இரான் நாட்டில் ஒரு பெண்கள் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. அந்நாட்டு பெண் ஒருவர் (மாஹ்ஸா அமீனி) தமது தலையை ஒழுங்காக மறைக்காத காரணத்தினால் கைது செய்யப்பட்டு, பின் இறந்து போனார். இதற்கு சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு பஹாய்கள் ஒரு புதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகினர். இவர்களுக்கான உலக நீதிமன்றத்தின் செய்தியிலிருந்து ஒரு மேற்கோள்:
பேரன்புக்குரியவரின் நண்பர்களே! சமீபமான நிகழ்வுகளைப் பரிசீலியுங்கள். எவ்வாறு, ஆத்திரம், கலகம் ஆகியவற்றை உண்டாக்கும் இந்த வெளிப்படையான அநீதிக்கு விடையிறுக்கும் விதமாக, அத்தகைய துன்பச் சமுத்திரத்தில் என்றுமே மூழ்கடிக்கப்பட்டு வந்துள்ள அந்த ஆன்மாக்களின் தூய உள்ளங்களில் வஞ்சம் தீர்த்தலின் சிறிதளவு தடயம் கூட காணப்படவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, நியாயம் தேடும் அவர்களின் முயல்வுகள் சட்டத்தைப் பின்பற்றியும் அவர்களின் மேல்முறையீடுகள் அதிகாரத்தில் இருப்போரிடமும் செய்யப்படுகின்றன. பஹாய்கள் நீதியை நாடுகின்றனர், நியாயத்திற்காகவும் நீதிக்காகவும் ஏங்குகின்றனர், ஆனால் ஒருபோதும் பதிலடியையும் பழிவாங்கலையும் பின்தொடரமாட்டார்கள். அவர்களின் உள்ளங்கள் வேதனையால் நிறைந்துள்ளன, ஆனால் வெறுப்பிலிருந்தும் குரோதத்திலிருந்தும் முற்றாக விடுபட்டுள்ளன. அவர்கள் ஆகுலத்துடன் (anxious) இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் கருணையும் அன்பும் எல்லையற்றவை. அவர்களுக்குக் குறுகிய வழிமுறைகளே உள்ளன, ஆனால் பெருந்தன்மையான குணாதிசயங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர், ஆனால் பிறருக்கு அவர்கள் புகலிடமும் தஞ்சமுமாக இருக்கின்றனர். அவர்கள் கெடுமதியினரின் பொறிகளில் சிக்கிக்கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் ஆன்மாக்கள் உயர்ந்து நிற்கின்றன. அவர்கள் தவறிழைக்கப்பட்டோர், ஆனால் அப்படி தவறிழைத்தோருக்கும் அவர்களின் நலன்விரும்பிகளாக அவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை வன்முறை, மோதல் ஆகியவற்றில் ஈடுபடாமல், பரிவிரக்கத்தையும் மன்னிப்பையும் காட்டுவதற்காகவே வளர்க்கிறார்கள். அதன்மூலம், அப்பிள்ளைகள் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வளரும்போது, அக்குழந்தைகள் எங்ஙனம் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பது. அத்தவறிழைக்கப்பட்டவர்கள் புராதன அழகருக்கான விசுவாசத்தின் மூலமும், எவரது சொந்த சக்தி என்னும் கரத்தினால் அந்தப் பிரதேசங்களில் அவர்களின் ஆன்மீக முன்னோர்களை வளர்த்தும் பேணியும் வந்துள்ளாரோ, அவரது ஆலோசனைகளின் மூலமும் தங்கள் பற்றி எரியும் இதயங்களைத் தேற்றிக்கொள்கின்றனர். அவர் மோதலையும் சச்சரவையும் தடைசெய்து, பின்வருவன போன்ற சொற்களைக் கொண்டு அவர்களுக்குக் கற்பித்தார்: “இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கம்: மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.”
கீழ்க்காணும் செய்தி தற்போது இரான் நாட்டில் நடக்கும் போராட்டம் குறித்த செய்தி:
https://www.thedailystar.net/opinion/views/news/the-futility-oppression-iran-3126376

1848-ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள படாஷ்ட் நகரில் நடந்த ஒரு மாநாட்டில், பாப்’யி கவிஞரும் புரட்சியாளருமான ஃபாத்திமா பராகானி தாஹிரி 80 பேர் முன்னிலையில் வெளிவரத் துணிந்தார். கஜார் அரச வம்ச ஆட்சியின் போது தாஹிரிஹ் வாழ்ந்தார்; பெண்கள் அறியாமை, கல்வியறிவு இல்லாமல் பொது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டனர் — சர்வாதிகாரம், மதப்பிடிவாதம் மற்றும் கேள்விக்கு இடமில்லாத ஆணாதிக்கம் அதன் மிகக் கடுமையான வடிவங்களில் குறிக்கப்பட்ட ஒரு சூழல் அது. தாஹிரியின் அறிவார்ந்த திறன்கள், பேச்சுத்திறன், கவிதைத் திறமைகள், தீராத ஆர்வம் மற்றும் அசைக்க முடியாத தைரியம் ஆகியவை அவரை அவர் காலத்தின் அரிதான பெண்களில் ஒருவராக ஆக்கியது — இது தனது அன்பு மகளுக்கு தமது நூலகத்தின் எல்லைக்குள் கல்வி கற்பிக்க வேண்டும் என்னும் அவருடைய தந்தையின் (கஸ்வின் இஸ்லாமிய அறிஞர்)விருப்பத்தின் விளைவாகும்.
நினைத்துக்கூட பார்க்க முடியாததைச் செய்யத் தஹிரியின் துணிவு — முக்காடு இல்லாமல் தன் ஆண் தோழர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அவரது அச்சமற்ற செயல் — தங்களின் பெண் சகாக்களைத் தங்களுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள விரும்பாத பலருக்கு இது ஒரு முரட்டுத்தனமான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.
முகத்திரையை அவிழ்த்துவிடுதல் என்னும் தாஹிரியின் செயல் எந்த மதக் கொள்கையையும் அவமதிப்பதற்கோ அல்லது எதிராகச் செல்வதற்கோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும், இது பாலின சமத்துவத்தை குறிக்கிறது மற்றும் பெண்கள் சுதந்திரமாக செயல்படலாம் மற்றும் தங்கள் சொந்த விருப்பங்களை மேற்கொள்ளலாம் என்னும் ஓர் அறிக்கையை வெளியிட இச்செயல் பயன்படுத்தப்பட்டது. பாரசீகத்தின் முதல் பெண் உரிமை ஆர்வலர், தஹிரி தமது தீவிர நம்பிக்கைகள் மற்றும் உறுதியான நம்பிக்கைகளுக்காக கழுத்தை நெரித்துத் கொல்லப்பட்டார். அவருடைய தீர்க்கதரிசனமான இறுதி வார்த்தைகள், “நீங்கள் விரும்பியவுடன் என்னைக் கொல்லலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் ஒருபோதும் தடுக்க முடியாது.”
விசித்திரமாக, பெடாஷ்ட்டில் தஹிரிஹ் துணிச்சலாக வெளியிடப்பட்டு சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை 1948-இல் பாரிஸில் கூடி, மனித உரிமைகளுக்கான புதிய உலகளாவிய பிரகடனத்தை இயற்றியது, அதில் கூறப்படுவதாவது: “எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகப் பிறக்கிறார்கள்.”

174 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 இல், பல அடக்குமுறைச் சட்டங்களைத் திணித்த ஈரானின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ், ஒரு சிங்கத்தின் இதயத்தைக் கொண்ட தாஹிரியைப் பெற்றெடுத்த தேசத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர். அடக்குமுறைக்கு உள்ளான ஈரானியப் பெண்களின் இதயங்களில் இன்று தாஹிரியின் நெருப்பு ஆவி மீண்டும் துளிர்விட்டதைப் போன்றே இருக்கிறது. ஹிஜாப்பை “முறையற்ற முறையில்” அணிந்ததற்காக செப்டம்பர் 16 அன்று 22 வயதான மஹ்சா அமினி மோசமான ஒழுக்கக் காவல்துறையின் கைகளில் கொல்லப்பட்டதைப் போல அவர்கள் கைது செய்யப்படவோ, அடிக்கப்படவோ அல்லது கொல்லப்படவோ கூடும் என்பதை அறிந்திருந்தும், அவர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்.
அவர்கள் சக்திவாய்ந்த முழக்கங்களை உச்சரிக்கிறார்கள், அதன் தாளம் உங்கள் ஆன்மாவை மின்மயமாக்கும், குறிப்பாக நீங்கள் ஃபார்ஸியில் நான் பேசுவது போல் பேசினால், “நதர்சின், நாதர்சின்! மா ஹாமே பஹாம் ஹஸ்திம்! (பயப்படாதே, பயப்படாதே! நாங்கள் இதில் ஒன்றாக இருக்கிறோம்!), ” அல்லது “ஜான், ஜென்டேகி, அசாதி! (பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்!).” சிலர், “மிகோஷம், மிகோஷம், ஹர் ஆங்கே கஹரம் கோஷ்ட்! (நான் கொல்வேன், கொல்வேன், என் சகோதரியைக் கொன்றவனை!)” என்ற போர் முழக்கங்கள் போலவும் ஒலிக்கின்றன.
பல ஈரானிய பெண்கள் சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் தங்கள் தலைமுடியை வெட்டுகிறார்கள், அவ்வாறு செய்யும்போது, அவர்கள் “பராயே ஆசாதி! (சுதந்திரத்திற்காக!)” என்று கூறுகிறார்கள். மஹ்சா அமினியின் கொலையால் தூண்டப்பட்ட நாடு தழுவிய வன்முறை போராட்டங்களின் வீடியோக்கள், பெண்கள் தங்கள் ஹிஜாப்களை தெருக்களில் எரிப்பதைக் காட்டுகின்றன — இது ஈரானில் பெண்களுக்குக் கட்டாய ஆடை. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பார்ப்பதில் அதன் சிறந்த அம்சம் என்னவென்றால், பெண்களுடன் சமமான எண்ணிக்கையிலான ஆண்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்.
ஈரானிய-பிரிட்டிஷ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான ஓமிட் ஜலிலி, வரலாற்றில் இந்த தருணத்தை “ஜார்ஜ் ஃபிலாய்ட் தருணம்” என அழைத்தார், இந்த எதிர்ப்புகள் பாலின-இன நிறவெறி நிலையில் மாற்றத்தை கொண்டு வர, ஒரு பெரிய விஷயத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறார். ஈரானிய-அமெரிக்க பத்திரிகையாளரான மாசிஹ் அலினெஜாத், மஹ்சாவைப் பற்றியும் அவரது கொலையின் விளைவுகள் குறித்தும் தொடர்ந்து ட்வீட்களை பதிவிட்டு வருகிறார், அதில் ஒன்று, “இது [ஐ.நா.] ஐ.நா.வில் இடம் பெற்றுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் கொடூரம். உலக அளவில் பெண்களின் உரிமைகளை கண்காணிக்கப்பட வேண்டும்.”

காவலரின் கைகளில் கொடும் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ள அச்சமில்லா போராட்டங்களும் இதுவையிலான எட்டு மரணங்களும் ஒரு புரட்சியின் ஆரம்பமாக இருக்கலாம், ஆனால் இவை இத்தகையவற்றில் முதலானவை அல்ல
ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி மஹ்சாவுக்கு ஏற்கனவே மருத்துவ பிரச்சினைகள் இருப்பதாக வெட்கமின்றி கூறினார், அதை மாஹ்சாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர், மேலும் மருத்துவ பரிசோதனைகள் மண்டை எலும்பு முறிவு மற்றும் மூளையில் உள் இரத்தப்போக்கு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. பொய்கள் வெள்ளம்பபோல் கொட்டுவது தெரிகிறது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்திருப்பது ஒரு தன்னார்வச் செயலாகவும், அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறினார்; மாறாக, அவர்கள் ஹிஜாப் அனிவதை தன்னார்வமாக செய்கின்றனர் எனக் கூறுகிறார். எதிர்ப்புகள் பெரிதாகி காட்டுத்தீ போல் பரவுகின்றதால், மக்கள் மற்றும் அவர்களின் குரல்களை முடக்குவதற்காக, ஈரான் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான அணுகலை தடை செய்துள்ளது.
அச்சமற்ற ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையின் கைகளில் வன்முறைத் தடியடிகள் மற்றும் இதுவரை எட்டு இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளன. இது ஒரு புரட்சியின் தொடக்கமாக இருக்கலாம், ஆனால் இது அத்தகைய ஒரு முதல் நிகழ்வு அல்ல. “தி கேர்ள்ஸ் ஆஃப் எங்கெலாப் ஸ்ட்ரீட்” என்பது ஈரானில் கட்டாய ஹிஜாபிற்கு எதிராக 2017 -ஆம் ஆண்டு விடா மோவாஹெட்டினால் தொடங்கப்பட்டது. அவர் ஒரு குச்சியின் நுனியில் அமைதியைக் குறிக்கும் தனது வெள்ளை ஹிஜாபைக் கட்டி, நெரிசலான தெருவில் ஒரு பயன்பாட்டு பெட்டியில் நின்றுகொண்டு அதை அசைத்தது ஒரு தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது. .
இந்த சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சியின் மனிதாபிமானமற்ற முறைகள், தேர்வு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டங்களை நசுக்க கையாண்டது, இனி வேலை செய்யாது என்று தெரிகிறது. ஈரானிய பெண்கள் சுதந்திரமாக இருக்க இறப்பதற்கும் தயாராக உள்ளனர் — ஹிஜாப் அணிவதைத் தேர்வு செய்யவோ தேர்வு செய்ய வேண்டாம் என்பதற்கான சுதந்திரம்.
இனத்தால் ஈரானியரான ஒரு வங்காளதேச பெண் குடிமகளாக, மதத்தின் பெயரால் பெண்களைத் துன்புறுத்துபவர்களை நான் கண்டிக்கிறேன், மேலும் #MahsaAmini கொலைக்கு எதிராகப் போராடுபவர்களுடன் நான் ஒற்றுமையாக இருப்பேன்.
கட்டுரையின் ஆக்குனரான நூரா ஷம்சி பஹர் ஓர் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மற்றும் வடக்கு தெற்கு பல்கலைக்கழகத்தில் (NSU) ஆங்கிலம் மற்றும் நவீன மொழிகள் துறையில் மூத்த விரிவுரையாளர் ஆவார்.