ஐந்து நாள்களுக்கு ஒன்றுகூடின.

ஆப்பிரிக்காவிலுள்ள கண்ட ஆலோசகர் வாரியத்தின் ஓர் உறுப்பினரான முசுன்டா கப்புஸா-லின்செல், அவ்வொன்றுகூடலின் முக்கியத்துவத்தை விவரிக்கின்றார்: இந்தக் கருத்தரங்கு, ஸாம்பியாவில் ஆன்மீக மற்றும் லௌகீக கல்வியை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள முகவாண்மைகள், முதன் முறையாக, நாட்டின் முன்முயற்சிகளின் ஒரு முழு வர்ணாவளி (spectrum) குறித்த ஓர் ஆழமான மதிப்புணர்வைப் பெற்று தங்கள் முயற்சிகளில் மேலும் நெருக்கமான உடனுழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஒன்றுகூடின.

திருமதி கபுசா-லின்செல், இந்த ஆற்றல்மிக்க விவாதங்கள் பரபரப்பான புதிய வாய்ப்புக்களைத் திறந்தன எனவும், பங்கேற்பாளர்கள் தங்கள் முயற்சிகளை ஒரே குறிக்கோளுக்கு — அவர்களின் அண்டைப்புறங்கள், கிராமங்கள் மற்றும் இறுதியில் அவர்களின் சமூகத்தின் மேம்பாட்டை நோக்கி அவர்களைத் திசைதிருப்பவும் உதவுகின்ற மனித ஆன்மாவில் மறைந்திருக்கும் ஆற்றல்களை விழிப்படையச் செய்யும் – ஒரே இலக்கிற்குப் பங்களிப்பதைக் காண உதவியுள்ளன என விளக்குகிறார்.

நிலையாகத் துல்லியமாகும் ஒரு கல்வியல் முறைமை

ஸாம்பியாவின் மற்றொரு ஆலோசகரான ஹாமெட் ஜவாஹெரி, எதிர்காலத்திற்கான ஒரு பாதையை வரைவதில், இதுவரையில் மலர்ச்சியுற்று வந்துள்ள கல்வியல் முறைமையின் பயணம் குறித்த ஒரு பகிரப்பட்ட புரிதலை உரைப்பது முக்கியம் என பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர் என விளக்கினார்.

இதைச் செய்வதற்கு, சமுதாய பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புகொண்ட ஆன்மீக மற்றும் தார்மீக சக்தியளிப்பு, கல்வியல் கல்வி, கல்வியல் முன்முயற்சிகள் சார்ந்த அனுபவங்களைப் பரிசீலித்தனர். ஸாம்பிய பஹாய் தேசிய ஆன்மீக சபையினால் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணம், இந்த முனைவுகள் அனைத்தையும் ஒரே அடிப்படையில் பார்ப்பதற்கு, கடந்த இருபது ஆண்டு முயற்சியிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகள் மற்றும் அனுபவங்களிலிருந்து பயனடைவதற்கு வாய்ப்பளித்தது. இவற்றிலிருந்து சதா துல்லியமாகும் ஒரு கல்வியல் முறைமை வெளிப்பட்டது.

இக்கதை, முதலில் தார்மீக கல்வி குறித்த ஒரு பயிற்சிக்கழகம் 1983-இல் ஸ்தாபிக்கப்பட்ட போது ஆரம்பித்தது.

சமுதாய சேவைக்கான திறனாற்றல் உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்பட்ட, இந்த ஆரம்ப பயிற்சிக்கழகம், சமூக நிர்மாணிப்பு முனைவுகளுடன் அதற்கடுத்த எல்லா கல்வியல் முன்முயற்சிகளுக்கான அடித்தலத்தை இது வழங்கியது.

பின்னர், ஸாம்பியாவின் பல மண்டலங்களில் பணிபுரியும் நான்கு பயிற்சிக்கழகங்களாக பன்முகப்படுத்தப்பட்ட இது எவ்வாறு, மனிதகுல ஒருமை, பெண் ஆண் சமத்துவம், சமுதாயத்திற்கான வாழ்க்கை முழுவதுமான சேவையின் முக்கியத்துவம், கலந்தாலோசனை போன்ற பஹாய் கோட்பாடுகளை ஆராய்வதற்கும் இக்கோட்பாடுகளை அண்டைப்புறங்கள் மற்றும் கிராம வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதற்கு நடைமுறையான அனுபவத்தைப் பெறுவதற்கும் மக்களைச் சிறு குழுக்களாக ஒன்றுதிரட்டியது.

வருடப்போக்கில் பயிற்சிக்கழகத்தின் தார்மீக ஆற்றலளிப்பில் பங்கேற்பு அதிகரித்த போது, தங்கள் சமூகங்களுக்கு மேன்மேலும் அதிக பலக்கிய சேவைகளை வழங்குவதற்கான ஆவலும் திறனாற்றலும் அதிகரித்தது. இந்த அதிகரித்து வரும் திறனாற்றல், கூடுதல் கல்வியல் முக்கியத்துவங்களுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, கல்வியல் கல்வி, மற்றும் சமுதாய பொருளாதார அபிவிருத்தியுன் தொடர்புகொண்ட முன்முயற்சிகளுக்கு வழிவகுத்தது.

பல கல்வியல் முன்முயற்சிகள், ஒரே ஒட்டுமொத்த இலக்கு

 லுசாகாவில் நடந்த கலந்துரையாடல்கள், ஜாம்பியாவில் பல பஹாய் கல்வி முன்முயற்சிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு பரந்த இலக்கைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதைக் காண அவை பங்கேற்பாளர்களுக்கு உதவின. ஒரு பஹாய் உத்வேக அமைப்பான்மையான இன்ஷிண்டோ அறக்கட்டளையின் மொஹம்மத் அப்து-சலாமி, , பின்வருமாறு கூறுகிறார்: “பெறுநர்கள் அல்லது வெறுமனே பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல, அதன் சொந்த லௌகீக, ஆன்மீக மற்றும் அறிவார்ந்த முன்னேற்றத்தின் முன்னணியாளராக இருக்கும் ஒரு மக்கள்தொகையின் திறனில் நம்பிக்கை வைப்பதே இந்த முன்முயற்சிகள் அனைத்தின் இயக்கக் கோட்பாடாகும்””

பயிற்சிக்கழகத்தின் மூலம் அடையப்பட்ட திறன்களும் திறமைகளும் மற்றொரு கல்வியல் முன்முயற்சியில் பங்கேற்றுள்ள இளைஞர்களின் அனுபவங்களை மேம்படுத்தியது:  இஷின்டோ அறக்கட்டளையினால் பயிற்றுவிக்கப்பட்டோரினால் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் உத்வேக ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள். இந்த சமூகப் பள்ளிகள் மாணவர்களிடையே கல்வியில் சிறந்து விளங்குவதற்கான தாகத்தை வளர்த்து, சக குடிமக்களுக்கு சேவை செய்ய அவர்களை வழிநடத்துகின்றன. 2000-ங்களின் நடுப்பகுதியில் இருந்து, அந்த நாட்டில், குறிப்பாக, இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகள் வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட கிராமப்புற மற்றும் பெரிய-நகர்ப்புற பகுதிகளில், 63 பள்ளிகளின் வலையமைப்பு உருவாகியுள்ளது,

இந்த சமூகப் பள்ளிகள் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளைத் தக்கவைக்கும் திறன் கொண்ட இடங்களில் உருவாக்கப்படுகின்றன என திரு. ஜாவேரி குறிப்பிடுகிறார். இத்தகைய சமூகங்கள் பெற்றோர்கள், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபைகள் ஆகியவற்றின் ஆதரவுடன், சமூகத் தலைவர்களுடன் இணைந்தும், சில சந்தர்ப்பங்களில் அரசாங்க முகவாண்மைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்தும், உறுதியான அடித்தளங்களில் பள்ளிகளை நிறுவ உதவுகின்றன.

1992-இல் ஸ்தாபிக்கப்பட்ட பனானி சர்வதேச பள்ளி மற்றொரு கல்வி முன்முயற்சி ஆகும். அது தார்மீக மற்றும் அறிவார்ந்த சிறப்பு கவனம் சாம்பியா பெண்கள் தரமான இரண்டாம் நிலை கல்வி வழங்குகிறது.  பள்ளி பஹாய் கல்வி பொருட்கள் மீது ஈர்க்கிறது என்று ஒரு பண்பு அபிவிருத்தி திட்டம் ஒரு சர்வதேச பாடத்திட்டம் இணைக்க கற்று வருகிறது.

இளைஞர்கள் தங்கள் இரண்டாம் நிலை கலவிகளில் நுழைந்து சமூகப் பிரச்சினைகள் பற்றிய ஓர் உயர்த்தப்பட்ட விழிப்புணர்வை உருவாக்கிக்கொள்ளும்போது, அவர்கள் இன்ஷின்டோ அறக்கட்டளையால் செயல்படுத்தப்படும் சமூக நடவடிக்கைக்கான ஆயத்தம் (PSA) திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

திரு அப்டூ-சலாமி, இந்த PSA திட்டம் கல்வி, விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் தங்கள் சமூகங்களின் வளர்ச்சிக்காக அறிவியல் மற்றும் மதம் இரண்டிலிருந்தும் பெறப்பட்ட அறிவைப் பயன்படுத்துவதற்கான திறனை இளைஞர்களிடையே உருவாக்குகிறது என விளக்குகிறார்.

“PSA திட்டத்தின் பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகத்தின் அபிவிருத்தியைத் தங்கள் தோளில் சுமக்கக்கூடிய ஒன்றாகக் காண வருகிறார்கள். அவர்கள் வெளியில் உள்ளோரின் உதவிக்காக காத்திருக்கவில்லை. அவர்கள் தேவைகளை அடையாளம் கண்டு, அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள், “என அவர் கூறுகிறார்.

விவசாயத் திட்டங்களைத் தொடங்கவும், பாலர் பள்ளிகளை நிறுவவும், சுற்றுச்சூழல் சுகாதார பரப்பியக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளை வடிவமைக்கவும், சிறு வணிகங்களைத் தொடங்கவும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்கின்றனர் என அவர் மேலும் கூறுகிறார்.

இந்த இளைஞர்கள் மூன்றாம் நிலைக் கல்வியை அணுகுகையில், சிலர் தங்கள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சிறந்து விளங்குவதற்கு கூடுதல் கல்வி உதவி தேவைப்படுகிறது. புதிதாக நிறுவப்பட்ட லோம்துன்ஸி அறக்கட்டளை இந்தத் தேவையை ஒரு டுடோரியல் திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்ய முற்படுகிறது; இது மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பு வகுப்புகளை வழங்குகிறது.

லோம்துன்ஸியைச் சேர்ந்த சுங்கு கபுசா கூறுகிறார்: “லோம்துன்ஸி அறக்கட்டளை மாணவர்களுக்குத் தொழில் ஆலோசனைகளை வழங்குகிறது, தொழிற்பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் அவர்களோடு உடன்செல்கிறது, மேலும் மாணவர்கள் தங்கள் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கும் தொழில்களைத் தொடர உதவுகிறது.”

மூன்றாம் நிலைக் கல்வியில் நுழைந்தவுடன், இந்தக் கல்வி முன்முயற்சிகளின் ஊடாகச் சென்ற இளைஞர்கள், பஹாய் கொள்கைகளின் அடிப்படையில் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு நிலையாக ஆழமடைந்துவரும் ஆவலை உணர்கிறார்கள். உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக்கழகம் இளங்கலை கருத்தரங்குகளை வழங்குகிறது; இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒரு பஹாய் கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தக் கருத்தரங்குகளின் நோக்கங்களுள் ஒன்று, பங்கேற்பாளர்கள் தங்கள் பல்கலைக்கழகக் கல்வியை சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளுடன் ஒருங்கிணைந்த ஒன்றாகக் காண உதவுவதாகும்.

கலாச்சாரத்தில் மேம்பாடு

லுசாகாவில் நடந்த தேசிய கூட்டத்தில் பெறப்பட்ட நுண்ணறிவுகளில் சில, கிராமப்புறங்களின் கலாச்சாரத்தின் மீது பஹாய் கல்வி முன்முயற்சிகளின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன, குறிப்பாக சமூக அல்லது கலாச்சார தடைகள் இளைஞர்களின் கல்வி அனுபவத்தைத் தடுக்கும் இடங்களில் இவை காணப்பட்டன.

சமூகப் பள்ளித் திட்டத்தைச் சேர்ந்த க்ளைவ் லெங்வே கூறுவதாவது: “பெற்றோர்களும் பரந்த சமூகமும் ஸாம்பியா நாட்டு பஹாய்களின் வெவ்வேறு கல்வித் திட்டங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அறிவார்ந்த மற்றும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் வளர்கிறது.”

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பயிற்சிக்கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரான போலீன் கௌம்பா பின்வருமாறு விவரிக்கிறார்: “சில கிராமங்களில், பெண்களுக்கு அவர்கள் கல்விக்கான ஆதரவு இருப்பதில்லை. இளவயதிலேயே திருமணத்தைப் பற்றிய பாரம்பரிய பழக்கவழக்கங்களின் அழுத்தத்தை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

“ஆனால் இந்தப் பெண்கள் பஹாய் சமூகத்தின் கல்வித் திட்டங்களில் பங்கேற்று, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவர்களுள் பெற்றோரும் குடும்பங்களும் ஒரு வித்தியாசத்தைக் காண்கின்றனர்; இளம்வயது திருமணத்தைப் பற்றிய அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது.

திருமதி கௌம்பா மேலும் கூறுவதாவது: “இந்த இளம் பெண்கள் தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர், மேலும் தங்களை மாற்றத்தின் முகவர்களாக, தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு உண்மையிலேயே பங்களிக்கக்கூடிய மக்களாகக் காண வருகின்றனர்.”

லோம்துன்ஸி அறக்கட்டளையைச் சேர்ந்த மிஸ் கபுசா, இந்த ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் கல்வி கட்டாயங்கள் அனைத்தும்—ஆன்மீக மற்றும் தார்மீக திறன்களை வளர்த்தல், கல்வியில் அதிசிறப்பை ஊக்குவித்தல், மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான திறனை உயர்த்துதல்— இளைஞர்கள் தங்கள் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்த தங்கள் படைப்பு மற்றும் அறிவார்ந்த திறன்களை திசைதிருப்ப உதவுகின்றன என விளக்குகிறார்.

அவர் சொல்வதாவது: “இந்த இளைஞர்கள் தங்கள் சக பிரஜைகளுக்குச் சேவை செய்யும்போது கல்விபயில்வது சாத்தியமே என்னும் ஒத்திசைவான வாழ்க்கை வாழ்வதைப் பற்றி கற்றுக்கொள்கின்றனர். மூன்றாம் நிலைக் கல்வியை முடித்தவுடன், அவர்கள் தங்கள் தொழிலின் மூலம் தங்கள் சமூகங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கத் திரும்பி வருகின்றனர்.”

உரையாடலை அடித்தட்டிற்கு விரிவுபடுத்துதல்

லூசாகாவில் நடைபெற்ற தேசிய நிலையிலான கலந்துரையாடல் உள்ளூர் மட்டத்தில், குறிப்பாக அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் இப்போது தொடர்கின்ற பலவற்றில் முதலாவதாக இருந்தது என திருமதி கபுசா-லின்செல் விளக்குகிறார்.

வடமேற்கு மாகாணத்தின் கட்டுயோலா கிராமத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இந்தக் கலந்துரையாடல்களில் முதலாவது கலந்துரையாடல், ஆரம்பக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரையான தமது சமூகங்களின் அறிவாற்றல், தார்மீக மற்றும் ஆன்மீக அபிலாஷைகளை நிவர்த்தி செய்து, தற்போதுள்ள முன்முயற்சிகளின் அஸ்திவாரங்களை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை ஆராய்வதற்காக முழுக் குடும்பங்கள், ஆசிரியர்கள், பாரம்பரியத் தலைவர்கள் மற்றும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1615/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: