பஹாய் ஆய்வுகள்: “வாசிப்பு குழுக்கள்” வருடாந்திர ஏபிஎஸ் (ABS) மாநாட்டை வளப்படுத்துகின்றன


18 செப்டம்பர் 2022

ஒட்டாவா, கெனடா, 18 செப்டம்பர் 2022, (BWNS) – பஹாய் ஆய்வுகளுக்கான சங்கம் (ABS) சமீபத்தில் அதன் 46-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது. அதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்களை ஒன்றிணைத்தது. இந்த ஆண்டு மீண்டும் இணையத்தில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சிந்தனை மற்றும் சொல்லாடல்களின் பல்வேறு பகுதிகளுக்கு பஹாய் போதனைகளிலிருந்து நுண்ணறிவுகளைப் பங்களிப்பதற்கான அவர்களின் முயற்சிகள் குறித்து பிரதிபலிப்பதற்குப் பங்கேற்பாளர்களுக்கு உதவியது.

இந்த ஆண்டின் மூன்று நாள் கூட்டத்தின் போது விளக்கக்காட்சிகள் மற்றும் ஊடாடும் அமர்வுகள் குறிப்பாக ஆண்டு முழுவதும் சந்திக்கின்ற “வாசிப்புக் குழுக்கள்” உட்பட வளர்ந்து வரும் எண்ணிக்கையிலான கூட்டு முன்முயற்சிகள் நடைபெற்ற விவாதங்களினால் செறிவூட்டப்பட்டன. இந்த வாசிப்புக் குழுக்கள் ஒவ்வொன்றும் கல்வி, பொருளாதாரம், பருவநிலை மாற்றம், சமுதாய மாற்றத்தின் இயக்கவியல், அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், நீதி மற்றும் சமரசம், சட்டம் ஊடகம், பொது சுகாதாரம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற ஒரு தலைப்பில் கவனம் செலுத்துகின்றன.

ABS நிர்வாகக் குழுவின் செயலாளரான டொட் ஸ்மித் கூறுவதாவது: “இந்தக் குழுக்கள்—சில ஒழுக்கம் சார்ந்தவை மற்றும் சில பல்துறை சார்ந்தவை—ஆன்மீகக் கொள்கைகளின் வெளிச்சத்தில் தங்கள் துறைகளில் உள்ள ஆழமான கேள்விகளையும் கவலைகளையும் ஆராய்வதற்கும், இந்த நேரத்தில் மனிதகுலத்தின் தேவைகள் குறித்த புதிய நுண்ணறிவுகளைத் தேடுவதற்கும் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.” அறிவு உருவாக்கத்தை எளிதாக்குவதற்குப் பல்வேறு சூழல்களில் கலந்தாலோசனை கோட்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி ABS எதிர்கொண்ட ஒரு கேள்வியிலிருந்து வாசிப்புக் குழுக்கள் பிறந்தன. ABS-க்கான கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவும் செல்வி அடைக்கலம் ஜபிஹி கூறுவதாவது: “‘புரிதல் என்னும் பரிசின் முதிர்ச்சி கலந்தாலோசனையின் மூலம் வெளிப்படுகிறது’ என்னும் பஹாவுல்லாவின் கூற்றைப் பற்றி சங்கம் நடைமுறையில் கற்றுக்கொள்கிறது.”

மிஸ் அடைக்கலம் ஜபிஹி மக்கள் தங்கள் துறை தொடர்பான ஒரு சொல்லாடலின் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆய்வை மேற்கொள்ள உத்வேகம் பெறும் போது புதிய வாசிப்புக் குழுக்கள் உருவாகின்றன என விளக்குகிறார்.

கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவுகின்ற எரிக் ஃபார், “குழுக்கள் பொதுவாக தொடர்புடைய இலக்கியத்தின் ஆரம்ப வாசிப்பு பட்டியலை அடையாளம் காண்கின்றன மற்றும் அவை காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டு சுத்திகரிக்கப்படலாம். ஒரு குழுவின் பங்கேற்பாளர்கள் இந்த விஷயங்களை ஒன்றாக மதிப்பாய்வு செய்யும்போது, அவர்கள் தங்கள் துறைகளில் சிந்தனையையும் நடைமுறையையும் வடிவமைத்த ஒரு சொல்லாடலில் அடிப்படை அனுமானங்கள், மையக் கருத்துக்கள் மற்றும் உயர்ந்த அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முயன்று, அவற்றை பஹாய் போதனைகளுடன் தொடர்புபடுத்துகின்றனர்.”

மிஸ் அடைக்கலம் ஸபிஹி மேலும் கூறுவதாவது: “பஹாய் சமூக நிர்மாணிப்பு முன்முயற்சிகள் மற்றும் சமுதாய நடவடிக்கைகளில் வளர்ந்து வரும் அனுபவம், அத்துடன் அத்தியாவசிய பஹாய் போதனைகள் மற்றும் கொள்கைகளும், இந்தக் கேள்விகளுக்குத் தெளிவூட்டுகின்றன.”

மாநாட்டிற்கும் இந்த சிறிய குழு அமைப்புகளுக்கும் இடையிலான உறவு ஒரு மதிப்புமிக்க  வட்டத்தை உருவாக்குகிறது என்பதை சங்கம் கற்றுக்கொள்கிறது: வருடாந்திர மாநாட்டில் விவாதங்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வாசிப்புக் குழுக்கள் செழுமைப்படுத்தப்படுவதுடன், புதிய குழுக்களும் உருவாக்கப்படுகின்றன–எதிர்கால மாநாடுகளில் விளக்கக்காட்சிகள் மற்றும் மன்றங்களுக்கு அறிவளிப்பதற்கு அதிக நுண்ணறிவுகள் உள்ளன.

டாக்டர் ஸ்மித் கூறுவதாவது: “இந்த ஆண்டு திட்டத்தில் உள்ள பல விளக்கக்காட்சிகள் 2021 மற்றும் 2022 மாநாடுகளுக்கு இடையிலான மாதங்களில் நடந்த வாசிப்புக் குழுக்கள் அல்லது கருப்பொருள் கருத்தரங்குகள் போன்ற கூட்டு கற்றல் முன்முயற்சிகளின் பலனாக இருந்தன. மற்ற கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொகுப்பாளர்களின் பங்களிப்புகளால் இந்தத் திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.” இந்த ஆண்டு மாநாட்டு நிரலின் விளக்கக்காட்சிகள் மற்றும் துணை பொருட்கள், முந்தைய ஆண்டுகளில் இருந்து விளக்கக்காட்சிகளின் காப்பகத்துடன் இப்போது பஹாய் ஆய்வுகளுக்கான சங்கத்தின் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1616/