

13 அக்டோபர் 2022
ஆம்ஸ்டர்டாம், (BWNS) – உலகம் முழுவதிலும் உள்ள பல சமூகங்களைப் போலவே, 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில், தேசிய அடையாளம், இடம்பெயர்வு மற்றும் தப்பெண்ணம் பற்றிய கேள்விகள் நெதர்லாந்திலும் பொது நனவுணர்விலும் உந்தப்பட்டன. இது அமெரிக்காவில் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டது.
அப்போதிருந்து, டச்சு பஹாய் வெளிவிவகார அலுவலகம், இன ஒற்றுமை பற்றிய உரையாடலுக்கு பங்களிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிக சமுதாய ஒருங்கிணைவை பேணக்கூடிய வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பஹாய் கொள்கை போன்ற ஆன்மீகக் கருத்துகளை ஆராயும் கலந்துரையாடல் அரங்குகளை நடத்தி வருகிறது.
இந்த உரையாடல்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என அந்த அலுவலகத்தின் ஷெரீன் டெவிட் விளக்குகிறார்: “குறிப்பாக இப்போது நெதர்லாந்து உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக மாறி வரும் நிலையில் டச்சு என்றால் என்ன என்று பலர் கேட்கிறார்கள்.”
வெளிவிவகார அலுவலகம், பிரச்சினைகளை ஆழமாக ஆராய, உரையாடல்கள் அடையாளம் பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு சவாலிட வேண்டும் என கண்டறிந்துள்ளது.
“இந்தக் கலந்துரையாடல்கள், மக்கள் ‘ஒருங்கிணைப்பு’ பற்றி அடிக்கடி பேசுவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆனால் நடைமுறையில், எதிர்பார்ப்பானது ‘ஒருங்கிணைத்தல்’ குறித்ததாகும் என திருமதி டெவிட் கூறுகிறார்.
“தனிநபர்களுக்கு ஒரு தனி அடையாளம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், இந்த அனுமானம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். மேலும், அந்த அடையாளம் அவர்களின் தேசியம் அல்லது கலாச்சாரத்திற்கு ஒத்ததாக இருக்கும்,” என அவர் தொடர்கிறார், “ஆனால், மனிதர்கள் ஆன்மீக ஜீவன்களாகக் காணப்படுகின்ற, நம்மைப் பற்றிய ஓரு வித்தியாசமான கருத்தை ஏற்றுக்கொண்டோமானால் ஒருவர் எப்படி டச்சுக் குடிமகனாகவும், உலகக் குடிமகனாகவும் இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்வது இயன்றதாகிடும்.
பல்வகைமையில் ஒற்றுமை என்னும் ஆன்மீகக் கொள்கையை மக்கள் மதித்துணரும்போது, அவர்கள் தங்கள் சமூகத்தில் முன்வைக்கப்படும் செழுமையான பன்முகத்தன்மைக்குப் பெரிதும் மதிப்பளித்திட முடிகிறது.
“இது எங்கள் சிறிய நாடான நெதர்லாந்தைப் பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துடனான நமது உறவுகள் அனைத்தையும் நாம் பார்க்க வேண்டும்” என திருமதி டெவிட் கூறுகிறார்.
அலுவலகத்தின் உரையாடல்கள் சிறப்பித்துக் காட்டுவது என்னவெனில், அடையாளம் குறித்த பரந்த கருத்தாக்கமானது ஒருமைப்பாடு குறித்த கொள்கையின் ஒப்புதலுடன் இணைக்கப்படும்போது, மனிதக் குடும்பத்தில் ஒரு அங்கத்தவராகத் தங்களின் சொந்த அடையாளமே மற்ற அடையாளங்கள் மற்றும் சங்கங்கதங்களை விட முதன்மை பெறுவதை மக்கள் காண முடிகிறது.
“நாம் ஏதோ பெரிய ஒன்றின் ஒரு பகுதியினாராக இருப்பதைப் பார்த்திடக் கற்றுக்கொள்கிறோம். ‘நாம் அல்லது அவர்கள்’ என்னும் சிந்தனையை நம்மால் வெல்ல முடிகிறது. இது சமூக கட்டமைப்புகள், ஆளுகை மற்றும் கொள்கை உருவாக்குதல் செயல்முறைகள் மற்றும் ஒரு சமூகமாக இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நீதி போன்ற பரவலான பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதற்கான ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.
“மனிதகுலத்தின் மீதான அன்பு என்பது தப்பெண்ணங்களை படிப்படியாகக் கரைத்து, தனிப்பட்ட குடிமக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1620/