BIC NEW YORK, 19 அக்டோபர் 2022, (BWNS) – மனிதகுல ஒருமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு பகிரப்ப்பட்ட அடையாளம் குறித்த தொலைநோக்கின் தேவை ஐ.நா. பொது சபையின் 77-வது அமர்வின் உயர்மட்ட வாரத்தின் பல சந்திப்புகளின் போது பஹாய் அனைத்துலக சமூகத்தின் நியூ யார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டது.
ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கூட்டிய ஒரு கருத்தரங்கில், BIC பிரதிநிதியான டேனியல் பேர்ரல், “மனிதக் குடும்பம் ஒன்று என்பது மையக் கொள்கையாக இருக்க வேண்டும்: நமது பகிரப்பட்ட மானிடத்தன்மையுடன் ஒப்பிடும் போது, நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய எண்ணற்ற பண்புக்கூறுகள் இறுதியில் அதற்கு இரண்டாம் பட்சமானவைவே.”

மேலும் படங்களைப் பார்க்க: https://news.bahai.org/story/1621/slideshow/1/
தேசிய அல்லது இன, மத மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த பிரகடனத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மூத்த ஐ.நா அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை இந்த மன்றம் ஒன்றிணைத்தது.
உ.லக நீதிமன்றத்தின் ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, திரு. பெர்ரெல் மேலும் கூறியதாவது: “அனைத்து மக்கள் மீதும் அன்பு காட்டுவதன் மூலமும், மனிதகுலத்தின் சிறந்த நலன்களுடன் ஒப்பிடுகையில் தாழ்வான விசுவாசங்களை அவற்றுக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலமும், உலகின் ஒருமைத்தன்மை உணரப்பட முடியும், மற்றும் மனிதப் பன்முகத்தன்மையின் எல்லையற்ற வெளிப்பாடுகள் அவற்றின் மிக உயர்ந்த நிறைவைக் காணக்கூடும்” பஹாய் போதனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி–ஒற்றுமை என்பது சீர்மையிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பன்முகத்தன்மை குறித்த ஓர் இன்றியமையா கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்னும் உண்மையை அந்தச் செய்தி எடுத்துக்காட்டுகிறது.
2024-ஆம் ஆண்டின் `எதிர்கால உச்சமாநாடு` குறித்த ஏற்பாடுகளுக்கான மற்றொரு கூட்டத்தில் ஒற்றுமைக் கோட்பாட்டின் தாத்பர்யங்கள் மேலும் ஆராயப்பட்டன. இக்கூட்டம் பி.ஐ.சி எடுத்து நடத்தியதும் ஸ்டிம்சன் மையத்தின் இணை அனுசரணையுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சமகால சவால்களை எதிர்கொள்வதில் அனைத்துலக அமைப்புகளின் பங்கு குறித்து பிரதிபலிப்பதற்கு நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பாளர்களுக்கு அழைப்புவிடுத்தனர்.
உலகளாவிய சமாதானத்தை நோக்கிய மனிதகுலத்தின் நகர்வு தொடர்பான கருப்பொருள்களை ஆராயும் “ஒரு பொருத்தமான ஆளுகை: மனிதகுலமும் ஒரு நியாயமான உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதையும்” என்னும் தலைப்பில் பி.ஐ.சி-யின் அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பல கருத்துக்கள் குறித்து விவாதங்கள் விரிவடைந்தன.
இந்த இயக்கத்தின் ஓர் இன்றியமையா அம்சம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த விழிப்புணர்வாகும் என அந்த ஆவணம் குறிப்பிடுகிறது—பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஐ.நா.வுக்கு செய்யப்படக்கூடிய சீர்திருத்தங்களை ஆராய்வதற்காக பி.ஐ.சி.யின் நியூ யோர்க் அலுவலகம் நடத்திய மற்றொரு நிகழ்வில் இது கலந்துரையாடலின் தலைப்பாக இருந்தது.
இந்த நிகழ்வில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் ஸ்லோவேனியாவின் முன்னாள் தலைவரும் `கிளப் டெ மாட்ரிட்டின்` தலைவருமான டேனிலோ துர்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தக் கலந்துரையாடலில், பி.ஐ.சி பிரதிநிதிகள் பெருந்தொற்றானது எவ்வாறு சமுதாயங்களின் தலைமைத்துவத்தில் பெண்களின் தவிர்க்கவியலா பங்கை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும், தலைமைத்துவத்தின் மாதிரிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்னிலைப்படுத்தினர். சமூகத்தின் எந்த மட்டத்திலும் தலைமைக்குப் பெண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கிய பல நாடுகளில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறுகிய கால குறிகாட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்திரத்தன்மை காணப்படுகிறது என பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
ஐ.நா. சீர்திருத்தங்கள், குறிப்பாக முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் முழுப் பங்களிப்பை செயல்படுத்துவதற்குத் தற்போதைய கட்டமைப்புகளை மறுவடிவமைக்க வேண்டும் என பி.ஐ.சி பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இந்தக் கலந்துரையாடல்களின் பதிவுகள் சில இங்கு, இங்கு, மற்றும் இங்கு காணப்படும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1621/