

ஷார்ம் எல்-ஷேய்க், எகிப்து, 24 நவம்பர் 2022, (BWNS) – COP27 தற்போது முடிவடைந்துள்ள பருவநிலை உச்சமாநாட்டின் விவாதங்களுக்கான அவர்களின் பங்களிப்புகளில், பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) பிரதிநிதிகள் ஒரு முக்கிய யோசனையை வலியுறுத்தியுள்ளனர். அதாவது, மனிதகுலம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பருவநிலை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால், உலக நாடுகள் சமூகத்திற்கும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்யும் அத்தியாவசிய வழிகாட்டும் கொள்கைகளில் ஒருமித்த கருத்தை அடைய வேண்டும்.
“இயற்கை உலகமானது சகவாழ்வு மற்றும் ஒன்றுடன் ஒன்று சார்ந்திருப்பதன் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான நுண்ணறிவை வழங்குகிறது” என BIC-யின் கெய்ரோ அலுவலகத்தின் பிரதிநிதியான ஹடெம் எல்-ஹேடி, “மக்கள் மற்றும் பூமிக்கு இடையேயான சகவாழ்வு” என்னும் தலைப்பிலான நிகழ்ச்சியில் கூறினார்.
திரு. எல்-ஹேடி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்த முன்னேற்றத்தின் பின்னணியில் உள்ள உயிரூட்டும் சக்தி மனிதகுலத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும் எனவும் விளக்கினார்.
BIC-யின் நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர், இந்த யோசனையை விரிவாகக் கூறினார்: “நாம் ஒன்றாகக் கலந்தாலோசிக்கவும் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் முடியாவிட்டால், சகவாழ்வு மற்றும் உலகத்துடன் இணக்கமாக வாழ்வது பற்றி பேச முடியாது. பலவிதமான கண்ணோட்டங்களில் யதார்த்தத்தைப் பார்க்கவும், மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் அனுபவங்களால் மேம்படுத்தப்படும் நமது சொந்த சிந்தனைக்கு திறந்திருக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மிஸ். ரமேஷ்ஃபர், உண்மையை ஆராய்வதற்கான ஒரு வழிமுறையாக கலந்தாலோசனையை அணுகும் போது, பலதரப்பட்ட பின்னணிகளைச் சார்ந்தவர்கள் விரோதப் போக்குகளைத் தவிர்க்கவும், வேறுபாடுகளைக் கடந்து, கண்ணோட்டங்களை இணக்கப்படுத்தவும் முடியும் என எடுத்துக்காட்டினார்.
“இந்த வழியில் ஆலோசனை செய்யும் திறனும், தற்போது மானிடம் எங்குள்ளது என்பதை உண்மையில் புரிந்துகொள்வதும், மானிடம் தன்னோடும் சுற்றுச்சூழலுடனும் அமைதியான ஒரு முதிர்ந்த சமுதாயத்தை நோக்கி நகர்வதற்கு அவசியம்” என அவர் கூறினார்.
இரண்டு வார ஐ.நா. மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள் மற்றும் 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், ஏராளமான சிவில் சமூக அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், வணிகங்கள், காலநிலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட, காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய முயற்சிகள் மீது கவனம் செலுத்திட ஆய்வு நடத்தப்பட்டது. .
மாநாட்டிற்கான BIC தூதுக்குழுவுடன் BIC நியூயார்க் அலுவலகத்தைச் சேர்ந்த பானி டுகால் மற்றும் டேனியல் பெரல், கென்யாவைச் சேர்ந்த பீட்டர் அபூரி மற்றும் லாரா முசோனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இயன் ஹாமில்டன் ஆகியோருடன் திரு. எல்-ஹேடி மற்றும் மிஸ் ரமேஷ்ஃபர் ஆகியோர் இணைந்துகொண்டனர்.
COP27-யில் BIC-யின் பங்கேற்பு பற்றிய காட்சிகளைக் காண news.bahai.org ஐப் பார்வையிடவும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1627/